ரமழான்… அது மாற்றத்திற்கான பாதை!!!

            நபியின் தோழர்களான ஸபாபாக்கள் அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொண்டதாக அல்குர்ஆனில் சான்றுபகர்கின்றான். அவர்களின் தன்மைகளைஇ சிறு சிறு பண்புகளில் இருந்து பெண்ணம் பெறும் பண்புகள் வரை தனித்தனியேஅல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களைப் பின்பற்றியவர்கள் சுவனவாதிகள் என்றும்இ அவர்களின் ஈமானைப் போன்றேஇஅவர்களின் தியாகங்களைப் போன்றே ஒவ்வொரு முஸ்லிமின் ஈமானும்இ தியாகமும் இருக்க வேண்டும் என்றும் அல்குர்ஆனில்அல்லாஹ் புகழாரம் சூட்டி மகிழ்கின்றான். அவர்கள் தொட்டதை எல்லாம் அல்லாஹ் துலங்கச் செய்தான். அவர்களின் காலடி பட்ட இடங்களிலெல்லாம் இஸ்லாம்இஈமான் எனும் சுடரால் இலங்கச் செய்தான். அவர்கள் யார்? அவர்களின் சொல்லில் இஸ்லாம் இருந்ததுஇ அவர்களின் செயலில் இக்லாஸ் இருந்ததுஇ அவர்களின்இதயத்தில் இறைபயம்இ அவர்களின் சிந்தனையில் இறை நினைவு நிரம்பியிருந்தது. அவர்களின் இறைநம்பிக்கையில் ஷிர்க்இ குஃப்ர்இ நிஃபாக் – இணைஇ நிராகரிப்புஇ நயவஞ்சகம் இருக்கவில்லைஇ அவர்களின்தியாகத்தில் கிப்ர் – பெருமை இருக்கவில்லைஇ அவர்களின் ஈகையில் ரியா – முகஸ்துதி இருக்கவில்லைஇ அவர்களின் வணக்கஇவழிபாடுகளில் ஃகஃப்லத் – அலட்சியம்இ உஜுப் – தற்பெருமை இருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் ஆசையாக சுவனம் இருந்தது. அவர்கள் அஞ்சி நடுங்கும் இடமாக மண்ணறையும்இநரகமும் இருந்தது. அல்லாஹ்வும்இ அல்லாஹ்வின் தூதரும் {ஸல்} அவர்களும் ஒன்றைச் செய்யுமாறு கட்டளையிட்டால் மறுப்பேதுமின்றிஉடனடியாக செய்தார்கள். அல்லாஹ்வும்இ அல்லாஹ்வின் தூதரும் ஒன்றைச் செய்யக்கூடாது என்று ஆணையிட்டால் ஏன்? எதற்கு? எப்படி? என்கிறஎவ்வித கேள்வியுமின்றி அக்கணமே அக்காரியத்தில் இருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டார்கள். இத்தகைய உயர் நிலைகளையும்இ பண்பாடுகளையும் அவர்கள் கொண்டிருக்க அடிப்படைக்காரணமாய் அமைந்ததுஅவர்களின் ஈமான் – இறைநம்பிக்கைக்குப் பின்னால் இறையச்சமும்இ முழுக்கஇ முழுக்க இறைவனுக்கும்இ இறைத்தூதருக்கும்கட்டுப்படுதல் என்கிற அம்சமும் தான். இறையச்சத்தையும்இ இறைவனுக்கும்இ இறைத்தூதருக்கும் கட்டுப்படுதல் என்கிற இந்த அம்சத்தையும் அவர்களுக்குரமழானின் மூலமாகவே கற்றுக் கொண்டார்கள் என்றால் அது மிகையல்ல. ரமழானில்…

ஸ்டெர்லைட் ஆலையின் வேறொரு வடிவம்.

  தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலை தமிழர்களின் சாபத்திற்கு இன்று ஆளாகியுள்ளது.   அந்த ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை ஒட்டுமொத்த தமிழகமும்…

வஹப் இப்னு முனப்பஹ் (ரலி) கூறுகிறார்கள்:

  பனு இஸ்ராயீல் சமூகத்தில் ஒரு ஆபித் (இறை தியானத்தில் மூழ்கியவர்) வாழ்ந்து வந்தார்.  அவரது காலத்தில் அவரை விட இறைபக்தியில் ஆழ்ந்தவர் வேறு யாருமில்லை எனலாம். …

குணங்குடியார் (குறுங்கதை)

குவலயம் போற்றும் குணங்குடியார் “பேரரசனும் பரிசுத்தமானவனும் (யாவற்றையும்) மிகைத்தவனும் ஞானமுள்ளவனுமான, அல்லாஹ்வை வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் தஸ்பீஹ் செய்கின்றன.” (அல்குர்ஆன் 62:1) இத்தகு மேன்மை பொருந்திய அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.…

நம்பினால் நம்புங்கள் !

தயிராக மாற்ற முடியாத ஒரே பால் –  *ஒட்டகப்பால்*. ஒட்டகத்தை விட, அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – *கங்காரு எலி*. துருவக்…

தஃவா பணியில் தர்ஹாக்கள்

முஸ்லிம் சமூகத்தில் பொதுவாக தர்ஹாக்களை பற்றிய ஒரு அதிருப்தி உண்டு பண்ணப்பட்டிருக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால்? இஸ்லாமிய தஃவா எனும் பிரச்சாரக் களத்தில் பங்காற்றுவதாக கூறிக் கொள்பவர்களே…