பயனாளர்களுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
நம் இணையத்தின் அனைத்துப் பயனாளர்களுக்கும் ஆசிரியரின் கணிவான முகமன்:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
தாங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் இறையருளும் ஏற்படட்டும்!
அஹ்லுஸ் சுன்னா இணைய சேவைக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். பின்வரும் பயனாளர் ஒப்பந்தத்தை தாங்கள் அனைவரும் அறிந்திருப்பது அவசியம் என்பதால் இதைப் பதிவிடுகிறோம். நம் இணையப் பயனாளர்கள் அனைவரும் இந்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்த பின்னரே பயனாளர் ஆகிறார்கள்.
பயனாளர் ஒப்பந்தம்:-
- இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் in இணைய உரிமையாளர் மற்றும் பயனாளாகள் இடையேயான ஒரு சட்டபூர்வமான ஒப்பந்தமாக அமைகிறது. இந்த விதிமுறைகளில் “நீங்கள்” என்பது ahlussunnah.in இணையப் பயனாளர்களையே குறிக்கும்.
- இந்த விதிமுறைகள், நிபந்தனைகள், கொள்கைகள், வழிமுறைகள் மற்றும் குறிப்புதவிகள் மூலம் பயனாளர்களாகிய உங்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதும் உருவாக்குவதுமே இந்த தளத்தின் நோக்கமாகும். ahlussunnah.in இணையத்தில் வெளியாகும் உள்ளடக்கங்கள் அனைத்தும் எல்லாகாலங்களிலும் ஆசிரியரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என்பதை ஒப்புககொள்ள வேண்டும். ahlussunnah.in இணையப் பயனாளர்கள் தெரிந்துகொள்வதென்னவென்றால், இதன் துணை அல்லது கூட்டு நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி அஹ்லுஸ் சுன்னாவின் விதிமுறைகளை மாற்றக் கூடாது.
- இந்த தளத்தைப் பயன்படுத்துவதின் மூலம் உங்கள் பிரதிநிதித்துவத்தையும், நீங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் சட்டப்படி இந்த விதிமுறைகளை ஏற்றுக் கொள்ள முடியும் என்ற உத்திரவாதத்தைத் தருகிறீர்கள். நீங்கள் மற்ற நிறுவனத்தின் மூலமாக இத்தளத்தைப் பயன்படுத்துபவராகயிருந்தால் அந்நிறுவனத்தின் சார்பாக ஏற்படும் அத்துமீறல்கள் மற்றும் இழப்பீடுகளுக்கான அங்கீகாரம் மற்றும் உத்திரவாதத்திற்கு உட்பட்டவர்களாவீர்கள்.
Mass Media Power #2/1, Judge Paramasivam Street, Perambur, Chennai- 600011. என்ற முகவரியில் இயங்கிவரும் Mass Media Power என்ற நிறுவனத்தின் பல்முனை சேவைகளில் ஒன்றாக ahlussunnah.in என்ற இணையசேவையும் அடங்கும். எனவே அஹ்லுஸ் சுன்னா இணையத்தின் அத்துனை செயல்பாடுகளும் மாஸ் மீடியா பவர் என்ற நிறுவனத்தையே சாரும்.
ahlussunnah.in இணையம் – நூல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் ஆடியோ, வீடியோ, உரை, படங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது. சில சமயங்களில் மூன்றாவது நபரின் பயன்பாட்டிலுள்ள உள்ளடக்கங்கள் அஹ்லுஸ் சுன்னாவின் பயன்பாட்டுக்கு சம்பந்தப்பட்டதாக தேவைப்படுமானால் ahlussunnah.in இணைய சேவையின் அனுமதியுடன் உங்களின் பயன்பாட்டு உள்ளடக்கங்களில் சேர்க்கப்படும்.
மாற்றங்கள்:- இந்த ஒப்பந்த விதிமுறைகளை மாற்ற/திருத்தயமைக்க அல்லது ஏதாவது சேர்க்க உரிமையிருந்தாலும் இத்தளபதிவுகள், அலைவரிசை அல்லது சேவையை எந்த நேரத்திலும் எல்லைமீறாமல் மாற்றுதல், திருத்தியமைத்தல், தற்காலிகமாக நீக்குதல், இடைநிறுத்தம் செய்தல், உள்ளடக்கங்கள் தயாரிப்பு மற்றும் சேவையை மாற்றயமைத்தல் போன்றவை அறிவிப்பின்றி செய்யப்பட மாட்டாது. இத்தகைய மாற்றங்களுக்குப் பிறகும் நீங்கள் தொடர்ந்து இத்தளத்தைப் பயன்படுத்தினால் இந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படுவீர்கள்.
பதிவு:- உங்கள் தள பயன்பாட்டை கருத்தில் கொண்டு நீங்கள் ஒப்புக் கொள்வதாவது;
- இந்த தளத்தில் உள்ள படிவத்தில் உங்களைப் பற்றிய மிகச்சரியான, முழுமையான நடப்பு விவரங்களைத் தரவேண்டும்.
- நிறுவனத்திற்கு தங்களைப்பற்றின சரியான நடப்பு விவரங்களை தொடர்ந்து தரும் பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
- உங்களுடைய (Username&Password) பயனர்பெயர் & கடவுச்சொல்லைப் பாதுகாப்பாகவும், இரகசியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
- உங்கள் கணக்கு (Account) சம்மந்தமாக ஏற்படும் எல்லா செயல்களுக்கும் நீங்களே பொறுப்பேற்றுக்கொள்கிறீர்கள்.
- நிறுவனத்திற்கு நீங்கள் அளிக்கும் பதிவு விவரங்கள் மற்றும் பிற தகவல்களுக்கு அங்கீகரிக்கப்படாத வைரஸ்களால் ஏற்படும் அபாயத்திற்கு பொறுப்பேற்கிறீர்கள்.
4. சந்தா சேவைகள்:-
- இந்த சேவையானது ஆண்டு சந்தாதாரர், மூன்றாண்டு சந்தாதாரர் மற்றும் ஆயுள் சந்தாதாரர் ஆகிய சந்தாதாரர்களுக்கான அடிப்படையிலானது. சந்தாதாரர்கள் சந்தா தொகையை ahlussunnah.in வலைதளத்தில் வெளியிடப்பட்ட விகிதத்தின் படி கடன் அட்டை-Credit Card, பற்று அட்டை-Debit Card, நெட்பேங்கிங் மூலம் முன்கூட்டியே செலுத்திவிட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை முன்னறிவிப்பின்றி அவ்வபோது மாற்றும் அதிகாரம் ஆசிரியருக்கு உண்டு.
- நீங்கள் நம் இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள பதிவு படிவத்தில் உங்கள் பெயர், முகவரி, தொலை/அலைபேசி மின்னஞ்சல் குறியீடு, பயனர்பெயர் -Username மற்றும் கடவுச்சொல்-Password ஆகியவற்றை முழுமையாக பூர்த்தி செய்வதோடு ஆயுள் திட்டம், மூன்றாண்டு திட்டம், வருடாந்திரத் திட்டம் ஆகிய திட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்து சந்தா செலுத்த வேண்டும். இவற்றை முறையே சரிபார்த்து நாங்கள் உறுதி செய்தபின்னர் நீங்கள் சந்தாதாரராக இயங்க அனுமதியளிக்கப்படுவீர்கள். நாங்கள் உங்களை சந்தாதாரராக இணைத்துக் கொண்ட பிறகு உங்களுடைய பயனர்பெயர்-Username கடவுச்சொல்-Password பயன்படுத்தி இணையத்தினுள் நுழைந்து தாங்கள் விரும்பும் மாதப் பிரதிகளை விருப்பம் போல் எதை வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்புகளை / இதழ்களை தனிநபருக்கோ அல்லது மற்ற பொது ஊடகங்களுக்கோ அல்லது சமூக வலைதளங்களுக்கோ அனுப்புவதும் பகிர்வர்தும் கூடாது. மீறினால் பயனாளர் உரிமம் ரத்து செய்யப்படும்.
- மேலும் சந்தாதாரர் இந்த மென் பொருள் பயன்பாட்டைத் தவறாக பயன்படுத்தவோ, நகலெடுக்கவோ, முற்றிலும் மாற்றி அமைக்கவோ, மற்றவர்களுடன் பகிரவோ, விருப்பத்திற்கேற்ப உள்ளீடுகளை சீராக்குவதோ, மாற்றுவதோ, புதிதாக ரகசிய குறியீடுகளை உருவாக்குவதோ, விற்கவோ, உரிமம் மாற்றம் செய்யவோ, இணக்க உரிமம் அளிக்கவோ, அங்கீகரிக்கப்படாத அணுகல் பெறவோ கூடாது. அவ்வாறே தளத்தின் அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குக் கட்டுப் படுகிறேன் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.
- இத்தளத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து ஆக்கங்கள், உரை, மென்பொருள், புகைப்படங்கள், காணொளி, வரைகலை (கிராபிக்ஸ்) இசை மற்றும் ஒலி அனைத்தும் இந்திய பதிப்புரிமை சட்டங்களால் பாதுகாக்கப்படுகிறது. தணிப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே சந்தாதாரர் இத்தளத்தை அணுக மற்றும் பயன்படுத்த வேண்டும்.
- காணொளிகள் தகவல் பரிமாற்றத்திற்கான நோக்கத்திற்காக மட்டுமே ahlussunnah.in இணையத்தில் வழங்கப்படுகிறது, துல்லியமான, முழுமையான, தகவல் பரிமாற்ற சார்பு தன்மை காணொளிக்கு ahlussunnah.in பிரதிநிதித்துவம் அல்லது உத்திரவாதம் தராது. இத்தளத்தில் வழங்கப்படும் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் ஆசோசனை பிழைகள் அல்லது தகவல்கள் தவிர்க்கப்படுதல் போன்றவற்றிற்கு ahlussunnah.in பொறுப்பேற்காது.
- இவ்விணையத்திலுள்ள சேவை சந்தாரர்ககள் கட்டணம் செலத்திய நாள் முதல் அவர்களின் சந்தா காலம் நிறைவடையும் வரை ahlussunnah.in சேவை வழங்கப்படும், தவிர்க்க முடியாத காரணங்களால் ahlussunnah.in இணையதள சேவையில் விலக்கு அல்லது நிறுத்தம் ஏற்பட நேர்ந்தால் சந்தாதாரர்களுக்கு சந்தா காலம் நிறைவடையாமல் இருந்தால் தங்களின் சந்தா தொகையானது தங்களின் பயன்பாடு போக, மீதமுள்ள சந்தா காலம் மற்றும் இணையதள நிறுத்தம் காலத்திற்கு உட்பட்ட காலத்திற்கான தொகையை வழங்க கடமைப்பட்டுள்ளோம். இச்சட்டம் ஆயுள் சந்தாதாரர்களுக்கு பொருந்தாது.
- இவ்விணையத்தின் சந்தாதாரர்கள் இணைய தளத்தைப் பயன்படுத்தாமலிருந்தாலோ அல்லது இத்தளத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு முரண்பாடாக நடப்பதாக உணர்ந்தாலோ ahlussunnah.in சம்பந்தப்பட்ட சந்தாதாரருக்கான சேவையை நிறுத்திவிடும்.
- சந்தாதாரர்கள் செலுத்திய கட்டணங்கள் இவ்விணையத்திலுள்ள PDF கோப்புகளைப் பார்க்க, பதிவிறக்கம் செய்ய மட்டுமே தங்களின் கட்டணங்களை செலுத்துகிறார்கள். அது தவிர்த்து மற்ற உபயங்கள், பதிவுகள் யாவும் முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது.
கட்டணம் மற்றும் பணம் மீளப்பெறலுக்குப் பொறுப்பேற்காமை:-
ahlussunnah.in சந்தா பயனாளர் வெளிப்படையாக தயக்கமின்றி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு மேலும் ஒத்துக் கொள்வதென்னவென்றால் நீங்கள் பணப் பரிவர்த்தனைக்காக இத்தளத்தில் பயன்படுத்தும் கடன் அட்டை/வேறு ஏதாவது அட்டை பயன்படுத்தி இணைய வங்கி மூலம் உங்கள் கணக்கிலிருந்து தவறுதலாக செலுத்தப்பட்டிருந்தால் கடன் அட்டை / பிற அட்டை / இணைய வங்கி / நீங்களோ / உங்கள் சார்பில் எந்த வங்கியோ / நிதி நிறுவனம் அல்லது நீதிமன்றம் / தீர்ப்பாளரை அணுகி பணத்தைத் திரும்ப கேட்டு விவாதம் / பிரச்சனை செய்வதோ கூடாது.
நீங்களே உங்கள் கடன் அட்டை / மற்ற அட்டை / இணைய வங்கி சேவை கடவுச்சொல் அல்லது அணுகுமுறைக்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். உங்களுக்கு நீங்கள் செலுத்திய தொகையை திரும்ப கேட்பதற்கு உரிமையில்லையென்றும், இது ஒரு “பொருள்சார் நிபந்தனை” என்பதையும் புரிந்து கொள்வதும், வெளிப்படையாக ஒத்துக்கொள்வதும் நீதிமன்றம் செல்வது, ஏதாவது வங்கி, நிதிநிறுவனம், இணையதள சேவை மையம், நீதிமன்றம், தீர்ப்பாயம், குறைதீர்ப்பாளர் இன்னும் பிறவற்றை அணுகுவது போன்ற தேவையில்லா விவாதம் மற்றும் சாவால்களை தவிர்க்கும்.
பதிப்புரிமை மற்றும் வணிகச் சின்னங்கள்:-
ahlussunnah.in இணையதளத்திற்கு சொந்தமான முதன்மை, துணை மற்றும் கூட்டு தொடர்புள்ள பதிப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை மற்றும் இத்தளத்தில் இடம்பெறும் வரம்பு மீறா உரை, கேட்பொலி, காணொளி, வரைகலைப்படங்கள், விளம்பர உரிமைகள் மற்றும் சின்னங்கள் அனைத்து இந்திய சட்டத்தால் அனுமதிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. வரம்பு மீறல்கள் சட்டத்தின் முழு அனுமதியுடன் வன்மையாகக் கண்டிக்கப்படும்.
உரிமம் மாற்றம்:- உரிமம் அல்லது துணைஉரிமம் மற்றும் கடமைகளை எக்காரணம் கொண்டும் பிறருக்கு விட்டுக்கொடுக்கலாகாது. உதாரணமாக; உங்களுடைய பயனர்பெயர்-Username கடவுச்சொல்-Password போன்றவற்றை பிறக்கு கொடுப்பதாகும். இவ்வாறு செய்வதை நாங்கள் உறுதி செய்யும்போது பயனாளர் உரிமத்தை ரத்து செய்வதோடு சட்டப்பூர்வமாக நடவடிக்கையும் எடுக்கப்படும்.
மூன்றாம் தரப்பு மூலதனம்:- நீங்கள், மூன்றாவது தரப்பினரால் விளம்பரத்துக்காக சமர்ப்பிக்கப்படும் விசயங்கள் (அ) பொருட்களைக் காண்பீர்கள். தனிநபர் விளம்பரதாரர், இணக்கமாக சம்பந்தப்பட்ட சட்டத்தை உறுதி செய்து எங்களிடம் ஒப்படைக்கும் விளம்பரங்களும், அதில் இடம்பெறும் தகவல் மற்றும் பொருளடக்கத்திற்கும் அந்நபரே முழுப்பொறுப்பையும் ஏற்கிறார். விளம்பரங்களில் இடம்பெறும் பிழைகள், அளவில்லாத, துல்லியமில்லாத, தவறுகள், தவிர்க்கப்படுதல் போன்ற தகவல் மற்றும் பொருளடக்கத்திற்கு ahlussunnah.in பொறுப்பேற்காது.
தகவல் பாதுகாப்பு:- இணையதளத்தின் மூலம் எங்களால் சேகரிக்கப்பட்ட எல்லா பயனாளர்களின் தகவல்களும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும். யாரிடமும் பகிரவோ, பரிமாற்றம் செய்யவோ, விற்கவோ அல்லது சம்பந்தமில்லாத மூன்றாம் நபர்களிடம் வெளியிடப்படவோ மாட்டாது. இத்தகவல்கள் எப்போதாவது நம்முடைய சேவை சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு வணிக மற்றும் அலைவரிசை (சேனல்) பங்குதாரர்களால் பயன்படுத்தப்படலாம். எந்த தகவலும் மூன்றாம் நபர்களுக்கு உங்களின் அனுமதியின்றி தெரியப்படுத்தப்படாது.
குக்கீகளின் (விரைவி) பயன்பாடு:- எங்களின் வலைதளம் குக்கீகளைப் பயன்படுத்துவதின் நோக்கம் என்னவென்றால் எங்கள் வலைதளம் மற்றும் அதன் சேவையை பயனாளர் அணுகும்போது தளப்பயன்பாட்டை கண்காணிப்பதற்காகவே. குக்கிகள் உங்கள் பயனர்பெயர்-Username கடவுச்சொல்-Password போன்ற தகவல்களைக் கொண்டிருக்கின்றன. எங்கள் தளத்தில் எந்த பக்கம் அதிகமாக பயனாளர்கள் பயன்படுத்துகிறார்கள் எனபதை புரிந்து கொண்டு வலைதள அனுபவத்தை மேமபடுத்துவதற்காகவே எங்கள் தளத்தில் குக்கீகளை நாங்கள பயன்படுத்துகிறோம். குக்கீகள் உங்கள் கணிணியின் தகவல்களைப் பாதிக்காது பாதிக்கவும் முடியாது மற்றும் நீங்கள் பார்வையிட பிற தளங்களைப் பற்றிய தகவல்களை வழங்கவும் முடியாது.
ரத்து கொள்கை:- ஒரு முறை செலுத்தப்பட்ட சந்தா பணம்/நன்கொடை/விளம்பரக் கட்டணங்கள் திரும்ப தரப்படமாட்டாது.
பொறுப்பாகாமை:- இத்தளத்தில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் பொதுத்தகவல் அல்லது பயன்பாட்டுக்கு மட்டுமே. அவைகள் எந்த ஆலோசனையும் வழங்குவதில்லை அதனால் அதை சார்ந்தோ அல்லது சார்ந்திருப்பதைத் தவிர்த்தோ எந்த முடிவும் வேண்டாம். தனிப்பட்ட ஆலோசனை அல்லது இத்தளத்தின் ஏதாவது பகுதியைப் பற்றின கேள்விகளுக்கான பதில்கள் எல்லாம் தனிப்பட்ட வல்லுநர்கள், நபர்கள், நிபுணர்களுடையதே அவைகள் இத்தளத்தைச் சார்ந்ததல்ல. இத்தளத்தில் அதேபோல (ASIS) அடிப்படையில் பகிரப்படும் தகவல்கள் மற்றும் உத்திரவாதம், வரம்புமீறி விதிமீறி வெளியாகும் செய்திகள், சேவை அல்லது அலைவரிசை, சட்டபபூர்வமான உத்திரவாதம், வணிகத்தன்மை மற்றும் விதிமீறாமைக்கு பொறுப்பாகாமை மற்றும் விலக்கப்பட்டது.
அஹ்லுஸ் சுன்னா வெளியீட்டில் ஏற்படும் சேதம் (அளவில்லாத சேதம், செயல்திட்ட நஷ்ட சேதம் அல்லது லாப இழப்பு), ஒப்பந்த கருத்து, அநீதி அல்லது இத்தளத்தைப் பயன்படுத்த இயலாமை அல்லது இதன் ஏதாவது உள்ளடக்கங்கள், ஏதாவது செயல் அல்லது இத்தளத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஏதாவது விடுபடுதல் அல்லது செயல்படுத்துவதில் அல்லது ஒலிபரப்புவதில் தாமதம், கணினி வைரஸ்-கணினி கெடுநோக்குக் கட்டளைகள், திருட்டு அல்லது அழிவு அல்லது அங்கீகாரமில்லா அணுகுமுறை மாற்றம் செய்தல் அல்லது தளத்தில் உள்ள தகவல்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றிற்கு அஹ்லுஸ்சுன்னா பொறுபேற்காது. என்னதான் தகவல்கள் துல்லியமாக, போதுமானதாக, சாதகமாக முழுமையானதாக, ஏற்புடையதாக அல்லது பொருந்தத்தக்கதாக இருந்தாலும் பிரதிநிதித்துவமோ அல்லது உத்திரவாதமோ இல்லை.
இத்தளத்தில் பராமரிக்கப்படும் சேவையகத்தின் சில இணைப்புகள் மூன்றாம் நபர்களால் கையாளப்படும் போது அதன் இணைப்புகள், மற்ற தளங்கள் மற்றும் வணிகம் அஹ்லுஸ்சுன்னா வெளியீட்டின் கட்டுப்பாட்டிற்குப் புறம்பானது என்றும் மேலும் இத்தளங்களை நீங்கள் கையாளும் போது அஹ்லுஸ்சுன்னா வெளியீடு ahlussunnah.in வலைதளத்தின் வெளியில் உள்ளீர்கள் என்பதையும் புரிந்து கொள்கிறீர்கள் மற்றும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆகையால் இத்தளங்களை உள்ளூர் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறி கையாளுதல், பரிவர்த்தனை செய்தல் போன்ற அத்துமீறல்களை ஆமோதித்தல் அல்லது நியாயம் வழங்குதல் அல்லது உத்திரவாதம் தருதல் மற்றும் நேரடியாக அல்லது அது தொடர்பாக ஏற்படும் விளைவுகள் போன்றவற்றிற்கு அஹ்லுஸ்சுன்னா வெளியீடு பொறுப்பேற்காது.
தவிர்க்கமுடியாத கட்டாய நிலை:- எவ்வளவுதான் ahlussunnah.in நிலையான இடையூறில்லாத தள பயன்பாட்டு சேவையை சிறப்பான முறையில் தந்தாலும் இதில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் தாமதத்திற்கு உத்திரவாதம் தராது மற்றும் பொறுப்பேற்காது.
ஆளுமைச் சட்டம்:- இந்த ஒப்பந்தமானது இந்தியச் சட்டத்தின் ஆளுமைக்குட்பட்டது.
அதிகார எல்லை:- சென்னை மாநகர நீதிமன்ற சட்ட அதிகார எல்லை மட்டும்.