பொறுப்புணர்ந்து பேசுவோம்

சமீப நாட்களாக பொதுவெளியில் பேசுகிற பொறுப்புமிக்கவர்களின் பேச்சு சமூகத்தில் சர்ச்சைகளையும்,அமைதியின்மையையும் ஏற்படுத்தி வருவதை ஊடகத்தின்வாயிலாக நாம் அறிந்து வருகின்றோம்.   ஆளும் தமிழக அரசின் வேளாண்மைத்துறை அமைச்சர்துரைக்கண்ணு அவர்கள் தஞ்சையில் பேசிய பொதுக்கூட்டம்ஒன்றில் “ஆளும் அதிமுக அரசை குறை கூறினால் நாக்கைஅறுப்போம்” என்று சூளுரைக்கின்றார்.   ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற ஒரு கண்டனஆர்ப்பாட்டம் இறுதியில் கலவரத்தில் முடிகின்றது.   நடந்த கலவரத்தில் போலீஸ் வேடிக்கை பார்த்ததாக கூறியதெலுங்கு தேச கட்சியைச்சார்ந்த எம். பி திவாகர் ரெட்டி என்பவர்விமர்சனத்தின் உச்சமாக “காவல் துறையினர் திருநங்கைகள்போல் ஓடி ஒளிந்து கொள்கின்றார்கள்” என்று ஊடகத்திற்கு பேட்டிகொடுக்கின்றார்.   இதற்கு, பதில் கொடுக்கும் முகமாக ஆந்திர மாநிலம்அனந்தபுரமு மாவட்டத்தில் கதிரி காவல் நிலையத்தில்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் மாதவ் என்கிற அதிகாரி“போலீஸை தவறாக பேசும் எம். பி, எம். எல். ஏ க்களின் நாக்கைஅறுப்பேன்” என்று ஊடகத்தை கூட்டி வைத்து எச்சரிக்கின்றார்.   மதக்கலவரம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகஹைகோர்ட்டின் ஆர்டரை கையில் வைத்துக் கொண்டு மேடைபோட்டு பேச அனுமதி மறுத்த திருமயம் காவல்துறைஅதிகாரிகளை தேசிய கட்சி ஒன்றின் தேசிய செயலாளரான எச்.ராஜா ஒருமையில் பேசியதோடு “ஹைகோர்ட்டாவது மயிராவது…”என்று ஏக வசனம் பேசுகின்றார்.   கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்றில் திருவாடானை தொகுதிஎம். எல். ஏ, கருணாஸ் என்பவர் காவல்துறை மேலதிகாரிஅரவிந்தன் என்பவரைக் குறித்து விமர்சிக்கும் போது“காக்கிச்சட்டையை கழற்றிப் போட்டு விட்டு நேருக்கு நேர் வந்துபார், நீயா? நானா? என்று ஒரு கை பார்க்கலாம்” என்றுகொக்கரிக்கின்றார்.   சட்டமன்ற உறுப்பினர், மாநிலத்தின் அமைச்சர்கள்,காவல்துறை உயரதிகாரி, ஒரு கட்சியின் தேசிய செயலாளர்என்று மக்களோடு சார்ந்திருக்கும் துறைகளில் பொறுப்பு வகிக்கும்முக்கியமான நபர்கள் பொதுவெளியில் இப்படி தடித்தவார்த்தைகளை வெளிப்படுத்தினால் சாமானியனும், பாமரனும்தங்களின் கோபத்தை, உணர்ச்சிப்பிழம்பை இதை விட பன்மடங்குவெளிப்படுத்தும் வாய்ப்பு உருவாகி நாட்டில் அசாதாரண சூழல்உருவாகி விடும் என்பது மறுப்பதற்கில்லை.   சாதாரணமானவர்களே இவ்வாறான வார்த்தைப்பிரயோகங்களைப் பயன்படுத்த யோசிக்கும் வேளையில் சட்டம்தெரிந்தவர்களும், படித்தவர்களும், அதிகார வரம்பு உள்ளவர்களும்பொதுவெளியில் இவ்வாறு நடந்து கொள்வது எவ்வகையில்நியாயம்? என்று வெகுஜன மக்கள் வெகுவாகப்பேசிக்கொள்கின்றார்கள்.   வாருங்கள்! பொதுவாகவே, பொறுப்பு வகிக்கும்பொறுப்புதாரிகள் பொதுவெளியிலும் சரி, வாழ்வின் இதரபகுதிகளிலும் சரி வார்த்தைகளை எவ்வாறு வடிவமைத்துக்கொள்ள வேண்டும்? பேச்சுக்களை எவ்வாறு பேச வேண்டும்?என்பதை இஸ்லாம் கூறும் வழிகாட்டு முறையில் பார்த்துவிட்டுவருவோம்!!  …

அருள்மறை அறிய அரபி மொழியின் அவசியம்

  அருளாளன் அல்லாஹ் அவனிக்கு அருளிய அளப்பரிய அருட்கொடை அருள்மறை அல்குர்ஆனாகும். அல்குர்ஆனை அறிவதும், அதன் ஆழமான அர்த்தங்களை விளங்குவதும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் அவசியம் என்பதில் இருவேறு…

முத்தலாக்கில் வெற்றி முத்துகளை அள்ள முடியுமா?

முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.  நாடாளுமன்றத்தில் பாஜகவிற்குப் பெரும்பான்மை இருப்பதால் அங்கு மட்டுமே அந்த மசோதா நிறைவேறியது.  மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின்…

சிலர் குர்ஆனை ஓதும்போது ذ , ض ,ظ , ق,  போன்ற அரபி எழுத்துகளை உர்தூ மொழியின் உச்சரிப்பை (மக்ரஜை)ப் போலவே மொழிகின்றனரே இது சரியா?

கேள்வி: உர்தூ மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம் பெருமக்கள் சிலர் குர்ஆனை ஓதும்போது ذ , ض ,ظ , ق,  போன்ற அரபி எழுத்துகளை உர்தூ…