கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவி வருவதாகச் சொல்லப்படுகிறது. முதன் முதலில் கொரோனா விமானத்தில் வந்தது. அப்போது விமானப் பயணிகள் காரணமாகவே கொரோனா பரவியதாகச் செசால்லப்பட்டது. இப்போது அதன் இரண்டாம் அலை என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. சரி, இந்த இரண்டாம் அலையோடு முடிந்துவிடுமா என்றால், முடியாது என்பதுதான் பதில்.
அடுத்து மூன்றாம் அலை, நான்காம் அலை எனத் தொடரும் என்றுதான் தெரிகிறது. ஏனென்றால் மக்களைச் சுதந்திரமாக வாழவிடுவதைவிடப் பயத்தோடு வாழ வைப்பதுதான் ஆட்சியாளர்களுக்கு வசதியாக இருக்கிறது. எப்படி வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம். எதிர்த்துக் கேட்க ஆள் இருக்காது. போராட்டங்களே இல்லாமல் செய்துவிடலாம். பிடிக்காதவர்களை கொரோனா பெயரைச் சொல்லி சமாதி கட்டிவிடலாம்.
யூதர்களின் திட்டம் என்னவென்றால், தஜ்ஜாலை வரவேற்க இவ்வுலகைத் தயார் செய்வதே ஆகும். அதற்கு மக்கள் ஒருவருக்கொருவர் வெறுத்தொதுக்கும் நிலையை உருவாக்குதல், வாயையும் மூக்கையும் மறைக்கச் செய்தல், ஒருவருக்கொருவர் ஒட்டாதவாறு இடைவெளியை ஏற்படுத்துதல் ஆகியவற்றைச் செய்தல்.
இதையெல்லாம் எப்படிச் செய்வது? அதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த கொரோனா. அதாவது பயத்தை ஏற்படுத்திவிட்டால் மக்கள் ஒருவருக்கொருவர் வெறுக்கத் தொடங்கிவிடுவார்கள். அதனால்தான் இப்போது யாரும் யார் வீட்டிற்கும் செல்ல விரும்புவதில்லை. யாராவது வருவதாகச் சொன்னாலும் கொரோனாவைக் காரணம் காட்டி, வரவேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள்.
கூட்டமாக இருப்பதை ஷைத்தான் விரும்புவதில்லை. அதனால்தான் சமூக இடைவெளி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் நபிமொழி ஒன்றை நினைவூட்டுகிறேன். “நீங்கள் சமுதாயக் கூட்டமைப்புடன் சேர்ந்திருங்கள். பிரிந்துவிட வேண்டாம் என நான் உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் ஷைத்தான் (பிரிந்து வாழும்) தனிமனிதனுடன்தான் இருக்கிறான். அவன் (இணைந்திருக்கும்) இருவரைவிட்டுத் தொலைவில் சென்றுவிடுவான்…” (திர்மிதீ: 2091)
இப்போது புரிகிறதா? மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதை ஷைத்தான் விரும்புவதில்லை. அவர்கள் தனித்தனியாக இருப்பதையே விரும்புகிறான். அதை செல்ஃபோன் மூலம் ஏற்கெனவே அவன் செய்துவிட்டான். இருப்பினும் பயத்தை அள்ளிப்போட்டால் இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பிரிந்துகிடப்பார்கள். அதுதான் அவனது எண்ணம்.
காலம் செல்லச் செல்ல அதைவிட மோசமான காலம்தான் வருமே தவிர வசந்த காலம் திரும்ப வராது. அதனால் இப்போது நாம் வாழும் காலமே நம்மைப் பொருத்த வரை பொற்காலம். இனி வரும் காலமெல்லாம் இதைவிட மோசமாகவே இருக்கும். அதுவெல்லாம் வறண்ட காலம்.
கொரோனா என்பது நோயல்ல. அது ஒரு பேரச்சம். அந்த அச்சம் யாருடைய மனதிற்குள் புகுந்துகொண்டதோ அவரெல்லாம் அதற்கு இரையாகிவிடுவார். யார் அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சி, மற்ற எதைக் கண்டும் அஞ்சாமல், எது வந்தபோதிலும் “அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் எங்களைத் தீண்டாது” என்று உரக்கச் சொல்கிறாரோ அவரை எதுவும் தீண்டாது. அவர் நிம்மதியாக வாழ்வார்.
ஐவேளை தொழுகையைக் கடைப்பிடிப்போம்.
அல்லாஹ்வையே அஞ்சுவோம்.
எல்லா நிலைகளிலும் நிம்மதியாக வாழ்வோம்.
அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி