மௌலவி ஆலிம் பட்டம்

மௌலவி ஆலிம் பட்டம்

த்ரஸாக்களில் பயிற்றுவிக்க படும் ஆலிம் பட்டப்படிப்பை படித்தவர்கள் தாம் இஸ்லாமிய சமுதாயத்தின் அஸ்திவாரமாகும் அவர்கள் இல்லையென்றால் இஸ்லாமியர்கள் நிலைமை மோசமாகி விடும் அவர்கள் வழிகேட்டில் விழ வாய்ப்புண்டு அப்படிப்பட்ட ஆலிம் பட்டப்படிப்புக்கான அடித்தளமிட்ட அக்கால ஆலிம் பெருமக்கள் பாக்தாத் நிஜாமியா பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தில் மிக முக்கியமான பாடப்பிரிவுகளை உள்ளடக்கி அதை 7 வருட பட்டப்படிப்பாக ஆக்கினார்கள்

அவ்வாறு உருவாக்கிய 7 வருட பாடத்திட்டம் கொண்ட ஆலிம் பட்டப்படிப்பை படித்த எத்தனையோ மகான்கள் ஆலிம் பெருமக்கள் உருவாகி அவர்கள் இந்த சமுதாயத்தின் மிக உயர்ந்த அறிஞராகவும் ஞானவான்களாகவும் இருந்து மறைந்திருக்கிறார்கள் இன்றும் இருக்கிறார்கள்

இதில் நவீனவாதிகளான வஹ்ஹாபிகள் அந்த மார்க்க கல்வி பாடத்திட்டத்தில் 2 வருடங்களை குறைத்தும் சிலர் 3 வருடங்களை குறைத்தும் நாங்களும் ஆலிம் பட்டம் கொடுக்கிறோம் என்று கூறி மத்ரஸா நடத்துகிறார்கள்

அவர்கள் மத்ரஸா நடத்துவது இருக்கும் அவர்களை பார்த்து நாங்களும் நடத்துகிறோம் என்று கூறி சில ஊர்களில் அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத்தை சேர்ந்த நிர்வாகத்தில் இயங்கக்கூடிய மத்ரஸாக்களிலும் 5 வருட ஆலிம் பட்டம் வகுப்பு நடத்தி மாணவர்களுக்கு பட்டம் கொடுக்கிறார்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும்பாலான பாரம்பரியம் மிக்க மத்ரஸாக்களில் எல்லாம் 7 வருட ஆலிம் பட்டப்படிப்பு இருக்கும் போது 5 வருடப் பட்டப்படிப்பு நடத்தி பட்டம் கொடுப்பது மார்க்கல்வியின் தரத்தை குறைக்கும் செயலாகும் 5 வருட படிப்பை முடித்து வரும் பட்டதாரிகள் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு வேண்டுமானால் அவர்கள் தகுதி படைத்தவர்காக இருப்பார்கள் மாறாக அவர்களால் ஒரு மத்ரஸாவில் சேர்ந்து பாடம் நடத்தக்கூடிய பேராசிரியராக ஆகும் தகுதி இருக்காது மேலும் அவர்களால் நம் சமுதாயத்தில் அவ்வப்பொழெது ஏற்படக்கூடிய சிக்கல்களை தீர்க்க கூடிய ஞானமும் அவர்கள் பெற முடியாதவர்களாக இருப்பார்கள்

ஒரு மத்ரஸா சிறந்த மத்ரஸா சிறந்த ஆற்றல் மிக்க அறிஞர்களை உருவாக்கும் மத்ரஸா என அடையாளப்படுத்தபடுவது அம்மத்ரஸாவில் நாஜிராக – முதல்வராக பணிப்புரியும் ஆலிமை வைத்தும் அம்மத்ரஸாவில் பணிப்புரியும் மற்ற பேராசிரியர்களை வைத்தும் தாம் அப்பொழுது தான் அம்மத்ரஸாவிற்கு மாணவர்கள் அதிக அளவில் வந்து சேர்ந்து படிப்பார்கள் ஆனால் சில ஊர்களில் தங்கள் மத்ரஸா நூற்றாண்டை கடந்த மத்ரஸா எனப்பெருபமை பேசிக்கொண்டு அதன் பேராசிரியர்கள் விஷயத்தில் அலட்சியமாக யார் குறைவான சம்பளத்திற்கு வருகிறார்களோ அவர்களை கொண்டு மத்ரஸாவை ஏனோ தானோ என நடத்துகிறார்கள் இதன் காரணமாக இப்படிப்பட்ட மத்ரஸாக்களில் மாணவர்கள் வந்து சேர்வது மிகவும் குறைவாகவே இருக்கிறது மேலும் இப்படிப்பட்ட மத்ரஸாக்களிலே சில 5 வருட பாடத்திட்டத்தின் படி பட்டம் வழங்குகிறார்கள் அதுவும் சில மத்ரஸாக்களில் வஹ்ஹாபி கொள்கைகளை மறைத்து கொண்டு சுன்னத் வல் ஜமாஅத் போர்வையில் பேராசிரியர்களாக பணி புரிகிறார்கள்

மேலும் சில மத்ரஸாக்களில் மாணவர்களுக்கு பட்டம் கொடுக்கும் போது அம்மத்ரஸாவை நிர்வாகம் செய்யும் தலைவர் செயாலளர்கள் கையெழுத்திட்டு அப்பட்டங்களை வழங்குகிறார்கள் இது உலகியல் மற்றும் கல்வி துறைக்கு இழுக்காகும் காரணம். பொதுவாக ஒருவருக்கு வழங்கப்படும் ஆலிம் பட்டத்தில் அம்மாணவருக்கு கற்றுக்கொடுத்த பேராசிரியர்கள் தான் கையெழுத்து இட்டு வழங்க வேண்டும் காரணம் மார்க்க கல்வி என்பது ஸில்ஸிலா அடிப்படையில் இன்னாரிடமி்ருந்து இன்னாருக்கு என்ற பட்டயம் கொடுத்து வழங்குவார்கள் இப்படி இருக்க சில நிர்வாகங்கள் தலைவர் செயலாளர் கையெழுத்து போட்டு பட்டத்தை வழங்குவது மார்க்க கல்வியை கேலிக்கூத்தாக்கும் செயலாகும்

எனவே மார்க்க கல்வியை பெருமைக்காகவோ அல்லது வியாரமாகவோ ஆக்காமல் அதை முறையாக 7 வருட பட்டப்படிப்பாக பயிற்று விக்க வேண்டும்

அடுத்து பாரம்பரியம் மிக்க மத்ரஸா என கூறிக்கொள்ளும் நிர்வாகிகள் அரைகுறையாக உள்ளவர்களை பேராசியர்களாக நியமிக்காமல் தமிழகத்தின் தலை சிறந்த ஆலிம் பெருமக்களை பேராசியர்களாக நியமிக்க வேண்டும்

அடுத்து பட்டம் கொடுக்கும் போது பட்டத்தில் ( சனதில்) நிர்வாகிகள் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும்

காரணம் ஆலிம்கள் இந்த சமுதாயத்தின் தூண்கள் அவர்களை சரியான ஞானம் பெற்றவர்களாக உருவாக்குவது நமது கடமையாகும்.

அ.ஷே.முஹம்மது ஆரிஃப்
கூத்தாநல்லூர்
9976063985