கேள்வி: இஸ்லாமிய மார்க்கத்தில் டாட்டூ ஏன் போட்டுக் கொள்ளக் கூடாது?
ஸிப்கத்துல்லாஹ், நெய்வேலி
பதில்: இஸ்லாத்தை புரிந்து பின்பற்றவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு மேற்கண்ட கேள்வியை கேட்ட சகோதரர் ஸிப்கத்துல்லாஹ் அவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக.
பச்சைக் குத்துதல் (டாட்டூ) இஸ்லாத்தில் கூடாத செயலாகும். இவ்வாறு செய்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸலல்லம்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
பச்சை குத்தும் ஆணையும் பெண்ணையும் அல்லாஹ்வின் படைப்பை மாற்றுகிறவர்களையும் அல்லாஹ் சபிக்கின்றான் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸலல்லம் ) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
சவுரிமுடி கட்டிவிடும் ஆணையும் பெண்ணையும், பச்சை குத்தும் ஆணையும் பெண்ணையும் அல்லாஹ் சபிக்கின்றான் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸலல்லம்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் சாபம் பச்சை குத்துவோரின் மீது இறங்குகின்றது என்பது ஒன்றே இஸ்லாத்தில் பச்சைக் குத்துதல் தடை செய்யப்பட்டிருக்கின்றது என்பதற்கு ஆதாரமாகும். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸலல்லம்) அவர்கள் நேரடியாகவே பச்சைக் குத்திக் கொள்ளுதல் அல்லாஹ்வின் சாபத்திற்குரிய செயல் என எச்சரித்துள்ளதாலேயே இஸ்லாத்தில் பச்சைக் குத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது.