இந்தியாவில் இஸ்லாம் வந்த வரலாறு

 

முஹம்மத் இப்னு காசிம் ரஹ் வருகை.

என்கினும் இஸ்லாம் இந்தியாவில் பரவியது முஹம்மத் இப்னு காசிம் (ரஹ்) அவர்கள் இந்தியாவில் மார்க்கத்தை பரப்பும் நோக்கில் கி.பி 712 – ல் இந்தியாவிற்கு வந்தது முதல் தான்…
மாபெரும் தளபதியான இவர் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபின் சிறிய தந்தை காசிமின் மகனாவார். இவரது தந்தை காசிம் ஹஜ்ஜாஜின் கீழ் பஸராவின் ஆளுநராக இருந்தார். இளமைப் பருவத்திலேயே இவருடைய அறிவாற்றலை விளங்கிக் கொண்ட ஹஜ்ஜாஜ் இவர் மீது தனி அன்பு செலுத்தி இவருக்கு உயர்கல்வி அளிப்பதில் பெரும் அக்கறை செலுத்தி போர் பயிற்சி கொடுத்து அறிவிலும், வீரத்திலும் சிறந்தவராக உருவாக்கினார்.
இளம் வயதிலேயே முஹம்மத் இப்னு காசிம் ரஹ் அவர்கள் புரட்சி செய்த குர்துகளை அடக்குவதற்கு படைக்கு தலைமையேற்று சென்று வெற்றியோடு திரும்பினார்.

அச்சமயம் சிந்து நாட்டை ஆண்டு வந்த “ராஜா தாஹிர்” என்ற மன்னன் அரபுகளை சிறையில் அடைத்து கொடுமைப் படுத்துவதாகவும், மேலும் அவர்கள் பயணித்து சென்ற கப்பலை அபகரித்துக் கொண்டதாகவும், அந்நாட்டு சிறையில் இருந்து தப்பி வந்த ஜூபைர் என்பவர் ஹஜ்ஜாஜிடம் முறையிட அரபுகளை விடுவிக்கவும் அந்நாட்டு மக்களை அவர்களது ஆட்சியாளர்களின் அநீதச் செயலிலிருந்து பாதுகாக்கவும் கலீஃபா வலீத் இப்னு அப்துல் மலிகின் அனுமதியோடு முஹம்மத் இப்னு காசிம் ரஹ் அவர்களை 6000 பேர் கொண்ட படையுடன் சிந்து நாட்டிற்கு ( அன்றைய சிந்து நதியை ஒட்டியிருந்த இந்தியா பாகிஸ்தானின் ஒரு பகுதி ) ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் அனுப்பி வைத்தார்.
கி.பி 712 முதல் 714 வரை சுமார் பதினொரு போர்கள் செய்து வாகை சூடிய முஹம்மத் இப்னு காசிம் ரஹ் அவர்கள் சிந்து , முல்தான், குஜராத் ஆகிய பகுதிகளை வென்றெடுத்தார்கள்.

இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சி முறை.

*முஹம்மத் இப்னுல் காசிம் ரஹ் அவர்கள்.

மிக நேர்மையான முறையில் ஆட்சி செய்தார்கள். மிகவும் இரக்க சிந்தனை உள்ளவர்களாகவும், மன்னிக்கும் மனப்பான்மை உள்ளவர்களாகவும் திகழ்ந்தார்கள். எனவே தான் இவர்கள் நாடு திரும்பும் போது மக்கள் கண்ணீர் மல்க அவரை இங்கேயே இருந்து விடுமாறு வேண்டிக் கொண்டார்கள் ஆனாலும் முஹம்மத் இப்னு காசிம் ரஹ் அவர்கள் நாங்கள் ஆட்சியாள்வதற்காக இங்கே வரவில்லை மக்களுக்கு நல்வழிகாட்டவே வந்தோம். நான் மட்டுமல்ல என்னைப் போலவே எல்லா முஸ்லிம் மன்னர்களும் நேர்மையாகவே நடந்து கொள்வார்கள் என மக்கள் மனதில் முஸ்லிம் ஆட்சியாளர்கள் குறித்து நல்லெண்ணத்தை ஏற்படுத்திச் சென்றார்கள்.

*ஆலம்கீர் அவுரங்ஜீப் ரஹ் அவர்கள்.

முகலாய மன்னர்களில் அவுரங்ஜீப் (ரஹ்) அவர்கள் ஷரீஅத் சட்டப்படி ஆட்சி புரிந்தார்கள். சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நல்லாட்சி தந்தார்கள். இவர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது தான் சிதம்பரம் நடராஜர் கோ‌யில் மேலும் சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு மானியங்கள் வழங்கி வந்தார்கள்.
ஆலம்கீர் அவுரங்ஜீப் ரஹ் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் ஏராளமானோர் இஸ்லாத்தை தழுவினார்கள். வங்காளத்தின் ஆளுநராக இருந்த முர்ஷித் குலிகான் பிராமணராயிருந்து இஸ்லாத்தை தழுவினார். இவர்கள் இந்தியாவின் மிகப் பெரும் நிலப் பரப்பை ஆட்சி செய்த முகலாய மன்னராக திகழ்ந்தார்கள். மிக நீதமான ஆட்சி செய்தார்கள் தவறிழைத்தது தந்தையாயினும் சிறை தண்டனை அனுபவித்தாக வேண்டும் என்று தன் காதலிக்காக பைதுல் மாலிலிருந்து பெரும் தொகை செலவழித்து “தாஜ் மஹாலை” எழுப்பியதற்காக ஷாஜஹானை சிறையில் அடைத்தார்கள்.
நல்லவர்களை இழித்துப் பேசும் ஈன உலகம் அவர்களை இழித்துக் கூறி வரலாற்றை எழுதி வைத்துள்ளது.