இந்தியாவில் இஸ்லாம் வந்த வரலாறு

 

 

قول الله عز وجل : أن الدين عند الله الإسلام…

قول النبي صلي الله عليه وسلم :

وعن أبي هريرة رضي الله عنه ، أن رسول الله صلى الله عليه وسلم قال : ” كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصّرانه أو يمجّسانه ” متفق عليه

ல்லாஹ் மனித இனத்தை படைத்து அவர்களுக்கு இயற்கையான இயல்பான ஒரு வாழ்வியழை தேர்ந்தெடுத்து கொடுத்தான். அது படைத்த இறைவனை வணங்கி அவன் கட்டளைகளுக்கு வழிப்படும் படியான ஓர் உன்னத மார்க்கமான இஸ்லாமாகும்.

إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ ۗ وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ ۗ وَمَنْ يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ

நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்;. எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான். (அல்குர்ஆன்: 3-19)

وعن أبي هريرة رضي الله عنه ، أن رسول الله صلى الله عليه وسلم قال : ” كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصّرانه أو يمجّسانه ” متفق عليه

மேலும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் ” இவ்வுலகில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் இஸ்லாத்தை ஏற்கும் மனப் பக்குவத்தில் தான் பிறக்கிறது அவர்களின் பெற்றோர்கள் தாம் அவர்களை யூதர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் , நெருப்பு வணங்கிகளாகவும் மாற்றி விடுகிறார்கள்”
(நூல்: புகாரீ- முஸ்லிம்)

 

இந்தியாவிற்கு இஸ்லாம் எப்போது
யாரால் வந்தது ?

நம் தாய் நாட்டில் இஸ்லாம் எப்போது தோன்றியது என்றால் உலக வாழ்க்கையில் மனிதன் தோன்றியது முதலே இஸ்லாமும் தோன்றிற்று… அந்த வகையில் இந்திய மண்ணில் தான் இஸ்லாம் முதலில் தோன்றியது…
ஆமாம் முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம் (அலை) அவர்கள் சுவனத்திலிருந்து பூமிக்கு இறக்கப் பட்ட போது அவர்கள் லெமூரியா கண்டம் என்று சொல்லப்படும் அன்றைய தமிழ்நாடு இலங்கை உள்ளிட்ட மிகப் பெரிய நிலப் பரப்பில் உள்ள “ஆதம் மலை” என்று பின்னாளில் பெயர் கூறப் பட்ட ஒரு மலையின் உச்சியில் தான் இறங்கினார்கள். இலங்கை அன்று இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்தது. நூஹ் அலை அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தில் தான் பிரிந்து தனி தீவானது
எனவே தான் “ஸைலான்” (سيلان) என்பது மருவி “சிலோன்” என்று அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்களின் இக்கூற்று இப்னு அஸாகிர், இப்னு சஅத் என்ற வரலாற்று நூல்களில் இடம் பெற்றுள்ளது.

ஆதம் அலை அவர்கள் இந்தியாவில் தான் வாழ்ந்தார்கள் என்பதற்கான பல ஆதாரங்களில் ஒன்றாக ஹதீஸ் ஷரீஃபில் வருகிறது.

ان آدم عليه الصلاة والسلام حج أربعين سنة من الهند ماشيا … (روي في أوجز المسالك – و مرقات المفاتيح)

இந்தியாவிலிருந்து ஆதம் அலை அவர்கள் 40 முறை கால்நடையாக ஹஜ்ஜுக்கு சென்றுள்ளார்கள். அவர்களின் அடக்கஸ்தலமும் ஆதம் மலையில் உள்ள ஒரு குன்றில் தான் அமைந்துள்ளது இக்கூற்றினை இமாம் பைஹகியும், தபரியும் உறுதிப் படுத்துகிறார்கள்.

மேலும் இராமேஸ்வரத்தில் அமைந்திருக்கும் பெரிய இரண்டு கப்ர்கள் “ஹாபில் காபில்” இருவருடையது என்று சொல்லப் படுவதும், ஆதம் அலை அவர்களின் பிள்ளைகளில் ஒருவரான “ஷீத்” அலை அவர்கள் பெயரில் சேது நாடு என்றும், அதே பெயரில் சேது சமுத்திரத் திட்டத்தின் பெயர் வந்ததும், ஆதம் பாலத்தை தான் ‘இராமர் பாலம்’ என்று புனைந்து கூறுகிறார்கள் என்பதும் இதை உறுதிப்படுத்துகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலேயே அவர்களின் (ملة الاسلام) மார்க்கத்தை பின்பற்றுவது தொடங்கி விட்டது சேரமான் பெருமாள் என்ற கொடுங்களூரை ஆண்டு வந்த சாமுத்திரி மன்னன் இஸ்லாத்தை ஏற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சந்தித்து அப்துர் ரஹ்மான் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார் என்றும், பாபா ரதன் என்ற வணிகர் அரபு நாடு சென்று நபிகளாரின் கரம் பற்றி இஸ்லாத்தை தழுவினார், மேலும் தமிழகத்தில் இருந்து இராமதேவர் என்ற சித்தர் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் கரம் பற்றி தனது பெயரை யாகூப் என்று மாற்றிக் கொண்டார் என்றும் வரலாறு கூறுகிறது.