அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவதரித்த ரபீயுல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் சில அற்பப் பதர்கள் ஓலமிட்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விடுகின்றன. குறிப்பாக மவ்லிது ஷரீஃப் ஓதுவது கூடாது என்று எனக்கூறி கூக்குரலிடுகின்றன. அப்படிப்பட்ட ஈனர்களுக்கு விளக்கமளிக்கவே இக்கட்டுரை.
عَنْ أبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ إِبْلِيْسَ رَنَّ حِيْنَ أُنْزِلَتْ فَاتِحَةُ الْكِتَابِ . رواه الطبراني في الأوسط 4788 وقال الهيثمي : رجاله رجال الصحيح
“ஃபாத்திஹா அத்தியாயம் அருளப்பட்ட நேரத்தில் இப்லீஸ் ஒப்பாரி வைத்து அழுதான்” என அபூஹுரைரா (ரளி) அவர்கள் கூறினார்கள். நூல் : தப்ரானீ 4788
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : لَمَّا افْتَتَحَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ رَنَّ إِبْلِيْسُ رَنَّةً إِجْتَمَعَتْ إِلَيْهِ جُنُوْدُهُ فَقَالُوْا : ايْئَسُوْا أَنْ تَرُدُّوْا أُمَّةَ مُحَمَّدٍ عَلَى الشِّرْكِ بَعْدَ يَوْمِكُمْ هَذَا وَلَكِنْ أَفْتِنُوْهُمْ فِيْ دِيْنِهِمْ وَأَفْشُوْا فِيْهِمُ النَّوحَ . رواه الطبراني في الكبير 12318 وقال الهيثمي : رجاله موثقون .
நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட பொழுது இப்லீஸ் ஒப்பாரி வைத்து அழுதான். அவனுடைய படை அவனிடம் ஒன்று கூடி “இன்றைய தினத்திற்கு பின்பு முஹம்மது (ஸல்) அவர்களின் சமுதாயத்தை ஷிர்க்கில் திருப்பி விடலாம் என்ற எண்ணத்தில் நம்பிக்கை இழந்து விடுங்கள்! எனினும் அவர்களின் மார்க்கத்தில் அவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடுங்கள்! அவர்களிடத்தில் ஒப்பாரி வைக்கும் பழக்கத்தை பரப்புங்கள்!” என்று (தங்களுக்கிடையே) கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவித்தார்கள். நூல் : தப்ரானீ 12318
நபி (ஸல்) அவர்களுக்கு வெற்றி கிடைத்தது, அவர்களுக்கு ஃபாத்திஹா சூரா அருளப்பட்டது ஆகியவற்றையே பொறுக்க முடியாமல் இப்லீஸ் ஒப்பாரி வைத்து அழுதுள்ளான் என்றால் நபி (ஸல்) அவர்கள் பிறந்த வசந்த காலத்திலா அவன் அழாமல் இருந்திருப்பான்? அந்நாளிலும் அவன் மரண ஓலமிட்டான் என்பதை பல நபித்தோழர்களின் மாணவரான முஜாஹித் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
عَنْ مُجَاهِدٍ رَحِمَهُ اللهُ قَالَ : رَنَّ إِبْلِيْسُ أَرْبَعًا حِيْنَ لُعِنَ وَحِيْنَ أُهْبِطَ وَحِيْنَ بُعِثَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وبعث على فترة من الرسل وَحِيْنَ أُنْزِلَتْ{اَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِيْنَ} . رواه أبو الشيخ الأصبهاني في العظمة وإسناده صحيح
“இப்லீஸ் நான்கு சமயத்தில் ஒப்பாரி வைத்து அழுதான். (1) அவன் சபிக்கப்பட்ட நேரத்தில், (2) அவன் (சுவனத்தை விட்டும்) பூமிக்கு இறக்கப்பட்ட நேரத்தில், (3) முஹம்மது (ஸல்) அவர்கள் பூமிக்கு அனுப்பப்பட்ட நேரத்தில், (4) அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் அத்தியாயம் அருளப்பட்ட நேரத்தில்” என முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அல்அழ்மத் லி அபிஷ்ஷைகி அல் அஸ்பஹானி
நம் உயிரிலும் மேலான மாநபி (ஸல்) அவர்கள் பிறந்த வசந்த காலமாகிய ரபீஉல் அவ்வல் மாதம் வந்து விட்டால் இப்லீஸ்கள் ஒப்பாரி வைத்து மரண ஓலமிடுவதை போன்று T.N.T.J. எனும் ஹதீஸ் மறுப்பாளர்களும் ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்து விடுவார்கள். நாம் இம்மாதத்தில் நபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்து பாடுகிற “சுப்ஹான மவ்லித்” குர்ஆனுக்கும், நபி மொழிகளுக்கும் எதிரானது என்ற விஷமப் பிரச்சாரத்தை துண்டு பிரசுரங்கள் மூலமாக பரப்பி குழப்பம் விளைவிப்பார்கள். எனவே இவர்கள் வருடா வருடம் அடிக்கடி அதிகமாக எந்தெந்த அடிகளை விமர்சிப்பார்களோ அவற்றில் மிக முக்கியமான அடிகளை மட்டும் இங்கே குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
மவ்லித் வரி : اَلسَّلَامُ عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ
பாவங்களை அழித்த மாநபியே! உம்மீது ஸலாம் உண்டாகட்டும்!
நபி மொழி :
عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : وَأَنَا الْمَاحِيْ اَلَّذِيْ يَمْحُو اللهُ بِي الْكُفْرَ . رواه البخاري 3532 , 4896 ومسلم 2354
“நான் (பாவங்களை) அழிப்பவர் ஆவேன்! என் மூலம் இறைமறுப்பை அல்லாஹ் அழிக்கின்றான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜுபைர் இப்னு முத்இம் (ரளி)
நூல் : புகாரி 3532, 4896, முஸ்லிம் 2354
மவ்லித் வரி :
اَلسَّلَامُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ
கஷ்டங்களை அகற்றிய மாநபியே! உம்மீது ஸலாம் உண்டாகட்டும்!
நபி மொழி :
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : مَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ الْقِيَامَةِ . رواه البخاري 2442 ومسلم 2580 , 2699
“யார் ஒரு முஸ்லிமை விட்டும் ஒரு கஷ்டத்தை அகற்றுவாரோ கியாமத் நாளின் கஷ்டங்களிலிருந்து ஒரு கஷ்டத்தை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரளி)
நூல் : புகாரி 2442, முஸ்லிம் 2580, 2699
“பிறர் கஷ்டங்களை அகற்றுவதே ஒரு முஸ்லிமின் பண்பு” என்று போதித்த மாநபி (ஸல்) அவர்களிடம் அந்தப் பண்பு இல்லாமலா போகும்?! இதோ பெருமானாரின் பண்பை அன்னை கதீஜா (ரளி) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்!
عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ : فَقَالَتْ خَدِيْجَةُ رَضِيَ اللهُ عَنْهَا : كَلَّا وَاللهِ مَا يُخْزِيْكَ اللهُ أَبَدًا. إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ وَتَحْمِلُ الْكَلَّ وَتَكْسِبُ الْمَعْدُوْمَ وَتَقْرِي الضَّيْفَ وَتُعِيْنُ عَلَى نَوَائِبَ الْحَقِّ . رواه البخاري 3 ومسلم 160
“அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒரு போதும் அல்லாஹ் உங்களை இழிவு படுத்தமாட்டான். (ஏனெனில்) நிட்சயமாக நீங்கள் உறவை சேர்ந்து வாழ்கிறீர்கள். (பிறர்) கஷ்டங்களை நீங்கள் சுமக்கின்றீர்கள். இல்லாதவருக்கு சம்பாதிக்கிறீர்கள். விருந்தாளியை உபசரிக்கின்றீர்கள். உண்மையான பேரிடர்களில் (அகப்பட் டோருக்கு) உதவி புரிகிறீர்கள்” என கதீஜா (ரளி) கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரளி),
நூல் : புகாரி 3, முஸ்லிம் 160
மவ்லித் வரி :
اَلسَّلَامُ عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ
பெரும் நோயை குணப்படுத்திய மாநபியே! உம்மீது ஸலாம் உண்டாகட்டும்!
இறைமொழி :
وَأُبْرِئُ الْأَكْمَهَ وَاْلأَبْرَصَ وَأُحْيِي الْمَوْتَى بِإِذْنِ اللهِ} آل عمران
“அல்லாஹ்வின் நாட்டத்தால் பிறவிக்குருடரையும், வெண்குஷ்டரையும் நான் குணப்படுத்துவேன். மேலும் இறந்தவர்களுக்கு நான் உயிர் கொடுப்பேன்” என ஈஸா (அலை) அவர்கள் கூறினார்கள். அல்குர்ஆன் 3:49{ 3 : 49
நபி மொழி :
قَالَ عَبْدُ اللهِ بْنُ عَتِيْكٍ رَضِيَ اللهُ عَنْهُ : فَانْكَسَرَتْ سَاقِيْ فَعَصَبْتُهَا بِعِمَامَةٍ …. فَانْتَهَيْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَدَّثْتُهُ فَقَالَ : اُبْسُطْ رِجْلَكَ فَبَسَطْتُ رِجْلِيْ فَمَسَحَهَا فَكَأَنَّهَا لَمْ أَشْتَكِهَا قَطُّ . رواه البخاري 4039
அப்துல்லாஹ் இப்னு அத்தீக் (ரளி) அவர்கள் கூறினார்கள். என் கால் உடைந்து விட்டது. எனவே (எனது) தலைப்பாகையினால் அதைக் கட்டினேன். பின்பு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைக்கூறினேன். அதற்கவர்கள் “உனது காலை நீட்டு!” என்று கூறினார்கள். எனவே எனது காலை நீட்டினேன். அதை நபி (ஸல்) அவர்கள் தடவி விட்டார்கள். உடனே அதில் எந்த வலியையும் ஒரு போதும் நான் அடையாதவனை போன்றாகிவிட்டேன். நூல் : புகாரி 4039
قَالَ يَزِيْدُ بْنُ أَبِيْ عُبَيْدٍ : رَأَيْتُ أَثَرَ ضَرْبَةٍ فِيْ سَاقِ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهُ فَقُلْتُ : يَا أبَا مُسْلِمٍ مَاهَذِهِ الضَّرْبَةُ ؟ فَقَالَ : أَصَابَتْنِيْ يَوْمَ خَيْبَرَ فَقَالَ النَّاُس : أُصِيْبَ سَلَمَةُ فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَفَثَ فِيْهِ ثَلَاثَ نَفَثَاتٍ فَمَا اشْتَكَيْتُهَا حَتَّى السَّاعَةَ . رواه البخاري 4206
யஸீத் இப்னு ஆபீஉபைத் (ரஹ்) கூறினார்கள். ஸலமா (ரளி) அவர்களின் காலில் வெட்டுக்காயத்தின் அடையாளத்தை நான் கண்டேன். அபூமுஸ்லிம் அவர்களே! இது என்ன வெட்டுக்காயம்? என்று கேட்டேன். அதற்கவர்கள், “இது கைபர் போர் தினத்தில் எனக்கு ஏற்பட்டது. அப்போது மக்கள் “ஸலமா (கடுமையாக) தாக்கப்பட்டுவிட்டார்” எனக்கூறினார்கள். எனவே நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நபி (ஸல்) அவர்கள் அதிலே மூன்று முறை ஊதி உமிழ்ந்தார்கள். பின்பு இப்பொழுது வரை அதில் எந்த வலியையும் நான் அடையவில்லை” எனக்கூறினார்கள்.
நூல் : புகாரி 4206
மவ்லித் வரி :
أَنْتَ غَفَّارُ الْخَطَايَا *** وَالذُّنُوْبِ الْمًوْبِقَاتِ
(மாநபியே!) நீங்கள் குற்றங்களையும், அழித்தொழிக்கும் பாவங்களையும் மன்னிக்கக்கூடியவர்களாகும்!
இறைமொழி :
قال الله تعالى : {وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ} آلعمران 3:159
(நபியே! சொல்லிலும், செயலிலும்) நீங்கள் கடுகடுப்பானவராகவும், இறுகிய இதயம் கொண்டவராகவும் இருந்தால் அவர்கள் உமது சமூகத்தை விட்டும் விரண் டோடியிருப்பார்கள். எனவே அவர்களை மன்னித்து விடுங்கள். அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேளுங்கள். அல்குர்ஆன் 3:159
قال الله تعالى : {وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلَى خَائِنَةٍ مِنْهُمْ إِلَّا قَلِيْلًا مِنْهُمْ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ إِنَّ اللهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ
المائدة 5:13
“யூதர்களிலிருந்தும் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் கண்டு கொண்டே இருப்பீர்! எனவே நீர் அவர்களை மன்னித்து, புறக்கணித்து விடுங்கள். நிச்சயமாக நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான். அல்குர்ஆன் 5:13
நபி வழி :
عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ قَالَ : لَقِيْتُ عَبْدَ اللهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قُلْتُ : أَخْبِرْنِيْ عَنْ صِفَةِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي التَّوْرَاةِ ؟ قَالَ : أَجَلْ …. وَلَا يَدْفَعُ بِالسَّيِّئَةِ اَلسَّيِّئَةَ وَلَكِنْ يَعْفُوْ وَيَغْفِرُ . رواه البخاري 2125
“அதாஉ இப்னு யஸார் (ரஹ்) கூறினார்கள்; நான், அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னில் ஆஸ் (ரளி) அவர்களைச் சந்தித்து தவ்ராத் வேதத்திலுள்ள நபி (ஸல்) அவர்களின் பண்பைப்பற்றி எனக்கு தாங்கள் கூறுங்களேன்? என்று சொன்னேன். அதற்கவர்கள், ஆம்! (கூறுகிறேன்.) நபி (ஸல்) அவர்கள் தீமைக்குப் பகரமாக தீமையைச் செய்யமாட்டார்கள். மாறாக அவர்கள் மன்னித்து கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள்…. எனக்கூறினார்கள். நூல் : புகாரி 2125
மவ்லித் வரி :
أَنْتَ سَتَّارُ الْمَسَاوِيْ
(மாநபியே!) நீங்கள், பிறர் குறைகளை மறைக்கக்கூடியவர்களாகும்!
இறைமொழி :
قال الله تعالى : {وَلَا تَجَسَّسُوْا} الحجرات 49:12
“பிறர் குறைகளை துருவித்துருவி ஆராயாதீர்கள்!” அல்குர்ஆன் 49:12
நபி மொழி :
عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيْثِ . وَلَا تَحَسَّسُوْا وَلَا تَجَسَّسُوْا وَلَا تَبَاغَضُوْا وَلَا تَدَابَرُوْا وَكُوْنُوْا عِبَادَ اللهِ إِخْوَانًا . رواه البخاري 6724 ومسلم 2563
“(வீண்) எண்ணத்தை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில் நிச்சயமாக (வீண்) எண்ணம் மிக பொய்யான செய்தியாகும். ஒட்டுக்கேட்காதீர்கள்! பிறர் குறைகளை துருவி ஆராயாதீர்கள்! ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்ளாதீர்கள்! சண்டையிட்டு பிணங்கிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாக மாறிவிடுங்கள்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரளி)
நூல் : புகாரி 6724, முஸ்லிம் 2563
عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللهُ فِي الدُّنْيَا وَاْلآخِرَةِ . رواه مسلم 2699 , 2580 و البخاري 2442
“யார் ஒரு முஸ்லிமுக்கு(ரிய குறைகளை) மறைப்பாரோ அவருக்கு(ரிய குறைகளை) இவ்வுலகத்திலும், மறுமையிலும் அல்லாஹ் மறைப்பான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரளி)
நூல் : முஸ்லிம் 2699, 2580, புகாரி 2442
மவ்லித் வரி :
وَمُقِيْلُ الْعَثَرَاتِ
(மாநபியே! நீங்கள்) பிறர் பிழைகளை மன்னித்து கண்டுகொள்ளாமல் விடுபவர்களாகும்!
நபி மொழி :
عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ أَقَالَ مُسْلِمًا أَقَالَهُ اللهُ عَثْرَتَهُ . رواه أبوداود 3460 وابن ماجة 2199
“யார் ஒரு முஸ்லிமுக்கு பிழைகளை மன்னித்து கண்டுகொள்ளாமல் விடுவாரோ அவருடைய பிழைகளை அல்லாஹ் அவருக்கு மன்னித்து கண்டு கொள்ளாமல் விட்டு விடுவான்” என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரளி),
நூல் : அபூதாவூத் 3460, இப்னு மாஜா 2199
عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ أَقَالَ عَثْرَةً أَقَالَهُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ . رواه أحمد 7431
“யார் பிறர் பிழைகளை மன்னித்து கண்டுகொள்ளாமல் விடுவாரோ கியாமத் நாளில் அவருடைய பிழைகளை அல்லாஹ் அவருக்கு மன்னித்து கண்டு கொள்ளாமல் விட்டு விடுவான்” என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரளி), நூல் : அஹ்மத் 7431
மவ்லித் வரி :
أَنْتَ مُنْجِيْنَا مِنَ الْحُرَقِ *** مِنْ لَهِيْبِ النَّارِ والأَجَجِ
(மாநபியே!) நரக நெருப்பின் ஜுவாலையினால், அதன் வெப்பத்தால் கரிந்து விடாமல் எங்களை காப்பாற்றுபவர் நீங்களே!
وَأَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ أَجْمَعِهِمْ
மெய்யாகவே! அகில மக்கள் அனைவருக்கும் நீங்கள் உதவி செய்பவர்களாகும்!
நபி மொழி :
عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَجْمَعُ اللهُ النَّاسَ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُوْلُوْنَ : لَوْ اِسْتَشْفَعْنَا عَلَى رَبِّنَا حَتَّى يُرِيْحَنَا مِنْ مَكَانِنَا فَيَأْتُوْنَ آدَمَ عَلَيْهِ السَّلاَمَ …………. فَيَأْتُوْنِيْ فَأَسْتَأْذِنُ عَلَى رَبِّيْ فَإِذَا رَأَيْتُهُ وَقَعْتُ سَاجِدًا فَيَدَعُنِيْ مَاشَاءَ اللهُ ثُمَّ يُقَالُ : اِرْفَعْ رَأْسَكَ سَلْ تُعْطَهُ وَقُلْ يُسْمَعْ وَاشْفَعْ تُشَفَّعْ فَأَرْفَعُ رَأْسِيْ فَأَحْمَدُ رَبِّيْ بِتَحْمِيْدٍ يُعَلِّمُنِيْ ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِيْ حَدًّا ثُمَّ أُخْرِجُهُمْ مِنَ النَّارِ وَأُدْخِلُهُمْ الْجَنَّةَ ثُمَّ أَعُوْدُ فَأَقَعُ سَاجِدًا مِثْلَهُ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ حَتَّى مَا بَقِيَ فِي النَّارِ إِلَّا مَنْ حَبَسَه الْقُرْآنُ . رواه البخاري 6565 ومسلم 193
“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அல்லாஹ் மறுமை நாளில் மக்களை ஒன்று கூட்டுவான். அப்போது அவர்கள் (அதிபயங்கரமான) இந்த இடத்திலிருந்து நம்மை காப்பாற்றுவதற்காக நம் இறைவனிடம் (நமக்காக) பரிந்துரைக்கும்படி (யாரையாவது) நாம் கேட்டுக் கொண்டால் நன்றாயிருக்குமே! என்று கூறியவாறு ஆதம் (அலை) அவர்களிடம் வருவார்கள். (பின்பு நூஹ் நபியிடம் பின்பு இப்ராஹீம் நபியிடம் பின்பு மூஸா நபியிடம் பின்பு ஈஸா நபியிடம் வருவார்கள்.) பின்பு என்னிடம் வருவார்கள். அப்போது நான் என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அவனை நான் கண்டதும் ஸஜ்தாவில் விழுந்துவிடுவேன். அவன் நாடிய நேரம் வரை (நான் விரும்பியதை கேட்க) என்னை விட்டுவிடுவான். பிறகு (இறைவன் தரப்பிலிருந்து) “உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள், உங்களுக்கு வழங்கப்படும்!, கூறுங்கள், ஏற்கப்படும்! பரிந்துரை செய்யுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்!” என்று என்னிடம் கூறப்படும். உடனே நான் என் தலையை உயர்த்தி இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழ்களைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன் (நான் எத்தனை நபருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்பதில்) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் நரகத்திலிருந்து வெளியேற்றி சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் சென்று ஸஜ்தாவில் விழுவேன். அதைப் போன்றே மூன்றாம் முறை அல்லது நான்காம் முறை செய்வேன். இறுதியாக குர்ஆன் தடுத்துவிட்டவர்(களான நிரந்தர நரகம் விதிக்கப்பட்ட இறை மறுப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் எஞ்சியிருக்கமாட்டார்கள்” என அனஸ் (ரளி) அறிவித்தார்கள். நூல் : புகாரி 6565, முஸ்லிம் 193
நபி புகழ் பாடினால் நன்மை கிடைக்கும் :
عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ : قَالَ حَسَّانُ رَضِيَ اللهُ عَنْهُ : هَجَوْتَ محمدًا فَأَجَبْتُ عَنْهُ *** وَعِنْدَ اللَّه فِيْ ذَاكَ الْجَزَاءُ . رواه مسلم 4545
“(இறைமறுப்பாளர்களே!) முஹம்மது (ஸல்) அவர்களை இகழ்ந்து கவிபாடுகிறீர்களா? அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர்களைப் புகழ்ந்து நான் பாடுவேன்! அதற்காக அல்லாஹ்விடத்தில் (எனக்கு) மகத்தான கூலி உண்டு” என ஹஸ்ஸான் (ரளி) பாடினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரளி), நூல் : முஸ்லிம் 4545
நபி புகழ் பாடினால் நபி நேசம் கிடைக்கும் :
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِبَعْضِ الْمَدِيْنَةِ فَإِذًا هُوَ بِجَوَارٍ يَضْرِبْنَ بِدُفِّهِنَّ وَيَتَغَنَّيْنَ وَيَقُلْنَ
نَحْنُ جَوَارٍ مِنْ بَنِى النَّجَّارِ *** يَا حَبَّذَا محمدٌ مِنْ جَارٍ
فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَعْلَمُ اللهُ إِنِّي لَأُحِبُّكُنَّ
رواه ابن ماجة 1889
நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் ஒரு பகுதியை கடந்து சென்றார்கள். அப்பொழுது சில சிறுமிகள் தஃப் அடித்து பாட்டுப்பாடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பின்வருமாறு பாடினார்கள்.
“நாங்கள் பனுன் நஜ்ஜார் குடும்பத்தைச் சார்ந்த சிறுமிகள்!
முஹம்மது (ஸல்) அவர்கள் சிறந்த அண்டைவீட்டுக்காரர் ஆவார்கள்!”
இதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக நான் உங்களை நேசிக்கிறேன் என்பதை அல்லாஹ் நன்கறிகிறான்!” எனக்கூறினார்கள்.
நூல் : இப்னு மாஜா 1889
நபி புகழ் பாடினால் நபியின் துஆவும், ஜிப்ரீல் (அலை) அவர்களின் பாதுகாப்பும் கிடைக்கும் :
عَنْ حَسَّانَ بْنِ ثَابِتٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَا حَسَّانُ أَجِبْ عَنْ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ . أَللَّهُمَّ أَيِّدْهُ بِرُوْحِ الْقُدْسِ . رواه البخاري 453 ومسلم 2485
“ஹஸ்ஸான் அவர்களே! அல்லாஹ்வின் தூதருக்குப்பகரமாக நீங்கள் பதிலளித்துப்பாடுங்கள். யா அல்லாஹ்! பரிசுத்த உயிர் (ஜிப்ரீல் –அலை- அவர்களின்) மூலம் இவரைப் பலப்படுத்துவாயாக!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹஸ்ஸான் (ரளி), நூல் : புகாரி 453, முஸ்லிம் 2485
பள்ளிவாசலில் நபிபுகழ் பாடுவோம் :
عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ : كَانَ رَسُوْلُ اللهِ عَلَيْهِ وَسَلَّمَ يَضَعُ لِحَسَّانَ مِنْبَرًا فِي الْمَسْجِدِ يَقُوْمُ عَلَيْهِ قَائِمًا يُفَاخِرُ عَنْ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ قَالَتْ : يُنَافِحُ عَنْ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَقُوْلُ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ اللهَ يُؤَيِّدُ حَسَّانَ بِرُوْحِ الْقُدْسِ مَا يُفَاخِرُ أَوْ يُنَافِحُ عَنْ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ . رواه الترمذي 2846
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் (ரளி) அவர்களுக்காக பள்ளிவாசலில் ஒரு மிம்பரை தயார் செய்து கொடுப்பவர்களாக இருந்தார்கள். அதன் மீது ஹஸ்ஸான் (ரளி) அவர்கள் நின்று கொண்டு நபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்து கவிபாடுவார்கள். அல்லது நபி (ஸல்) அவர்கள் மீது கூறப்படுகிற குற்றச் சாட்டுகளுக்கு மறுப்புக்கூறி (காஃபிர்களை இகழ்ந்து) கவிபாடுவார்கள். ஹஸ்ஸான் (ரளி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்து கவிபாடும் பொழுதெல்லாம் அல்லது நபி (ஸல்) அவர்கள் மீது கூறப்படுகிற குற்றச் சாட்டுகளுக்கு மறுப்புக்கூறி கவிபாடும் பொழுதெல்லாம் பரிசுத்த உயிர் (ஜிப்ரீல் –அலை- அவர்களின்) மூலம் நிச்சயமாக ஹஸ்ஸானை அல்லாஹ் பலப்படுத்துவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரளி), நூல் : திர்மிதி 2846
عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ مَرَّ بِحَسَّانَ وَهُوَ يُنْشِدُ الشِّعْرَ فِي الْمَسْجِدِ فَلَحَظَ إِلَيْهِ فَقَالَ : قَدْ كُنْتُ أُنْشِدُ وَفِيْهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ ثُمَّ الْتَفَتَ إِلَى أَبِيْ هُرَيْرَةَ فَقَالَ : أَنْشُدُكَ اللهَ أَسَمِعْتَ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ : أَجِبْ عَنِّي اَللَّهُمَّ أَيِّدْهُ بِرُوْحِ الْقُدْسِ ؟ قَالَ : اَللَّهُمَّ نَعَمْ . رواه مسلم 2485 والبخاري 3212
ஹஸ்ஸான் (ரளி) அவர்கள் பள்ளிவாசலில் வைத்து கவிபாடிக்கொண்டிருந்த பொழுது அவரை உமர் (ரளி) அவர்கள் கடந்து சென்றார்கள். அப்பொழுது உமர் (ரளி) அவர்கள் ஹஸ்ஸான் (ரளி) அவர்களைக் கூர்ந்து பார்த்தார்கள். அதற்கு ஹஸ்ஸான் (ரளி) அவர்கள், “(உமர் அவர்களே!) உம்மை விட மிகச் சிறந்த(நபிய)வர்கள் இந்தப்பள்ளியில் இருக்கும் போதே நான் கவிபாடியுள்ளேன் எனக்கூறி பின்பு அபூஹுரைரா (ரளி) அவர்களின் பக்கம் திரும்பி “(அபூஹுரைராவே!) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், எனக்காக பதிலளித்து கவி பாடுங்கள்! யா அல்லாஹ்! பரிசுத்த உயிர் (ஜிப்ரீல் –அலை- அவர்களின்) மூலம் இவரைப் பலப்படுத்துவாயாக!” என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நபியவர்களிட மிருந்து நீங்கள் கேட்டுள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரளி) அவர்கள், “யா அல்லாஹ்!, ஆம்!” எனக்கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரளி), நூல் : முஸ்லிம் 2485, புகாரி 3212
புண்ணிய நபி (ஸல்) அவர்களின் புகழ்பாடும் நல்லோர் கூட்டத்தில் நம்மை வல்லான் அல்லாஹ் சேர்த்து அருள்புரிவானாக! ஆமீன் !
தொகுப்பாளி :
மவ்லவி, அல்ஹாஃபிழ் A. முஹம்மது முஸ்தஃபா மஸ்லஹி M.A.,
பேராசிரியர் : மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி, தூத்துக்குடி