ஷரீஅத் சட்டங்களை மாற்ற முனைந்தால்..!

<span class=ஷரீஅத் சட்டங்களை மாற்ற முனைந்தால்..!" class="img-responsive wp-post-image" src="https://ahlussunnah.in/wp-content/uploads/2018/01/123-1170x700.jpg">

இன்ஷா அல்லாஹ்! உயிர் போகும் வரை எதிர்த்துப் போராடுவோம்!!

 

ஃபிர்அவ்னின் ஒடுக்கு முறையும்… முஸ்லிம்களின் போர்க்குணமும்…

அல்லாஹ்வின் அற்புதத்தை மூஸா (அலை) வெளிப்படுத்திய போது, அவன் வழங்கிய அற்புதப் படைப்பான அழகிய கண்ணின் துணை கொண்டு பார்த்து விட்டு, அந்த சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் வீழ்ந்து.

فَأُلْقِيَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوا آمَنَّا بِرَبِّ هَارُونَ وَمُوسَى (70) قَالَ آمَنْتُمْ لَهُ قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ إِنَّهُ لَكَبِيرُكُمُ الَّذِي عَلَّمَكُمُ السِّحْرَ فَلَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُمْ مِنْ خِلَافٍ وَلَأُصَلِّبَنَّكُمْ فِي جُذُوعِ النَّخْلِ وَلَتَعْلَمُنَّ أَيُّنَا أَشَدُّ عَذَابًا وَأَبْقَى 

“நாங்கள் ஹாரூன் மற்றும் மூஸாவின் இறைவனை ரப்பாக ஏற்றுக் கொண்டோம்” என்று உரக்கக் கூறினார்கள். அப்போது ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதி அளிக்கும் முன் நீங்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? அவர் தான் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்களின் குரு என்று இப்போது தெரிந்து விட்டது.

இப்போது, நான் உங்களின் மாறுகை, மாறுகால்களைத் துண்டித்து விடுவேன். மேலும், பேரீச்சம் மரத்தின் கம்பங்களில் அறைந்து உங்களை கொல்லப்போகின்றேன், அப்போது தெரியும் யாருடைய வேதனை மிகக்கடுமையானது என்று”.

قَالُوا لَنْ نُؤْثِرَكَ عَلَى مَا جَاءَنَا مِنَ الْبَيِّنَاتِ وَالَّذِي فَطَرَنَا فَاقْضِ مَا أَنْتَ قَاضٍ إِنَّمَا تَقْضِي هَذِهِ الْحَيَاةَ الدُّنْيَا (72) إِنَّا آمَنَّا بِرَبِّنَا

அதற்கு, முஸ்லிம்களாக மாறியிருந்த சூனியக்காரர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்: “எங்களைப் படைத்த இறைவன் மீது சத்தியமாக! தெளிவான சான்றுகள் எங்கள் கண்முன்னே நடந்த பின்னரும் நாங்கள் சத்தியத்தை விட உனக்கு ஒரு போதும் முன்னுரிமை தரமாட்டோம். எனவே, நீ என்ன செய்ய விரும்புகின்றாயோ செய்து கொள். அதிகபட்சம் இவ்வுலக வாழ்வில் மட்டுமே உன்னால் தீர்ப்பு வழங்க முடியும். திண்ணமாக, நாங்கள் எங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொண்டு விட்டோம்”.  ( அல்குர்ஆன்: 20: 59 – 73 )

எவ்வளவு பெரிய அடக்குமுறையை ஃபிர்அவ்ன் அவர்களின் மீது கட்டவிழ்த்து விட்டான். கொடுமை நிறைந்த சித்ரவதைகளை செய்திடுவேன் என மிரட்டினான். இஸ்லாத்தால் கவரப்பட்ட அடுத்த வினாடியில், முஸ்லிமாக வாழ ஆரம்பித்து ஒரு வினாடி தான் ஆகியிருந்தது.அவர்களின் வாயில் இருந்து வந்த பதில் எவ்வளவு வீரியம் நிறைந்ததாய் அமைந்திருந்தது!?”

இன்றைய நம்முடைய போராட்டம்! இன்றைய நம்முடைய கடமை!

இன்றைய நம்முடைய கண்டனம்! நாளைய நம் தலைமுறையினரின் வாழும் உரிமை!

என்றென்றும்  போராடுவோம்! ஷரீஆவின் சட்டங்களுக்கு உயிர் கொடுப்போம்!!!

 

வல்ல ரஹ்மான் இந்த தேசத்தில் முஸ்லிம்கள் இஸ்லாமிய முறையோடும், நெறியோடும் வாழ்ந்திட நல்லருள் பாளிப்பானாக! ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!!

Image result for basheer ahmed usmani

  

 

 

 

 

ஆக்கம் :

மவ்லவி, பஷீர் அஹ்மது உஸ்மானி