உணர்வுகளை விடவும் உயர்ந்தது உயர் ஷரீஅத்!!!
ஹிலால் இப்னு உமய்யா (ரலி) அவர்கள், நபிகளாரின் நற்பெரும் தோழர்களில் ஒருவர். அல்லாஹ் இவர் விஷயத்தில் தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தமைக்காக தவ்பா செய்த போது, மன்னித்து அருள் பாளித்தான் என்று அல்குர்ஆன் 9-ஆம் அத்தியாயம் 118-வது வசனம் சான்று பகர்கின்றது.
ஒரு காலகட்டம் பெரும் சோதனை ஒன்று அவர்களைச் சூழ்ந்து கொண்டது. அதுவரை அவருக்கு பக்கபலமாகவும், உற்ற துணையாகவும் இருந்து வந்த அவரின் துணைவியார் அவருக்கு துரோகம் விளைவித்ததை கண்ணால் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தன்மான உணர்வு உள்ள எந்த ஓர் ஆணும் அந்த இழி செயலை ஏற்றுக் கொள்ள மாட்டான். மிகவும் பேணுதல் நிறைந்த மனிதர் ஆன ஹிலால் இப்னு உமய்யா (ரலி) அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“ அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சபையை நோக்கி மிக விரைவாக வந்தார்கள் ஹிலால் இப்னு உமய்யா (ரலி) அவர்கள் சபையின் முன் வந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! கர்ப்பவதியாக இருக்கும் என் மனைவிக்கும் ஷரீக் இப்னு சஹ்மா என்பவருக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக நான் கருதுகின்றேன்” என்றார்கள். ( அதாவது “கருவில் தம் மனைவி சுமக்கும் குழந்தைக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்கள் )
இது கேட்கப் பிடிக்காத அண்ணலார் {ஸல்} அவர்கள் “தக்க ஆதாரத்தைக் கொண்டுவாருங்கள். இல்லையேல் உங்களுக்கு பத்தினிப் பெண்கள் மீது அவதூறு சொன்ன குற்றத்திற்காக 80 கசையடிகள் தண்டனையாக வழங்கப்படும்” என்றார்கள்
அதற்கு, ஹிலால் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நம்மில் ஒரு மனிதர் தம் மனைவியரோடு இன்னொரு ஆண் தனித்திருக்கக் கண்டால், ஆதாரத்தை தேடிக்கொண்டிருக்க வேண்டுமா?” எனக் கேட்டார்கள்.
ஹிலால் (ரலி) அவர்களின் முறையீட்டைக் கேட்ட அண்ணலார் {ஸல்} அவர்கள் முன்பு போலவே ஒன்று நான்கு சாட்சியைக் கொண்டு வாருங்கள். இல்லையேல் அவதூறு குற்றத்திற்கான தண்டனை உமக்கு அளிக்கப்படும்” என்றார்கள்.
فقال هلال : والله إني لأرجو أن يجعل الله لي منها مخرجا
إذ أنزل الله على رسول الله صلى الله عليه وسلم الوحي – وكان إذا نزل عليه الوحي عرفوا ذلك ، في تربد وجهه . يعني : فأمسكوا عنه حتى فرغ من الوحي – فنزلت
والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم
இதைக் கேட்ட ஹிலால் இப்னு உமய்யா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய இறைவனின் மீது ஆணை! நான் உண்மையாளன். உண்மையைத் தான் சொல்கின்றேன்! அல்லாஹ் என்னுடைய இந்த விவகாரத்தில் ஏதேனும் ஒரு சட்டத்தை இறக்கியருளுவான். எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து என்னைக் காப்பாற்றுவான். மேலும், என்னுடைய உயிரையும் பாதுகாப்பான் என்கிற நம்பிக்கை எனக்கு மிகுதியாகவே இருக்கிறது” என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ் “மேலும், யார் தம் மனைவியரின் மீது அவதூறு சுமத்துகிறார்களோ, மேலும் அதற்கு தங்களைத் தவிர வேறு சாட்சிகள் அவரிடம் இல்லையோ, அப்படிப்பட்ட ஒவ்வொருவரின் சாட்சியமும் (இவ்வாறு இருக்க வேண்டும். அதாவது, தன்னுடைய குற்றச்சாட்டில்) தான் உண்மையாளன் என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் பகர வேண்டும். மேலும், ஐந்தாவது தடவை (தன்னுடைய குற்றச்சாட்டில்) தான் பொய்யனாக இருந்தால் “அல்லாஹ்வின் சாபம் தன் மீது உண்டாகட்டும்” என்று கூறவேண்டும். “இவன் (இவனுடைய குற்றச்சாட்டில்) பொய்யன் ஆவான்” என அவள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு தடவை கூறி, ஐந்தாவது தடவையாக “இவன் (இவனுடைய குற்றச்சாட்டில்) உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும்!” என்று அவள் சாட்சியம் அளிக்க வேண்டும்.
மேலும், அவள் அளிக்கும் இந்த சாட்சியம் அவளை விட்டுத் தண்டனையைத் தடுக்கக்கூடியதாகும். உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் இல்லாது போயிருந்தால், மேலும், அல்லாஹ் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இல்லாது போயிருந்தால் (மனைவியர் மீது அவதூறு கற்பிக்கும் விவகாரம் உங்களைப் பெரும் சிக்கலில் ஆழ்த்தி விட்டிருக்கும்!)” என்கிற 24-ஆம் அத்தியாயத்தின் 6-10 ஆகிய (லிஆன் – சாப அழைப்பு பிரமாண சட்ட) வசனங்களை இறக்கியருளினான்.
فسري عن رسول الله صلى الله عليه وسلم ، فقال أبشر يا هلال ، قد جعل الله لك فرجا ومخرجا فقال هلال : قد كنت أرجو ذلك من ربي ، عز وجل فقال رسول الله صلى الله عليه وسلم فأرسلوا إليها ، فجاءت ، فتلاها رسول الله صلى الله عليه وسلم عليهما ، وذكرهما وأخبرهما أن عذاب الآخرة أشد من عذاب الدنيا . فقال هلال والله – يا رسول الله – لقد صدقت عليها . فقالت : كذب
அங்கு நின்று கொண்டிருந்த ஹிலால் இப்னு உமய்யா (ரலி) அவர்களை அழைத்து, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்“ஹிலாலே அல்லாஹ்விட்த்திலிருந்தும் உண்டான சுபச்செய்தியை பெற்றுக் கொள்ளுங்கள்! இதோ அல்லாஹ் உங்கள் விவகாரத்தில் மகிழ்ச்சி தரும் சட்டத்தை இறக்கியருளியுள்ளான்” என்றார்கள்.
அதற்கு ஹிலால் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அதைத் தானே நானும் அல்லாஹ்விடத்தில் ஆதரவு வைத்தேன்” என்று பதில் கூறினார்கள்.
பின்னர், குற்றம் சுமத்தப்பட்ட அவரின் மனைவி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் திருச்சபைக்கு அழைத்து வரப்பட்டார்.
இருவருக்கும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அந்த இறைவசனத்தின் சட்டத்தை விளக்கி கூறினார்கள். பின்னர் குரலை உயர்த்தி “நன்றாக அறிந்து கொள்ளுங்கள்! உலகத்தின் தண்டனையை விட மறுமையின் தண்டனை மிக மிகக் கடுமையானது” என்று கூறினார்கள். அதற்கு, ஹிலால் (ரலி) அவர்கள் “நான் இவள் மீது சொன்ன குற்றச்சாட்டு முழுக்க முழுக்க உண்மையானது” என்றார்கள். இதற்கு அவரின் மனைவி “இவர் என் மீது சொன்ன குற்றச்சாட்டு அப்பட்டமான பொய்யாகும்” என்றார்.
فقال رسول الله صلى الله عليه وسلم ” لاعنوا بينهما “
فقيل لهلال : اشهد . فشهد أربع شهادات بالله إنه لمن الصادقين ، فلما كان في الخامسة قيل له : يا هلال ، اتق الله ، فإن عذاب الدنيا أهون من عذاب الآخرة ، وإن هذه الموجبة التي توجب عليك العذاب . فقال : والله لا يعذبني الله عليها ، كما لم يجلدني عليها . فشهد في الخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين . ثم قيل لها : اشهدي أربع شهادات بالله إنه لمن الكاذبين ، فلما كانت الخامسة قيل لها : اتقي الله ، فإن عذاب الدنيا أهون من عذاب الآخرة ، وإن هذه الموجبة التي توجب عليك العذاب . فتلكأت ساعة ، ثم قالت : والله لا أفضح قومي فشهدت في الخامسة أن غضب الله عليها إن كان من الصادقين . ففرق رسول الله صلى الله عليه وسلم بينهما ، وقضى ألا يدعى ولدها لأب ولا يرمى ولدها ، ومن رماها أو رمى ولدها فعليه الحد ، وقضى ألا بيت لها عليه ولا قوت لها ، من أجل أنهما يتفرقان من غير طلاق ، ولا متوفى عنها
இருவரின் வாக்குமூலத்தையும் கேட்ட அண்ணலார் இருவரையும் லிஆன் (சாப அழைப்பு பிரமாணம்) செய்யுமாறு கூறினார்கள்.
முதலில் ஹிலால் (ரலி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் சட்டத்திற்கேற்ப நான்கு சத்தியங்களைச் செய்தார். அவர் ஒவ்வொரு முறை சத்தியம் செய்யும் போதும் நபி {ஸல்} அவர்கள் “உங்களில் ஒருவர் பொய் சொல்கிறீர்கள் என்று இறைவனுக்கு தெரியும். எனவே, பாவ மன்னிப்புக் கேட்டு மீள்கிறவர் உண்டா?” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
ஐந்தாவது முறை சத்தியம் செய்வதற்கு ஹிலால் (ரலி) அவர்கள் முனைந்தபோது, சுற்றியிருந்த நபித்தோழர்கள் ஹிலால் (ரலி) அவர்களை நோக்கி “அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள். மறுமையின் தண்டனையை விட இம்மையின் தண்டனை மிக எளிதானது. ஆகவே, ஐந்தாவது சத்தியம் செய்யும் முன் நன்கு யோசித்துக் கொள்ளும்! நீர் செய்யும் இந்த ஐந்தாவது சத்தியம் உம்மீது இறைத்தண்டனையை கட்டாயமாக்கிவிடும்” என்று கூறி எச்சரித்தார்கள். அதற்கு, ஹிலால் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் ஒரு போதும் என்னை தண்டிக்கவோ, வேதனை செய்யவோ மாட்டான்” என்று கூறியவாறு ஐந்தாவது முறை சத்தியம் செய்தார்கள்.
அதன் பின்னர் அப்பெண்மணி எழுந்து, அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தம்மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.
ஐந்தாவது முறை அவள் சத்தியம் செய்ய தயாரானபோது, சுற்றியிருந்த நபித்தோழர்கள் அப்பெண்மணியை நோக்கி “அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள். மறுமையின் தண்டனையை விட இம்மையின் தண்டனை மிக இலகுவாகும். ஆகவே, ஐந்தாவது சத்தியம் செய்யும் முன்பாக நன்கு யோசித்துக்கொள்! நீ செய்யும் இந்த ஐந்தாவது சத்தியம் உம்மீது அல்லாஹ்வின் தண்டனையை அவசியமாக்கிவிடும்” என்று கூறி எச்சரித்தார்கள்.
அப்போது, அப்பெண்மணி “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்னுடைய இந்த நிலைகண்டு என் சமூகத்தினர் ஒருபோதும் என்னை கேவலமாகக் கருதமாட்டார்கள்” என்று கூறியவாறு ஐந்தாவது முறை சத்தியம் செய்தாள்.
பின்பு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இருவரின் விவாக ஒப்பந்தத்தையும் ரத்து செய்தார்கள். “பிறக்கும் குழந்தைக்கும் ஹிலாலுக்கும் எந்த உறவும் இல்லை” என்று கூறினார்கள்.
“மேலும்,ஹிலாலைப்போன்று குழந்தை பிறந்தால் அது ஹிலாலுக்கு பிறந்த குழந்தை தான் என ஊர்ஜிதம் செய்து கொள்ளுங்கள்.
وقال إن جاءت به أصيهب أريسح حمش الساقين فهو لهلال ، وإن جاءت به أورق جعدا جماليا خدلج الساقين سابغ الأليتين ، فهو الذي رميت به “فجاءت به أورق جعدا جماليا خدلج الساقين سابغ الأليتين ، فقال رسول الله صلى الله عليه وسلم ” لولا الأيمان لكان لي ولها شأن
மேலும், இவளைக் கவனித்து வாருங்கள்! இவள் கரிய விழிகளும், பெருத்த புட்டங்களும், தடித்த கால்களும் உடைய பிள்ளையைப் பெற்றெடுத்தால் அது ஷரீக் இப்னு சஹ்மாவுக்கு பிறந்த குழந்தை என ஊர்ஜிதம் செய்து கொள்ளுங்கள்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
அது போன்றே அவளுக்கு பிறந்த குழந்தை அல்லாஹ்வின் தூதர் சொன்ன அருவருப்பான தோற்றத்துடன் பிறந்ததாக இருந்ததை நாங்கள் கண்டோம், இது பற்றி நபி {ஸல்} அவர்களிடம் நாம் கூறிய போது அல்லது இது பற்றி நபி {ஸல்} அறிந்து கொண்ட போது “இந்த விவகாரம் குறித்த லிஆன் இறைச்சட்டம் மட்டும் அருளப் பட்டிருக்காவிட்டால் நான் அவளைக் கடுமையாக தண்டித்திருப்பேன்” என்று கூறினார்கள்.
( நூல்: தஃப்ஸீர் குர்துபீ, இப்னு கஸீர், அல் மள்ஹரீ, ( வசனம் 6 – 10 ) மற்றும் ஸிஹாஹ் ஸித்தா அனைத்திலும் லிஆன் பாடத்தில். )