ஷரீஅத் சட்டங்களை மாற்ற முனைந்தால்..!

<span class=ஷரீஅத் சட்டங்களை மாற்ற முனைந்தால்..!" class="img-responsive wp-post-image" src="https://ahlussunnah.in/wp-content/uploads/2018/01/123-1170x700.jpg">

இவர்களின் நோக்கம் தான் என்ன?

  • இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் இல்லாமல் ஆக்குவது.

 يُرِيدُونَ أَنْ يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَنْ يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ 

“அல்லாஹ்வின் ஒளியைத் ( இஸ்லாமிய மார்க்கத்தை ) தம் வாயால் ஊதி அணைத்து விட அவர்கள் விரும்புகின்றார்கள். ஆயினும் அல்லாஹ் தன் ஒளியை நிறைவு செய்யாமல் விடமாட்டான். இறை நிராகரிப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!”    ( அல்குர்ஆன்: 9: 32 )

 

இஸ்லாம் என்பது இப்பூமியில் 4000 க்கும் மேற்பட்ட மதங்களில் இருந்தும் ஃபில்டர் செய்யப்பட்டு அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம் ஆகும். முஸ்லிம் என்கிற அடையாளம் இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு அல்லாஹ் அவனே சூட்டி அழகு பார்க்கும் பெயர் ஆகும்.

إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ

“திண்ணமாக, இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்ட வாழ்க்கை நெறி         ( மார்க்கம் – தீன் ) ஆகும்”.    (அல்குர்ஆன்: 3: 19 )

 

هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا

“மேலும், அவன் தனது பணிக்காக உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். மேலும், அவன் வழங்கிய மார்க்கத்தில் (இஸ்லாத்தில்) உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை.

உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் தான் இதற்கு முன்பும், இப்போதும் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயர் சூட்டியுள்ளான். தூதர் உங்கள் மீது சான்று வழங்குபவராகவும், நீங்கள் மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காக!”.         ( அல்குர்ஆன்: 22: 78 )

ஆக இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் மார்க்கம், முஸ்லிம் என்பதும் அல்லாஹ் வைத்த பெயர் உலகில் எவராலும் இஸ்லாத்தை இல்லாமல் ஆக்கவோ, முஸ்லிமை இஸ்லாத்தை விட்டும் பிரித்துப் பார்க்கவோ இயலாது.

 

  • ஷரீஆவின் சட்டங்களை மாற்றி விட வேண்டும்..

அல்லாஹ் தன் திருமறையில் மூன்று அம்சங்கள் எவ்வித மாற்றத்திற்கும் உள்ளாகாது எனப்பிரகடனப் படுத்துகின்றான்.

  1. அல்லாஹ்வின் படைப்புகள் அதன் இயற்கைத் தன்மைகளில் இருந்து மாறாது.

لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ

“அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அமைப்பில் மாறுதல் செய்ய முடியாது”. ( அல்குர்ஆன்: 30: 30 )

 

  1. அல்லாஹ்வின் நியதியில் யாதொரு மாற்றமும் நிகழாது…

فَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللَّهِ تَبْدِيلًا وَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللَّهِ تَحْوِيلًا 

“அல்லாஹ்வின் நியதியில் யாதொரு மாற்றத்தையும் எப்போதும் நீர் காணமாட்டீர். மேலும், அல்லாஹ்வின் நியதியை எந்தவொரு சக்தியாலும் திருப்பிட முடியும் என்பதையும் நீர் காணமாட்டீர்”.       ( அல்குர்ஆன்: 35: 43 )

 

  1. அல்லாஹ்வின் வார்த்தையில் மாற்றத்தைக் காண இயலாது….

لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ۚ

“அல்லாஹ்வின் வார்த்தைகள் ஒரு போதும் மாறக்கூடியவை அல்ல” ( அல் குர்ஆன்: 10: 64 )

 

  1. முஸ்லிம்களை இஸ்லாமிய நெறிகளைப் பின்பற்றுவதில் இருந்தும் தூரமாக்க வேண்டும்..

“வேதம் அருளப்பட்டவர்களில் பலர்  நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு விட்டதற்குப் பின்னர் உங்களை எவ்விதத்திலாவது நிராகரிப்பவர்களாய் திருப்பி விட வேண்டும் என விரும்புகின்றார்கள். சத்தியம் தமக்கு தெளிவாகி விட்ட பின்னரும் தங்களிடமுள்ள பொறாமையின் காரணமாக இவ்வாறு செய்ய முனைகின்றனர்”.       ( அல்குர்ஆன்: 2: 109 )

 

  1. முஸ்லிம் பெண்களை ஷரீஆவின் நீரோட்டத்தில் இருந்து விலக்கி, தேசிய மற்றும் ஆபாச நீரோட்டத்தில் திருப்பி விட வேண்டும்.

அதாவது தங்களை பெண் சமூகத்தின் பாதுகாவலர்களாக அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்களின் பாதுகாவலர்களாக சித்தரிக்கும் இவர்கள் தான் கடந்த காலங்களில் முஸ்லிம் பெண்களை கற்பழித்தனர். உயிரோடு தீயிட்டு கொளுத்தினர். கருவுற்றிருக்கும் பெண்களின் வயிற்றை கிழித்து சிசுவை சூலாயுதத்தால் கீறிக் கிழித்தனர். தற்போது முஸ்லிம் பெண்களின் கருவில் இந்து ஆணின் விந்துத்துளி இருக்க வேண்டும் என்று இளைஞர்களைத் தூண்டி லவ் ஜிஹாத் செய்து வருகின்றன. இவைகள் போதாதென்று முஸ்லிம் பெண்கள் ஷரீஆவின் கட்டுப்பாடுகளைத் தாண்டி வந்து இவ்வுலகத்தின் ஆசாபாசத்திலும், மோகத்திலும் வீழ்ந்து ஈமானை இழக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.

“இறைநம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவி விட வேண்டுமென இவர்கள் விரும்புகின்றார்கள். அத்தகையோருக்கு இம்மையிலும், மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனை உண்டு. அல்லாஹ் அறிகின்றான். நீங்கள் இதை அறிவதில்லை”. ( அல்குர்ஆன்: 24: 19 )