நபியின் தோழர்களான ஸபாபாக்கள் அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொண்டதாக அல்குர்ஆனில் சான்றுபகர்கின்றான். அவர்களின் தன்மைகளைஇ சிறு சிறு பண்புகளில் இருந்து பெண்ணம் பெறும் பண்புகள் வரை தனித்தனியேஅல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களைப் பின்பற்றியவர்கள் சுவனவாதிகள் என்றும்இ அவர்களின் ஈமானைப் போன்றேஇஅவர்களின் தியாகங்களைப் போன்றே ஒவ்வொரு முஸ்லிமின் ஈமானும்இ தியாகமும் இருக்க வேண்டும் என்றும் அல்குர்ஆனில்அல்லாஹ் புகழாரம் சூட்டி மகிழ்கின்றான்.
அவர்கள் தொட்டதை எல்லாம் அல்லாஹ் துலங்கச் செய்தான். அவர்களின் காலடி பட்ட இடங்களிலெல்லாம் இஸ்லாம்இஈமான் எனும் சுடரால் இலங்கச் செய்தான்.
அவர்கள் யார்? அவர்களின் சொல்லில் இஸ்லாம் இருந்ததுஇ அவர்களின் செயலில் இக்லாஸ் இருந்ததுஇ அவர்களின்இதயத்தில் இறைபயம்இ அவர்களின் சிந்தனையில் இறை நினைவு நிரம்பியிருந்தது.
அவர்களின் இறைநம்பிக்கையில் ஷிர்க்இ குஃப்ர்இ நிஃபாக் – இணைஇ நிராகரிப்புஇ நயவஞ்சகம் இருக்கவில்லைஇ அவர்களின்தியாகத்தில் கிப்ர் – பெருமை இருக்கவில்லைஇ அவர்களின் ஈகையில் ரியா – முகஸ்துதி இருக்கவில்லைஇ அவர்களின் வணக்கஇவழிபாடுகளில் ஃகஃப்லத் – அலட்சியம்இ உஜுப் – தற்பெருமை இருக்கவில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் ஆசையாக சுவனம் இருந்தது. அவர்கள் அஞ்சி நடுங்கும் இடமாக மண்ணறையும்இநரகமும் இருந்தது.
அல்லாஹ்வும்இ அல்லாஹ்வின் தூதரும் {ஸல்} அவர்களும் ஒன்றைச் செய்யுமாறு கட்டளையிட்டால் மறுப்பேதுமின்றிஉடனடியாக செய்தார்கள்.
அல்லாஹ்வும்இ அல்லாஹ்வின் தூதரும் ஒன்றைச் செய்யக்கூடாது என்று ஆணையிட்டால் ஏன்? எதற்கு? எப்படி? என்கிறஎவ்வித கேள்வியுமின்றி அக்கணமே அக்காரியத்தில் இருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டார்கள்.
இத்தகைய உயர் நிலைகளையும்இ பண்பாடுகளையும் அவர்கள் கொண்டிருக்க அடிப்படைக்காரணமாய் அமைந்ததுஅவர்களின் ஈமான் – இறைநம்பிக்கைக்குப் பின்னால் இறையச்சமும்இ முழுக்கஇ முழுக்க இறைவனுக்கும்இ இறைத்தூதருக்கும்கட்டுப்படுதல் என்கிற அம்சமும் தான்.
இறையச்சத்தையும்இ இறைவனுக்கும்இ இறைத்தூதருக்கும் கட்டுப்படுதல் என்கிற இந்த அம்சத்தையும் அவர்களுக்குரமழானின் மூலமாகவே கற்றுக் கொண்டார்கள் என்றால் அது மிகையல்ல.
ரமழானில் ஓரிரு நாட்கள் நோன்பு நோற்றவரிடம் ஏற்பட்ட மாற்றம்!!!
وقد قدم جرير بن عبد الله سنة عشر المدينة ومعه من قومه مائة وخمسون رجلا فأسلموا وبايعوا
عن جرير بن عبد الله البجلي قال: لما دنوت من المدينة أنخت راحلتي فحللت عيبتي ولبست حلتي وانتهيت الى رسول الله صلى الله عليه وسلم وهو يخطب فسلمت عليه وعلى المسلمين فقلت لجليسي هل ذكر رسول الله أمري نعم ذكرك بأحسن الذكر فبينما هو يخطب إذ عرض له في خطبته فقال يطلع عليكم من هذا الباب رجل من خير ذي يمن على وجهه مسحة ملك قال فحمدت الله على ما أبلاني عن جرير بن عبد الله البجلي انه جاء إلى النبي وهو في بيت مدحوس من الناس فقام بالباب فنظر النبي يمينًا وشمالاً فلم ير موضعا فأخذ النبي رداءه فلفه ثم رمى به إليه فقال: اجلس عليه، فأخذه جرير فضمه وقبله ثم رده على النبي وقال: أكرمك الله يا رسول الله كما أكرمتني فقال رسول الله “إذا أتاكم كريم قوم فأكرموه” قال جرير: فبسط رسول الله فبايعني وقال “على أن تشهد أن لا إله إلا الله وأني رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتنصح المسلم وتطيع الوالي وإن كان عبدا حبشيا فقال: نعم، فبايعه وروى مسلم في صحيحه عن جرير بن عبد الله البجلي قال: قال لي رسول الله “يا جرير ألا تريحني من ذي الخلصة” وكان بيتا يعبد في الجاهلية يقال له الكعبة اليمانية قال فنفرت في خمسين ومائة فارس وكنت لا أثبت على الخيل فذكرت ذلك لرسول الله فضرب يده في صدري، فقال “اللهم ثبته واجعله هاديًا مهديًا قال: فانطلق فحرقها بالنار ثم بعث جرير إلى رسول الله رجلا يبشره يكنى أبا أرطاة منا فأتى رسول الله فقال له: ما جئتك حتى تركناها كأنها جمل أجرب فبرّك رسول الله على خيل أحمس ورجالها خمس مرات
ஹிஜ்ரி பத்தாம் ஆண்டுஇ ரமளான் மாதத்தின் ஒரு வெள்ளிக்கிழமை -ஜும்ஆதினத்தன்று ஜரீர் இப்னு அப்துல்லாஹ் அவர்கள் தங்களின் பஜீலீ கோத்திரத்தார்களில் 150 நபர்களோடு யமனிலிருந்துமாநபியைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும்என்கிற பேராவலோடு மதீனாவுக்கு வருகை தந்திருந்தார்.
அல்லாஹ்வின் தூதரைச் சந்திக்கச் செல்வதால்இ அழகிய ஆடையொன்றை அணிந்து கொண்டார். அவர்களின் கோத்திரத்தாரும் அப்படியே அழகிய ஆடைகளை அணிந்து கொண்டனர்.
மஸ்ஜிதுந் நபவீயை அடைந்ததும்இ வெளியிலிருந்த மரத்தில் தங்களது குதிரைகளைக் கட்டினர்; பள்ளிவாசலுக்குள் நுழைந்த போது மாநபி {ஸல்} அவர்கள் குத்பா நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அப்படியே அனைவரும் அமர்ந்து கொண்டார்கள்.
அப்பொழுதுதான் பள்ளியில் அமர்ந்திருந்த நபித்தோழர்களெல்லாம் தம்மைக் கடைக்கண்ணால் பார்ப்பதை உணர்ந்தார் ஜரீர்.
ஏன் இப்படி நம்மை உற்றுப்பார்க்கின்றார்கள்? என்று புரியாமல் திணறிய ஜரீர் இப்னு அப்துல்லாஹ் அவர்கள் ”என்னைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஏதேனும் கூறினார்களா? என்று அவருக்கு அருகே அமர்ந்திருந்தவரிடம் கேட்டார்கள்.
அப்போதுஇ அவர் ஆம்! நீரும்இ உமது கோத்திரத்தாரும் பள்ளிவாசலின் உள்ளே நுழையும் முன் மாநபி {ஸல்} அவர்கள் தங்களது உரையின் இடையே “என் நம்பிக்கைக்குரிய தோழர்களே!இ “யமன் மக்களில் மிகச் சிறப்பான ஒருவர்இ இந்த வாசல் வழியாகஉள்ளே வரப்போகிறார்; அவரது முகம் மலக்குகளைப் போல் சுடரொளி வீசும்” என்று கூறினார்கள்.
அப்போதுஇ நான் அல்லாஹ்வைப் புகழ்ந்தேன்.
ஜும்ஆத் தொழுகை முடிந்ததும் ஜரீர் இப்னு அப்துல்லாஹ் அவர்களும்இ அவர்களின் கோத்திரத்தார்களும் நபியவர்களைச்சந்திக்க முன்பகுதிக்கு வந்தார்கள்.
அப்போதுஇ முன்னே வர இடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த ஜரீர் இப்னு அப்துல்லாஹ் அவர்களை நோக்கி மாநபி {ஸல்} அவர்கள் தங்களின் மேனியில் இருந்த மேல்துண்டை எடுத்து எறிந்து அதன் மீது அமருமாறு கூறினார்கள்.
இதைச் சற்றும் எதிர்பாராத ஜரீர் இப்னு அப்துல்லாஹ் அவர்கள் “அதை கையில் எடுத்துஇ கண்களில் ஒத்தி எடுத்துஇ நெஞ்சோடு அணைத்துஇ முத்தமிட்டு பின்பு நபி {ஸல்} அவர்களின் கரங்களில் கொடுத்து “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னை நீங்கள் சங்கை செய்தது போன்றுஇ அல்லாஹ்வும் உங்களை சங்கைப் படுத்துவான்” என்று வாழ்த்தினார்கள்.
அதைப் பெற்றுக் கொண்ட மாநபி {ஸல்} அவர்கள். “மரியாதை பெறுவதற்குத் தகுதியுடைய மக்கள் உங்களைச் சந்திக்கவரும்பொழுது அவர்களை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று உபசரியுங்கள்” என்று கூறினார்கள்.
பின்னர்இ ஜரீர் இப்னு அப்துல்லாஹ் அவர்களிடம் மாநபி {ஸல்} அவர்கள். “என்ன காரணத்திற்காக நீரும்இ உமது கோத்திரத்தாரும் வந்துள்ளீர்கள்?” என்று வினவினார்கள்.
அதற்குஇ ஜரீர் அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நானும்இ எனது சமூகமும் தங்களைச் சந்தித்து இஸ்லாத்தைஏற்றுக்கொண்டுஇ எங்களது உறுதிமொழியை அளிக்க வந்துள்ளோம்இ”
மகிழ்ச்சியில் முகம் மலர்ந்த மாநபி {ஸல்} அவர்கள் “வாருங்கள்! உறுதிமொழி ஏற்றுக்கொள்ளுங்கள்! வணக்கத்திற்குரியவன்அல்லாஹ் ஒருவனன்றி வேறில்லை என்றும்இ நான் அவனால் அனுப்பப்பட்ட உண்மையான நபி என்று ஏற்றுக்கொள்ளுங்கள்!
இதன்பின்னர்இ நீங்கள் கடமையான தொழுகையைச் சரிவரப் பேணித் தொழவேண்டும்; உங்கள் செல்வத்தில் இருந்து ஜகாத்அளிப்பதும் உங்கள் மீது கடமையாகும்; ரமளான் மாதத்தில் நீங்கள் கட்டாயம் நோன்பு நோற்க வேண்டும். உங்களால் இயலுமானால்ஹஜ் கடமை நிறைவேற்ற வேண்டும்.
முஸ்லிம்கள் அனைவருக்கும் நீங்கள் நல்லதையே நாட வேண்டும். அவர்களிடம் நீங்கள் இரக்கம் காட்ட வேண்டும். ஒருவன்பிறரிடம் இரக்கம் கொள்ளாவிட்டால் அல்லாஹ் அவன் மீது இரக்கம் கொள்ளமாட்டான் என்பதைக் நினைவில் வையுங்கள்!உங்களுக்குத் தலைவராக நியமிக்கப்படுபவர் – அவர் பலவீனமான கோத்திரத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும் – அடிபணியுங்கள்;ஒத்துழையுங்கள்!” என்று கூறி உறுதிமொழி கூறுமாறு மாநபி {ஸல்} அவர்கள் பணித்தார்கள்.
அந்த குழுவிற்கு ஜரீர் இப்னு அப்துல்லாஹ் தலைமையேற்று வந்திருந்ததால் அனைவர் சார்பாகவும் அவரே பேசினார்.
மேலும்இ “அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தின் இந்த அனைத்துக் கட்டளைகளுக்கும் நாங்கள் முற்றிலுமாக கட்டுப்படுகிறோம். மனமாற வாக்குறுதி அளிக்கின்றோம்” என்று கூறியவறாக முன்னே நகர்ந்து சென்று மாநபி {ஸல்} அவர்களின் பரிசுத்த உள்ளங்கையில் தம் உள்ளங்கையைப் பதித்து உறுதியளித்தார் ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்.
ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) இஸ்லாத்தை ஏற்றுஇ ஓரிரு நாட்கள் கழிந்ததுஇ இஸ்லாமியக் கடமைகளை கற்றறிந்துஇ அதை நடைமுறையும் படுத்தினார்கள்.
அது ரமழான் மாதமாக இருந்ததால் ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நோன்பு நோற்று இருந்தார்கள்.
ஒரு நாள் ஜரீர் (ரலி) அவர்களை அருகே அழைத்த மாநபி {ஸல்} அவர்கள் அவர்கள் “துல்கலஸாவின்கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிப்பீர்களா?” என்று கேட்டார்கள்.
அந்தக் கேள்வியைக் கேட்டு உடனடியாக உற்சாகமடைந்த ஜரீர் இப்னு அப்துல்லாஹ். “அல்லாஹ்வின் தூதரே! இத்தகுபணிக்கு என்னைத் தாங்கள் தேர்ந்தெடுத்தது எனக்கு கிடைத்த நற்பேறாகும்!
உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிய நான் தயார்இ வெகுவிரைவில் இதுபற்றி நற்செய்தி தங்களை வந்தடையும். ஆனால்…”அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் உடல் ரீதியான ஒரு குறைபாடொன்று இருக்கின்றது என்றார்கள்.
“எனது உடல்நலக் குறையின் காரணத்தால் குதிரையின்மீது அமர்ந்து சவாரி செய்வது எனக்குக் கடினமாய் இருக்கிறது. சிலசந்தர்ப்பங்களில் பயணிக்கும்போது குதிரையிலிருந்து நான் சரிந்து கீழே விழுந்து விடுகிறேன்” என்று கூறினார்கள்.
எனவேஇ அல்லாஹ்வின் தூதரே! எனக்காக நீங்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள். எனக்கு உடலில் வலிமை ஏற்படவேண்டுங்கள்” என்றும் கூறினார்கள்.
இதைக் கேட்ட நபியவர்கள் தங்களது கையால் ஜரீர் (ரலி) அவர்களின் நெஞ்சின் மீது அடித்தார்கள். “இறைவா! இவரைஉறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும்இ நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
பின்னர்இ மாநபி {ஸல்} அவர்கள் இட்ட பணியை நிறைவேற்ற ‘அஹ்மஸ்’ என்றொரு குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பதுவீரர்களைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டார்கள் ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி).
ஜரீர் இப்னு அப்துல்லாஹ்வின் தலைமையிலான இந்த படை. துல் கலஸாவை நெருங்கியதும் அங்கிருந்த மக்கள் இலேசாகஎதிர்த்துப் பார்த்தார்கள். அதையெல்லாம் மிக எளிதாக எதிர் கொண்டு இ துல்கலஸாவின் வழிபாட்டு ஆலயம் உடைத்துஇ எரித்து எஇட்ட பணியை வெற்றிகரமாய் நிறைவேற்றி முடித்தார்கள்.
பின்னர்இ ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த ‘அபூஅர்தாத்’ என்பவரை அழைத்துஇ “மதீனா சென்றுஅல்லாஹ்வின் தூதரிடம் இந்த நற்செய்தியை பகருங்கள்” என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.
மதீனா வந்து நபியவர்களைச் சந்தித்த அல் அர்தாத்இ “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்களைச் சத்திய மார்க்கத்துடன்அனுப்பியவன் எவனோ அவன் மீது ஆணையாக! துல் கலஸாவை சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போல் ஆக்கிவிட்டோம்” என்று கூறினார்.
இதைக் கேட்டு மகிழ்வடைந்த மாநபி {ஸல்} அவர்கள் ”அஹ்மஸ்’ குலத்தாருக்கும் அவர்களின் குதிரைகளுக்கும் அருள்வளம்அளிக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். ஐந்து முறை அவ்வாறு பிரார்த்தித்தார்கள்.
துல்கலஸா என்றால் என்ன?
கஅபா இறை ஆலயத்திற்கெதிராக அப்ரஹா மன்னன் யமனில் நிறுவிய மிகப்பெரும் தேவாலயம் ஒன்றை அமைத்தான்.மக்காவாசிகளுக்கும்இ அப்ரஹா மன்னனுக்கும் ஏற்பட்ட யுத்தம் ஒன்றில் அந்த வழிபாட்டு ஆலயம் மக்காவாசிகளால் தீக்கீரையாக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அப்ரஹா மன்னன் கஅபாவை இடிக்க யானைப்படையுடன் புறப்பட்டு வந்தான். அல்லாஹ்வின் தண்டனையால் படைஇ பரிவாரங்களோடு அழிந்தும் போனான்.
பின்னர் இயமனில் அப்ரஹாவும் அவன் நிறுவிய ஆலயமும் அழிந்து விட்டிருந்தாலும்இ அங்கிருந்த சில குலத்தாருக்குகஅபாவுக்குப் போட்டியாய் இன்னொரு வழிபாட்டுத்தலம் நிறுவ வேண்டும் என்ற ஆசை மட்டும் விடவில்லை. அதன் பின்னணியி உருவானது ‘துல்கலஸா’.
ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் ‘பஜீலீ’ குலமும் மற்றொரு குலமான ‘கஸ்அம்’ குலத்தினரும் இந்ததுல்கலஸாவைத் தங்களுக்கு ஆலயமாக ஆக்கிக்கொண்டனர். அது யமனில் தபலா எனும் ஊரில் இருந்ததாக ஒரு குறிப்புத்தெரிவிக்கிறது. அதில் பலிபீடங்கள் எல்லாம் உருவாக்கி வைத்துக் கொண்டு பெருமளவில் உருவ வழிபாடுஇ அனாச்சாரங்கள் என்றுநடாத்திக் கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில் அது ‘யமன் நாட்டுக் கஅபா’ என்று சொல்லுமளவுக்குப் பிரபலமடைந்துவிட்டது.
மக்கா வெற்றி கொள்ளப்பட்டதன் பின்னரும் அந்த ஆலயம் அகற்றப்படாமல் இருப்பதை நினைத்து கவலை கொண்டிருந்த மாநபி {ஸல்} அவர்களுக்கு ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் வருகை புது நம்பிக்கையைத் தந்தது.
( நூல்: தபகாத் இப்னு ஸஅத்இ ஸியரு அஃலா மின் நுபலாஇ உஸ்துல் ஃகாபா )
17 நாட்களின் ரமழான் ஏற்படுத்திய மாற்றம்!!!
நபித்துவத்தின் 15 –ஆம் ஆண்டுஇ மதீனாவில் அடியெடுத்து வைத்திருந்த 2 –ஆம் வருடத்தின் ஒரு நாள் பொழுதின் உதயநேரத்தில்..
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
”இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் மீது ஏனைய சமூக மக்களின் மீது கடமையாக்கப்பட்டது போன்று நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாக மாற்றம் பெரும் பொருட்டு”
அது வரை வல்லோனின் தூதை செவியேற்று இன்பமடைந்திருந்த அம் மேன்மக்கள் அப்போது தான் வல்லோனின் கட்டளைக்கு உருவாக்கம் கொடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.
புதியதொரு கட்டளைஇ எத்தனை ஆண்டுகளோஇ எத்தனை நாட்களோ இதை செய்ய ரஹ்மான் கட்டளையிடுகின்றானோ எனும் பதை பதைப்பு அம்மக்களின் இதயங்களில் ஊடுருவும் முன் அடுத்து அல்லாஹ்வே அதற்கான தெளிவையும் பிறப்பித்தான்.
أَيَّامًا مَعْدُودَاتٍ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ
எண்ணப்படுகின்ற குறிப்பிட்ட நாட்கள்.
அடுத்து அந்த நாட்களின் மகோன்னதம் குறித்து அல்லாஹ் சிலாகித்துக் கூறினான்.
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
ரமழான் மாதம்இ அது எத்தகையதென்றால் மக்களுக்கு நேர்வழியையும்இ தெளிவையும் பிரித்துக் கூறுகின்ற குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதம்.
பிறகென்ன அம்மேன்மக்களின் வாழ்க்கையில் இறையச்சம் பிரவாக மெடுத்து ஓடியதை இன்ன பிற இறைக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்ட போது பார்க்க முடிந்தது.
அல்லாஹ் அந்த ஒற்றைக் கட்டளையின் மூலம் எது உருவாகும் என்று சொன்னானோஇ அதை பரிசோதிக்க திடீரென அடுத்த சோதனையாகஇ அதே ஆண்டில்இ அதே மாதத்தில்இ சில தினங்களில் பத்ரின் வடிவத்தில்.
பத்ருக்கான தயாரிப்பில் அம்மேன்மக்கள் முன் மொழிந்த வீர வார்த்தைகளை வரலாறு பதிந்து வைத்திருக்கிறது.
அல்லாஹ்வின் கட்டளையை அம்மக்கள் அணுகிய விதம் அல்லாஹ்வை ஆனந்தப்படுத்தியது. அல்லாஹ்வும் அம்மக்களை வெற்றியை கையில் வழங்கி ஆனந்தப்படுத்தினான். ஆம்! பத்ரில் மாபெரும் வெற்றியை நல்கினான்.
இரண்டு ஆண்டு ரமழான் ஏற்படுத்திய மாற்றம்!!!
لما نزل قوله تعالى:{ يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ} (المائدة: 90)؛ أخذ هذه الآية بعض الصحابة وذهب بها إلى أماكن شرب الخمر بالمدينة ليبلغهم التحريم؛ قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: “إِنِّي لَقَائِمٌ أَسْقِي أَبَا طَلْحَةَ، وَفُلاَنًا وَفُلاَنًا، إِذْ جَاءَ رَجُلٌ فَقَالَ: وَهَلْ بَلَغَكُمُ الخَبَرُ؟ فَقَالُوا: وَمَا ذَاكَ؟ قَالَ: حُرِّمَتِ الخَمْرُ، قَالُوا: أَهْرِقْ هَذِهِ القِلاَلَ يَا أَنَسُ، قَالَ: فَمَا سَأَلُوا عَنْهَا وَلاَ رَاجَعُوهَا بَعْدَ خَبَرِ الرَّجُلِ ” (البخاري)؛
அல்லாஹ் 5:90இ92இ93. ஆகிய இறைவசனங்களை இறக்கியருளினான். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மது தடை செய்யப்பட்டதாக அறிவித்த போது அம்மக்கள் மதீனாவின் வீதிகளில் மதுப்பானைகளைக் கொட்டினார்கள். அதன் காரணமாக தெருக்களில்மது ஆறு ஓடியதாகக் கூட வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள்.
அனஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நன்கு புளித்த மது எங்களிடம் இருந்து வந்தது; அபூதல்ஹாஇ அபூ அய்யூப் {ரலி}ஆகியோருக்கும்இ இன்னும் சிலருக்கும் அதிலிருந்து நான் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
அப்போது என்னருகே ஒருவர் வந்துஇ “மதுபானங்களை அருந்துவதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தடை செய்துவிட்டார்கள்” என்று கூறினார்.
உடனேஇ அங்கிருந்தோர் அனைவரும் மதுபானங்கள் வைத்திருந்த குடுவைகளையும்இ மண்பாண்டங்களையும் அப்படியப்படியேகவிழ்த்துக் கொட்டி விடுமாறு கூறிவிட்டனர்.
இச்சட்டம் வந்ததும் அவர்களில் எவருமே ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அம்மனிதர் தெரிவித்த செய்தியை அவமதிப்பும்செய்யவில்லை.
( நூல்:புகாரிஇபாடம்:பாபு ஸப்புல் கம்ரி ஃபித்தரீக்கி )
ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு ஷவ்வால் மாதம் உஹத் யுத்தத்திற்குப் பின்னர் மது தடை செய்யப்பட்டது.
நான்காண்டு ரமழான் ஏற்படுத்திய மாற்றம்!!!
فعن صفية بنت شيبة قالت: بينا نحن عند عائشة، فذكرنا نساء قريش وفضلهن. فقالت عائشة، رضي الله عنها: إن لنساء قريش لفضلا وإني -والله -وما رأيت أفضلَ من نساء الأنصار أشدّ تصديقًا بكتاب الله، ولا إيمانًا بالتنزيل. لقد أنزلت سورة النور:{ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ }، انقلب إليهن رجالهن يتلون عليهن ما أنزل الله إليهم فيها، ويتلو الرجل على امرأته وابنته وأخته، وعلى كل ذي قرابة، فما منهن امرأة إلا قامت إلى مِرْطها المُرَحَّل فاعتجرت به، تصديقًا وإيمانًا بما أنزل الله من كتابه، فأصبحْنَ وراء رسول الله صلى الله عليه وسلم الصبح معتجرات، كأن على رؤوسهن الغربان.” (تفسير ابن كثير؛ و أخرجه أبو داود بنحوه بسند صحيح)
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: ”அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முஹாஜிர் பெண்களுக்குஅல்லாஹு அருள்புரிவானாக! சூரத்துன் நூரிலே அல்லாஹுத்தஆலா ஹிஜாபுடைய ஆயத்தை இறக்கியவுடன் அவர்களின்மேலதிகமான ஆடைகளைக் கிழித்து அதைக் கொண்டு தங்கள் முகத்தை மூடிக் கொண்டார்கள்.
மேலும்இ ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: ”அல்லாஹ்வின் வேதத்தை உண்மைப்படுத்துவதிலும்அவன் இறக்கி வைத்ததை ஈமான் கொள்வதிலும் அன்சாரிப் பெண்களை விட சிறந்தவர்களை நான் பார்த்ததில்லை. சூரத்துன் நூரிலே அல்லாஹு அவர்களுடைய ஹிமார்களைக் கொண்டு அவர்களுடைய மார்புப் பகுதிகளின் மீது போட்டுக் கொள்ளட்டும் என்றஆயத்தை இறக்கி வைத்ததும் அவர்களின் ஆண்கள் அவ் வசனம் இறக்கிவைக்கப்பட்டதை விரைந்து வந்து அப் பெண்களிடம் ஓதிக்காண்%