முப்பது பிடிக்கா மூதேவிகள்

ரமளான் பிறை 29 அன்று பிறை பார்க்க வேண்டும், பிறை தென்படாவிட்டால் ரமளானை முப்பதாக முழுமைப்படுத்த வேண்டும் என்பது நபி மொழியும், நபி வழியுமாகும். ஆனால், முப்பது (ஜுஸ்வு) படிக்கா, மூத்த அறிஞர்கள் கருத்து விளங்கா இந்த நவீன முட்டாள்கள், இல்லையில்லை பாக்கியம் இழந்த மூதேவிகள் முப்பதாம் நோன்பு என்பதையே இல்லாமலாக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் என்பது கண்கூடு.

ஒவ்வொரு வருடமும் ரமளான் 29 அன்று இவர்களில் நான்கு பேருக்கு மட்டுமே பிறை தென்படுவதும், அதை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் பெருநாள் கொண்டாட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் அராஜகத்தின் உச்சம்..

நேற்று வரை நீ திருடன், நீ ஒழுக்கங்கெட்டவன் என்று நேரலையில், முகநூலில் சண்டையிட்டுக் கொண்டிருந்த கொள்ளைச் சகோதரர்கள் அனைவரும் இன்று ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுகிறார்கள்…

இவர்களில் யாருக்குமே ஏன் ரமளான் முதல் பிறை, ஷஃபான் 29 அன்று தென்படுவதில்லை என்பதும் மில்லியன் டாலர் கேள்வி… ஒருவேளை இவர்கள் ஷவ்வால் பிறை மட்டுமே பார்க்க முயற்சிப்பார்களோ? அடியார்களில் அமல்களில் குறை ஏற்படுத்த வேண்டும் என்பது ஷைத்தானியச் சிந்தனை..

உன்னுடைய தூய்மையான அடியார்களைத் தவிர மற்றனைவரையும் வழிகெடுப்பேன் என்பதுதான் இறைவனிடத்தில் அவன் விட்ட சவால்.. அச்சவாலை நிறைவேற்றுவதற்கு அவனுடைய படையினர் பூமி முழுவதும் சுற்றி வருகின்றனர்.. இந்த நவீன …………களும் இதே இனம்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.. அமல்களில் குறை ஏற்படுத்தவேண்டும் என்பது இவர்களின் தாரக மந்திரம்.. இருபதை எட்டாக்கினார்கள்.. நல்ல அமல்களை அடியார்களுக்கு எட்டாமல் ஆக்கினார்கள்..

மேலதிக அமல்கள் புரிந்தால் பித்அத் என்றார்கள், போதாது எனில் ஷிர்க் கடையும் விரித்தார்கள்;.. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த அமல்கள் எல்லாம் இன்று அருகிவிட்டன.. எல்லாப் பெருமையும் இவர்களையேச் சாரும்…

கொரோனா வைரஸ் உடலுக்குள் புகுந்தால் இவ்வுலகில் நாம் இருப்பதற்கு காரணமான உயிருக்குத்தான் உலை வைக்கும்.. ஆனால் கொரோனாவை விட கொடூரமான இந்த வைரஸ்கள் நம்முள் புகுந்தால் மறுமை வாழ்வின் வெற்றிக்கான தூய ஈமானுக்கே உலை வைக்கும்…ரமளானின் இறுதி நாளான இன்று கொரோனாவுக்கு மட்டுமல்ல, இந்த கொடூர மார்க்கக் கொள்ளைக் கொரோனாக்களுக்கும் வல்ல அல்லாஹ் முற்றுப்புள்ளி வைப்பானாக! ஆமீன்…

–              அபுல் புஷ்ரா ஜமாலி