ஷரீஅத் சட்டங்களை மாற்ற முனைந்தால்..!

<span class=ஷரீஅத் சட்டங்களை மாற்ற முனைந்தால்..!" class="img-responsive wp-post-image" src="https://ahlussunnah.in/wp-content/uploads/2018/01/123-1170x700.jpg">

 

நாட்டை ஆளும் பா.ஜ.க. நடுவண் அரசு 18 மாநிலங்களில் ஆளும் தலைமைப் பொறுப்பில் இருப்பதாலும், மக்களவையில் அருதிப் பெரும்பான்மை வகிப்பதாலும், மாநிலங்களவையில் முதலிடத்தில் இருப்பதாலும், இன்னபிற மாநிலங்களில் வளர்ச்சியடைந்து வருவதாலும் இந்திய இறையாண்மையின் மீதும், ஜனநாயகத்தின் மீதும், மதச்சார்பின்மையின் மீதும் அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்ற வெகுஜன குடிமக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை சமூக மக்களின் மீதும் புதியபுதிய சட்டங்களை இயற்றி, அதிகார துஷ்பிரயோகம் செய்து, அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து வருவதை இந்த தேசத்தின்குடிமகனாய் அதை அனுபவித்து வரும் எவரும் மறுக்க முடியாது.

அந்த வகையில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது முதற்கொண்டு சிறுபான்மை சமூகமான இஸ்லாமிய சமூகத்திற்கெதிரான எல்லா வகையான திட்டங்களையும் மிகவும் முனைப்போடு செயல் படுத்தி வருவதை இந்த தேசத்தின் குடிமக்கள் அனைவரும்அறிவார்கள்.

பொதுசிவில் சட்டத்தை இலக்காகக் கொண்டு அதை முழு அளவில் நடை முறை படுத்தும் பொருட்டு முஸ்லிம் தனியார்சட்டத்தில் ஒவ்வொன்றாக இந்த நாட்டில் இல்லாமல் ஆக்க வேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டு முத்தலாக்கை கையில் எடுத்து நீதிமன்றம், மக்களவை, மாநிலங்களவை என்று ஓடிக் கொண்டு இருப்பதை நாம் பார்த்துவருகின்றோம்.

முத்தலாக் தடை சட்ட மசோதாவை பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மக்களவையில் தாக்கல் செய்து, வெற்றி கண்ட ஆளும் நடுவண் அரசு பா.ஜ.க, 3/1/2018 தேதியன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்து வெற்றி பெற்று விட்டால் முத்தலாக் தடை சட்டத்தை நடைமுறை படுத்தி விடலாம் என்று பகல் கனவு கண்டிருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பினால், நிறைவேற்ற முடியாமல் போனது. ஆகவே, இன்று தாக்கல் செய்து வெற்றி பெற்று விடலாம் என முயற்சி மேற்கொண்டிருக்கிறது பா.ஜ.க.

பா.ஜ.க.வின் பகல் கனவு பலிக்காமல் போகட்டும். மக்களவையில் நிறைவேறியது போன்று மாநிலங்களவையில்நிறைவேறினாலும் இந்த ஷரீஅத்தில் ஏதாவது குறைந்து போய் விடுமா? என்றால் நிச்சயம் குறைந்து போகாது.

இந்த நேரத்தில் முத்தலாக் தடை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்புகள் தெரிவித்த அனைத்துக் கட்சி மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.