பந்தயம் கட்டிப் பரிசு பெறலாம்

சூரிய உலகில் சுன்னத்வல் ஜமாஅத்

நேரிய பாதை நிர்ணயச் செய்த

வீரிய மிக்க விதைப்போல் தோன்றிச்

சூரிய மாற்றும் கவித்துவம் கொண்டது!

 

சந்தனம் வெளிச்சம் தரவல்ல தெது?

சிந்தனை இருட்டை சிதைக்க வல்லதெது?

பந்தயம் கட்டிப் பரிசு பெறலாம்

சுந்தர மிக்க சுன்னத் ஜமா அத்தை!

 

சுன்னத் ஜமாஅத்என்று சொல்லத் துணிவது

அண்ணல் நபிகளின் அடிச்சுவ டாகும்!

இன்னல்,  இடுக்கன் இலாத தெதுவெனல்

கன்னல் நபிகளின் கவினார் கொள்கை!

 

தெள்ளத் தெளிந்த தேனார் வழியென

சொல்லத் துணிவோம் சுன்னத்வல் ஜமாஅத்தை!

கொள்ளத் தக்கது,  கூவத் தக்கது

அள்ளத் தக்கது ஆம், சுன்னத் ஜமாஅத்தே!

                                           –  தத்துவக் கவிஞர்

                                                  இ. பதுருத்தீன்