அண்ணலாரும் அறிவியலும் – தொடர் 1

றைவன் தன் அடியார்களுக்கு 4 விதமான வேதங்களை தன்னுடைய நபிமார்களுக்கு அனுப்பி வைத்து போதிக்கச் செய்தான்.

இந்த வேதங்கள் அந்தந்த காலகட்டத்தில் மக்கள் எதில் திளைத்திருந்தார்களோ அதன் அடிப்படையில் வேதங்கள் அந்தந்த நபிமார்களுக்கு அனுப்பி வைத்தான்

நபி தாவூத் (அலை) அவர்களின் காலத்தில் இசை மோனோக்கி இருந்தது.. எனவே சபூர் வேதத்தை இசை வடிவில் அருளப்பட்டது. அதனை தாவூத் (அலை ) அவர்கள் ஒதிக் காட்டும் போது அந்த இசைக்கு ஆட்பட்டு மலைகளும் , பறவைகளும் துதி செய்தனஎன்பதாக குர் ஆனில் (21.79) குறிப்பிடுகின்றான்.

நபி மூஸா (அலை) அவர்களின் காலத்தில் மாந்திரீகம் மேனோக்கி இருந்தது .எனவேதான் பிர்அவ்ன் மாந்திரிகர்களை அழைத்து வந்து நபி மூஸா (அலை) அவர்களுடன் போட்டியிடச் செய்தான் .

நபி ஈஸா (அலை) அவர்களின் காலத்தில் மருந்துவம் மேனோக்கி இருந்தது. மக்களில் நிறைய பேர் மருத்துவர்களாக இருந்தனர் ஆனாலும் வெண்குஷ்டம் , முடவர்கள், குருடர்கள் இவர்களை குணப்படுத்த முடியவில்லை. நபி ஈஸா (அலை) அவர்கள் குணப்படுத்திக் காட்டினார்கள்.

நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றும் கூட்டத்தார்கள் அறிவியலில் மேனோக்கி இருக்கிற இக்காலக் கட்டத்தில் அறிவியலின் உச்சமான செயல்பாட்டை எழுந்து படிக்கத் தெரியாத உம்மி நபியவர்களிடம் செய்து காட்டச் சொன்னார்கள். சந்திரனை பிளக்கக் கேட்டார்கள் நபியவர்களும் சந்திரனை பிளந்து காட்டினர்கள் சந்திரனும் பிளந்து விட்டது .குர்ஆன் (54 : 01)

நபியவர்களை விண்வெளிக்கு இறைவன் அழைத்து வரச் செய்து , பல அற்புதங்களை காட்டினான். குர்ஆன் 17 : 01

அதே சமயம் நபியவர்களின் மக்களை நோக்கி , “மனித, ஜின் கூட்டத்தார்களே..! நீங்கள் வானங்கள் .பூமியின் எல்லையைக் கடந்து சென்று விட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள் ஆயினும் மிகப் பெரும் தக்க பலத்தைக் கொண்டே தவிர நீங்கள்செல்லமுடியாது”. குர்ஆன். ( 55 : 33)

விண்வெளிக்கு பறந்து செல்லவும் அதே சமயம் தக்க பலத்தைக் குறித்து அறிவுறுத்தமும் செய்கிறான்.

விஞ்ஞானிகள் வியாழன் கிரகத்திற்கு பயோனியர் (pioneer ) விண்கலத்தை அனுப்பினார்கள்

சந்திரனில் மனிதன் காலடியைப் பதித்தான் .சந்திரயேன் விண்கலத்தைக் கொண்டு சந்திரனில் தண்ணீரைக் கண்டான்.செவ்வாய் கிரகத்திற்கு மாங்கல்யானை அனுப்பி வைத்தான்.

மற்றும் செயற்கை கோள்களை விண்ணில் அனுப்பி பூமியை உள்ளங்கையிலும் , பூமியின் எல்லை புறங்களை விரல் நுனியிலும் அதி நவீன விஞ்ஞானத்தால் வருடச் செய்தான் .

அதே அதி நவீன விஞ்ஞானத்தால் மனிதன் மருத்துவத்தில் மாற்றம் கொண்டு வந்தான் .

தகவல்தொடர்பு முதல் கணனி உட்பட அத்தனையிலும் அகல கால் பதித்தான் பறவையை விடவும் பல ஆயிரம் தூரங்களை பறந்து களிப்புற்றான் .

இப்படி எத்தனையோ அருள்களை மனிதன் சுகிப்பதற்கு அதி நவீன விஞ்ஞானத்தை சாதகமாக்கினான். அத்தனை விஞ்ஞான துறையும் அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களுடைய சமுதாயத்திற்கு வழங்கினான் .

“நபியே … உங்களை உலகத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை குர்ஆன் (21 : 107)

அருள் என்பதில் கூட மனிதன் சுகிக்கும் அத்தனை விஞ்ஞான சாதனங்களின் பயன்பாட்டையும் சேர்த்துதான்,

 

வருஷிக்கப்பட்ட இன்னொரு பூமி

இப்பிரபஞ்சத்தில் பூமியும் நம்மைத் தவிர வேற்று கிரகதத்தில் உயிரினங்களோ மனிதர்களோ இருக்கிறார்களா ?அவ்வாறு இருந்தால் நம்மை அவர்கள் பார்த்திருக்கிறார்களா ? நாம்தான் அவர்களைப் பார்க்க முடியுமா ?

இப்படி எண்ணற்ற கேள்விகள் நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் கேட்கவும், தேடவும் செய்கிறோம்.

பறக்கும் தட்டுகள் (U. F. O ) வேற்று கிரகங்களில் இருந்து பூமிக்கு வந்து போனதாகவும், பல நாடுகளில் இச்செய்திகள் பலமாக பதியப்பட்டுள்ளது.

வேற்று கிரக வாசிகள் பூமியில் எதற்காக வரவேண்டும் ? அவர்களின் நோக்கம் என்ன என்பது பற்றி நிறைய பேர்கள் புத்தகம் புத்தகமாக எழுதி இருக்கிறார்களேத் தவிர ஆனால் இதுவரை “இதோ வேற்று கிரக வாசி இவர்தான் “என்று யாருமே நிரூபிக்கவில்லை . என்றாலும் அவர்களின் பல போட்டோக்கள் போலியானது என்று ஒதுக்கினாலும் சில போட்டோக்கள் தேர்ந்த விஞ்ஞானிகளையும் . கேமரா நிபுணர்களையும் தலை சுற்ற வைக்கிறது.

குர்ஆனில் சில வசனங்கள் சூசகமாக இது பற்றி விவரிக்க மாதிரியான நிறைய வசனங்கள் இருக்கின்றன.

“பூமிக்குள் பதிகின்றவைகளும் , அதில் இருந்து வெளிப்படும் இவைகளையும், வானத்தில் இருந்து இறங்குபவைகளையும் , அதன் பக்கம் ஏறுகின்றவைகளையும் அவன் நன்கறிவான். ” குர்ஆன் (34 : 02)

இது விஷயமாக நபி (ஸல்) அவர்கள்,

” நீங்கள் அறியாததையும் அவன் சிருஷ்டிப்பான் ” குர்ஆன் ( 16 : 08) என்ற குர்ஆன் வசனத்திற்கு விளக்கமளிக்கையில் ” இவ்வுலகைப் பார்க்கிலும் 30 மடங்கு பெரியதாக உள்ள வெண்மையான பூமியை அல்லாஹ் சிருஷ்டித்துள்ளான் .நம் பூமியில் பச்சை நிறமும் நீல நிறமும் அதிகமாக இருப்பது போல் அக்கிரகம் வெண்மை நிரம்பி இருக்கிறது.அதில் இறைவனது சிருஷ்டிகளான மக்கள் நிரம்பி இருக்கின்றனர் .அக்கிரக மக்கள் அல்லாஹுத்தலாவுக்கு ஒரு கணப்பொழுதேனும் மாறு செய்வதே இல்லை” என்று கூறினார்கள் .

அப்பொழுது நபித்தோழர்கள்

“அம்மக்கள் ஆதமுடைய மக்களைச் சேர்ந்தவர்களா-…?”

“ஆதமை அல்லாஹ் படைத்திருக்கிறான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள் என்றார்கள் நபிகளார் (ஸல்) அவர்கள்.

“அவர்களில் இப்லீஸை எங்கே…? என்று கேட்டனர் .

“அல்லாஹ் இப்லீஸை சிருஷ்டித்திருக்கிறான் என்பதையும் அம்மக்கள் அறிய மாட்டார்கள். என்றார்கள்.

ஆதாரம் : அல் புஸ்தான்

 

பூமிக்கு மிக அருகிலேயே பூமியை விட 30 மடங்கு பெரிய புதிய பூமி இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி , ஸ்டீவன் வாட் கூறுகையில் தண்ணீர், காற்று கொண்ட மற்றொரு பூமி இருக்கிறது. அதி நவீன தொலை நோக்கியில் பார்த்ததில் வளி மண்டலத்தில் சிறிய நட்சத்திரம் போல் அது சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அருகில் சென்றால் நம் பூமியை விட 30 மடங்கு பெரியதாக இருக்கும். அதில் உயிரினங்கள் வசிக்க 100 சதவீகித வாய்ப்பு இருக்கிறது என்றார்.

கலிபோர்னியா பல்கலைக்கழக வாஷிங்டன் கார்னிஜி ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்

ஆதாரம் :கலைக்கதிர் ஜூலை 2012 பக்கம் 55

(“மனிதர்களே…! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா படைத்திருக்கிறோம்.?) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு வானங்களையும் நாமே படைத்தோம். (அவை ஒவ்வொன்றிலும் உங்களைப் போன்று எத்தனையோ படைப்புகள் இருக்கின்றன. இவைகளைப் படைத்து இருப்பதுடன்) இப் படைப்புக(ளுக்கு வேண்டியவைக )ளைப் பற்றி நாம் பராமுகமாகவும் இருக்கவில்லை.

குர்ஆன் (23 : 17) ஆ கா அப்துல் ஹமீது பாகவி மொழி பெயர்ப்பு

 

மூன்று வினாக்கள்

அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக மதீனாவிலுள்ள யூதர்களின் தலைவராக இருந்தார்.

நபி மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பெற்ற தவ்ராத் வேதத்தைக் கற்றுணர்ந்த மாபெரும் வேத அறிஞராகவும், மேதையாகவும் இருந்தார்.

இவர் மனதில் தோன்றிய மூன்று வினாக்களுக்கு தவ்ராத்தில் தேடியும் பதில் கிடைக்காமல் அவ்வினாக்களுக்கு அவரின் மனதில் துருத்திக் கொண்டே இருந்தது.

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்ததும் அநேகர் இஸ்லாத்தை தழுவினாலும் இவர் தனக்குள்ள 3 கேள்விகளுக்கு நபியவர்கள் பதில் சொல்லாத வரை இஸ்லாத்தை ஏற்க இயலாது என்ற உறுதியுடன் இருந்தார்.

நபியவர்களைச் சந்தித்தித்து கேட்டார்;

1) உலகம் அழிவதற்கு முதல் அடையாளம் எது ?

2) உலகில் பிறக்கும் குழந்தைகளில் சிலர் தந்தையைப் போலவும் , சிலர் தாயைப் போலவும் உருவாவதற்கு என்ன காரணம் ?

3) சுவனவாசிகளுக்கு முதல் உணவு எது கொடுக்கப்படும் ?

நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்

1 ) உலகம் அழிவதற்கு முதல் அடையாளம் கீழைநாட்டில் தோன்றுகின்ற நெருப்பு மேல் நாடு வரை பரவி பின் உலகம் முழுவதும் பரவி உலகம் அழியும்.

2)சில குழந்தைகள் தந்தையைப் போலவும், சில குழந்தைகள் தாயைப் போலவும் உருவாவதற்குக் காரணம் கணவன் மனைவி உடலுறவின் போது கணவனின் விந்து மனைவியின் கர்ப்பப்பையில் முந்திச் சென்றால் குழந்தை தந்தையைப் போலவும் , மனைவியின் இந்திரியம் முந்திச் சென்றால் குழந்தை தாயைப் போலவும் பிறக்கும் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்

 

3) சுவனவாசிகளுக்கு கொடுக்கப்படும் முதல் உணவு மீனின் சினை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

இத்தனை தெளிவான பதிலால் உடனே அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள்.

நபி (ஸல்) அவர்களின் பதிலில் உள்ள விஞ்ஞானத்தை  சற்று விளக்கமாக தருகிறேன்.

 

1) உலகம் அழிவதற்கு முதல் அடையாளம் எது?

“கீழை நாட்டில் தோன்கிற நெருப்பு மேல் நாடு வரை பரவி பின் உலகம் அழியும் “

– நபி (ஸல்) அவர்கள்

தொழிற்சாலைகளில் ஏராளமான கரியை எரித்து கார்பன் டை ஆக்சைடை அதிகப்படுத்தினோம். கச்சா எண்ணெய்களை லாரி கார்களில் ஊற்றி கார்பன் டை ஆக்சைடை உருவாக்கி வானுக்கு அனுப்பினோம். நம்மையும்  நம் உணவையும் ஏசியில் குளிர வைத்தோம். மேலும் அதிலிருந்து  வெளியேறிய வாயுக்களால் வானத்து போர்வையான ஓஸோன் படலத்தை கிழித்தோம்

இவைகளால் மழை மறுத்தது இளவேனிற் கொதித்தது . நீர் வற்றி, நிலம் நகர்ந்து , கடல் உள்வாங்கி, பனி உருகி, நதியில் வெள்ளம் பெருகி, கடல் மட்டம் உயர்ந்து, நிலம் தாழ்ந்து , நீர் உயர்ந்து உலகம் அழிய நாமே காரணமானோம்.

“மனிதர்களின் கைகள் தேடிக் கொண்டதன் காரணமாகக் கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் அதிகம் பரவி விட்டன” குர்ஆன் (30 : 41)

2) சில குழந்தைகள் தந்தையைப் போலவும் சில தாயைப் போலவும் உருவாவதற்குக் காரணம் கணவன் மனைவி உடலுறவின் போது யாருடைய விந்து, இந்திரியம் முந்துதோ அவர்களின் சாயலில் குழந்தை பிறக்கும்.  நபி(ஸல் ) அவர்கள்

கணவன் வெளிப்படுத்தும் விந்துவில் அவனின் அங்க அடையாள குறிப்பும் அவனுடைய தாய் தந்தையர் மூதாதையரின் அங்க அடையாள குறிப்பும் இடம் பெற்றிருக்கும். இதையைப் போல மனைவி வெளிப்படுத்தும் இந்திரியத்திலும் அவளுடைய மற்றும் அவளின் மூதாதையரின் அங்க அடையாளக் குறிப்பும் இருக்கும்.

உதாரணமாக மனைவியின் கண் சாம்பல் நிறத்தில் இருந்தால் பிறக்கும் குழந்தையின் கண் சாம்பல் நிறத்தில் இருக்கலாம் .அல்லது இல்லாது போனால் பிறந்த குழந்தையின் மரபணுவில் “கண் நிறம் சாம்பல் “என்ற செய்தி கண்டிப்பாக பதிவாகி இருக்கும் . இரண்டு தலைமுறை தாண்டி அவளின் பேரக்குழந்தையின் கண் சாம்பல் நிறத்தில் இருக்கலாம் .

இதை விஞ்ஞானம் ஏற்கப்பட்ட மரபணு , நிராகரிக்கப்பட்ட மரபணு என்று குறிப்பிடுகிறது இதைதான் நபி (ஸல்) ரொம்ப எளிமையான யாருடைய விந்தணு முந்துதோ அவர்களின் சாயலில் குழந்தை பிறக்கும்

“நாம்தாம் அவர்களைப் படைத்தோம். நாம்தாம் அவர்களுடைய அமைப்பையும் உறுதிப்படுத்தினோம் . …..” குர்ஆன் ( 76 : 28)

3) சுவனத்தின் முதல் உணவு மீனின் சினை . நபி(ஸல்) அவர்கள்

காரணம் மீனின் சினையில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் மற்றும் டொகோசா ஹெக்சானிக் போன்ற அமிலங்கள் உள்ளன.

இவைகள் ஞாபக சக்தியை அதிகமாக்கும் மதிநுட்பமான விஷயங்களில் மிகத் தெளிவு ஏற்படும் என்பதை லண்டன் பல்கலை கழகத்தினர் கண்டுள்ளனர்

சுவனவாசிகளுக்கு மீன் சினை கொடுப்பதற்கு காரணம் மரணிப்பதற்கு முன் அவர்கள் உலகில் வாழ்ந்த வாழ்க்கை மறந்து போகிறது மீன் சினையிலுள்ள ஓமேகா-3 போன்ற அமிலங்கள் நினைவூட்டலாம்

உதாரணமாக

“நூறு ஆண்டுகள் வரையில் மாணத்திருக்கச் செய்து பின்னர் உஜைரை உயிர்ப்பித்து, ” இந் நிலையில் நீங்கள் எவ்வளவு காலம் இருந்தீர்கள் எனக் கேட்க, அவர். “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் இருந்தேன் ” குர்ஆன் (2 : 259)

“விசாரணைக் காலம் நிலைபெறும் நாளில் குற்றவாளிகள் தாங்கள் இவ்வுலகில் ஒரு நாழிகையைத் தவிர அதிக நாட்கள் தங்கி இருக்கவில்லை” என்று சத்தியம் செய்வார்கள்

குர்ஆன் ( 30 : 55)

 

சுவனவாசிகளானாலும் சரி, நரகவாசிகளானாலும் சரி அவர்களின் பூலோக வாழ்க்கை மரணத்திற்குப் பிறகு மறந்தே போகிறது. அதனை ஞாபகமூட்டவே மீன் சினை சுவனத்தில் கொடுக்கப்படலாம் .

 

ஆக்கம் : ரஹ்மத் ராஜகுமாரன்