வரலாற்று சிறப்பு மிக்க தலைமைகள்

1سيد البشر حضرت ادم عليه السلام

 மனிதர்களின் தலைவர் ஆதம் அலைஹிஸ்ஸலாம்.

2-سيد العرب النبي صلي الله عليه وسلم

அரேபியர்களின் தலைவர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

3-سيد الشهور رمضان

மாதங்களின் தலைவர் ரமலான்.

4-سيد الليالي ليلة القدر

இரவுகளின் தலைவர் லைலதுல் கத்ரு.

5-سيد الفرس حضرت سلمان الفارس

பாரசீகத்தின் தலைவர் ஸல்மானுல் பாரிஸீ ரலியல்லாஹு அன்ஹு.

6-سيدالروم حضرت صهيب رضي الله عنه

ரோம் நகர த்தலைவர் ஸுஹைப் ரலியல்லாஹு அன்ஹு.

7-سيد الحبش بلال رضي الله عنه

கருப்பினத்தின் தலைவர் பிலால் ரலியல்லாஹு அன்ஹு.

8-سيد الحيتان الحوت الذي كان يونس في بطنه

மீன்களின் தலைவர் யூனுஸ் நபியை 40-நாட்கள் தன் வயிற்றில் வைத்திருந்த மீன்.

9-سيد النوق نوق صالح عليه السلام.

ஒட்டகங்களின் தலைவர் நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அற்புதமாக அல்லாஹ் வழங்கிய ஒட்டகம்.

10-سيد الافرس البراق

குதிரைகளின் தலைவர் நபியவர்களுக்கு மிஃராஜ் பயணத்தில் உதவியாக இருந்த புராக் வாகனம்.

11-سيد الخواتم خاتم سليمان عليه السلام.

மோதிரங்களின் தலைவர் சுலைமான் நபியின் மோதிரம்.

12-سيد القري مكة

கிராமங்களின் தலைவர் மக்கா.

13 سيد الاحجار الحجر الاسود

கற்களின் தலைவர் அல்ஹஜருல் அஸ்வத்.

14-سيد الاودية بيت المقدس

பள்ளத்தாக்குகளின் தலைவர் பைத்துல் முகத்தஸ்.

15سيدالابار ماء زمزم

கிணறுகளின் தலைவர் ஜம் ஜம்.

16-سيد الكتب  القرءان

வேதங்களின் தலைவர் அல்குர்ஆன்.

17-سيد القرءان البقرة

அல்குர்ஆனின் தலைவர் அல் பகரா அத்தியாயம்.

18-سيد البقرة اية الكرسي

அல் பகராவின் தலைவர் ஆயத்துல் குர்ஷீ.

19 سيد العصا عصا موسى

கைத்தடிகளின் தலைவர் நயில் நதியைப்பிழக்க மூஸா அலைஹிஸ்ஸலாம் பயன்படுத்திய கைத்தடி.

20سيد الايام يوم الجمعة

நாட்களின் தலைவர் வெள்ளிக்கிழமை.

நூல் அத்தப்ஸீருல் கஷ்ஷாப்.

தகவல்

மவ்லவி அப்ஸலுல் உலமா அல்ஹாஜ்

எஸ் முகமது அலி ஹஜ்ரத் பாஜில் மன்பயி லால்பேட்டை பேராசிரியர் மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி லால்பேட்டை