யோகா அது ஆகா

 

மூஸா நபி (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதம்  தவ்ராத். அது உண்மையான வேதம் தான். அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் அந்த வேதத்தை நான் தொழுகையில் ஓதலாமா?  என்று கேட்ட பொழுது “ஓ ஈமான் கொண்டவர்களே! இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்” (2 ; 208) என்று அல்லாஹ் வசனத்தை இறக்கினான். அந்த வேதம் அல்லாஹ்வின் வேதம் தான். அல்லாஹ் சொன்னது தான். மாற்றப்படாத வேதம்  தான் அவரிடம் இருந்தது.ஆனால் ஓதக் கூடாது என்று அல்லாஹ்  சொல்லி விட்டான் என்றால், அனுமதிக்கப் பட்ட விஷயம் கூட அது முறையாக இல்லை என்று வருகிற பொழுது தடுக்கப் படுகின்றது.

ஆக யோகா என்பது ஏன் கூடாது என்றால், ஒன்று, அது ஷிர்க்கின் அடிப்படையில் அமைந்தது.

இரண்டாவது ;  எம்மதமும் சம்மதம் என்ற இஸ்லாத்திற்கு முரணான கொள்கையின் அடிப்படையில் அமைந்தது.

மூன்றாவது ;  அதில் அல்லாஹ் என்று சொன்னாலும் நினைத்தாலும் அது கூடாது. ஏனென்றால், அந்த அல்லாஹ்வை சொல்லித்தரும் குருவானவர் அல்லாஹ்வை உள்ளது உள்ள படி ஏற்றுக் கொள்ளாதவர்.

நான்காவது ;  முஸ்லிம்களில் வழிகெட்டவர்களிடம் குர்ஆன் ஹதீஸை ஓதினால் அதை கற்றுக் கொண்டால் அந்த உஸ்தாதின் வழிகேடும் சேர்ந்து நமக்குள் சென்று விடும். அவ்வாறிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்களைக் குருவாக ஏற்றுக் கொண்டு நாம் எந்தப் பயிற்சியை செய்தாலும் அவர்களின் ஷிர்க்கான அந்தக் கொள்கைகளும் சேர்ந்து உள்ளே சென்று விடும்.

எனவே எந்த வகையிலும் “யோகா “என்பது அது ஈமானுக்கு உலை வைக்கக் கூடியது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இன்னும் நிறைய விஷயம் இருக்கின்றது. என்றாலும் நீங்கள் விளங்கிக் கொள்ள இந்த விஷயங்கள் போதுமானது என்ற அடிப்படையில் நான் நிறைவு செய்கின்றேன்.

யோகாவை அது ஒரு மதம் சார்ந்த வழிபாடு என்ற காரணத்தினால் இஸ்லாத்தில் அதற்கு அனுமதி இல்லை. இதல்லாமல் மதம் சாராத மதசார்பற்ற உடற்பயிற்சி அது அனுமதிக்கப்பட்டது.அதற்கு இஸ்லாத்தில் எந்தத் தடையுமில்லை.

எனவே நாம் நிம்மதி பெறுவதற்கும் வெற்றி அடைவதற்கும் அல்லாஹ் இன்னும் ரசூலின் வழியே நமக்கு போதுமானது. குர்ஆனைக் கொண்டு நாம் நிம்மதி பெற முடியும். திக்ரைக் கொண்டு நாம் நிம்மதி பெற முடியும். அந்த சத்திய மார்க்கத்தை நாம் பின்பற்றுவதற்கு அல்லாஹ் நமக்கு தவ்ஃபீக் செய்வானாக! ஆமீன்.

மவ்லானா, S.S அஹ்மது பாகவி

இமாம் & கதீப் மஸ்ஜித் இந்தியா-மலேசியா