மனித எந்திரம்

 

இந்த இயந்திர மனிதர்களுக்குப் பல்லாயிரக் கணக்கான கிகாபைட் மெமரி, எக்ஸ்ரே அறிவு, அல்ட்ராசவுண்ட், ராடார், இன்டர்நெட் மூலம் சமிக்ஞைகள் அனுப்பும் திறன் ஆகியவை இருக்கும்.  சுருக்கமாகச் சொன்னால் மனித எந்திரமாக இருக்கும்.

லண்டனுக்கும் தெற்கிலுள்ள ரெடிங் பல்கலைக் கழகத்தின் சைபர் னெட்டிக் துறை பேராசிரியராக இருக்கும் ‘கெவின் வார்விக்’ தனது நரம்பு மண்டலத்தை ஒரு கம்ப்யூட்டருடன் இணைப்பதற்காகத் தன் உடலில் ஒரு மைக்ரோசிப் வைத்துக் கொண்டிருக்கிறார்.

கெவின் வார்விக் தனது பரிசோதனை, மனித மூளைக்கும் நரம்பு மண்டலத்திற்கும் இடையிலான இணைப்புகளைப் பற்றி முக்கியமான புதிய தகவல்களைத் தரும் என்று பரிபூர்ணமாக நம்புகிறார்.  இதில் கண்டு பிடிக்கப்படும் தகவல்களைக் கொண்டு பார்வையற்றவர்கள் பார்க்கவும், முடவர்கள் எழுந்து நடக்கவும் முடியும் என்பதாக கூறியுள்ளார்.

இறைவன் நபி ஈஸா(அலை) அவர்களுக்கு கொடுத்த இந்த அற்புதத்தை விஞ்ஞானிகள் மருத்துவ அறிவியல் துறையில் முயன்று பார்க்கிறார்கள்.

இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு ஈஸாவை ஒரு தூதராக ஆக்குவான் என்று இறைவன் கூறினான்.  பின்னர் ஈஸா பிறந்து தன் வாலிபத்தை அடைந்து இஸ்ராயீலின் சந்ததிகளிடம் சென்ற பொழுது, அவர்களை நோக்கிக் கூறியதாவது “நிச்சயமாக நான்  உங்கள் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட ஒரு தூதர்.  அதற்காக உங்களுக்கு ஒரு அத்தாட்சி கொண்டு வந்திருக்கின்றேன்.  உங்களுக்காக களி மண்ணிலிருந்து பறவையைப் போல் செய்து அதில் நான் ஊதுவேன்.  அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது பறக்கும் பறவை ஆகிவிடும்.  பிறவிக் குருடனையும், வெண்குஷ்டரோகியையும் நான் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மரணித்தோரையும் நான் உயிர்ப்பிப்பேன்.  நீங்கள் புசித்தவைகளையும் உங்கள் வீட்டில் நீங்கள் சேகரித்து வைத்திருப்பவைகளையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன்.     (அல்குர் ஆன் 3:49)     

கெவின் வார்விக் மனித நரம்பு மண்டலத்தை ஒரு கம்ப்யூட்டருடன் இணைத்து மனித மூளையில் பதிய வைக்கும் தகவல்களைக் கொண்டு அம்மனிதர்களால் அரிய பெரும் காரியங்களை எல்லாம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறார்.  உண்மையில் மனித மூளையை சுமார் 10 சதவிகிதத்திற்கு கீழ் தான் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது.  அறிவியலின் மாபெரும் மேதையான ஆர்பர்ட் சென்ஸ்டனின் மூளைகூட வெறும் 6 சதவிகிதம் தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் மூலமாக மூளையில் அதிக இடங்களில் தகவல்களை பதிய வைப்பதற்காகத்தான்  இத்தனை அதிக சதவிகித  இடம் காலியாக இருக்கிறதா?  என்ற எண்ணம் விஞ்ஞானிகளை ரொம்பவும் ஆர்வமூட்டுகிறது.

எழுதப் படிக்கத் தெரியாத கிராமவாசியின் மூளையில் இந்த மாதிரி தகவல்களை பதிவு செய்து அந்த கிராமவாசியை பட்டணவாசியைவிட ஒருபடி மேலே  உயர்த்தி நன்கு படித்தவர் போல் ஆக்கிவிட முடியும் என மருத்துவ விஞ்ஞானம் நம்புகிறது.

அமெரிக்க மருந்து நிபுணர் ‘டானியல் கீஸ்’ என்பவர் இந்த மாதிரி ஆபரேஷனை நேரடியாக மூளையில் செய்யலாம் என்று வெள்ளெலிக்கும் முயலுக்கும் செய்து ஆச்சரியப்படதக்க முடிவுகளை வெளியிட்டார்.  ஆனால் மனித மூளை ரொம்பவும் சிக்கலான சமாச்சாரம் இதில் ஆபரேஷன் மூலம் பதிவு என்பது சற்று கற்பனையாகத் தான் இன்னும் இருக்கிறது.  மேலும் மனித மூளை ஆபரேஷனில் ஒரு சிக்கல் இருக்கிறதாக ஸ்ட்ராஸ் என்று ஒரு டாக்டர் அறிவிக்கிறார்.  எத்தனை வேகமாக மனித மூளை செயற்கையாக அறிவை பெறுகிறதோ, அத்தனை விரைவில், ஏன் அதைவிட அதிகவிரைவில் ஒன்று விடாமல் மறந்துவிடும்.  கூடவே ஏற்கனவே பெற்றிருந்த அறிவு,  ஞாபகங்களும் மறந்து போகலாம் என்கிறார்.

மனிதமூளை மற்றும் நரம்பியல் மருத்துவத்தால் அநேக நோய்களை குணப்படுத்தவும் மனித மூளையில் பதிவுகளை செய்து மிகப்பெரிய அறிவுத்திறன் கொண்ட மனிதர்களை உருவாக்கவும் முடியும் என விஞ்ஞானம் எதிர்பார்க்கிறது.  செயற்கை அறிவு பெற்றறவர்கள் மனிதயந்திரமாக இருப்பார்களா?  அல்லது மனிதர்களாக இருப்பார்களா?  காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

 ரஹ்மத் ராஜகுமாரன்