தங்களின் மேலான கவனத்திற்கு!

      நல்லெண்ணம் நிரம்பப்பெற்ற தங்களின் மேலான கவனத்திற்கு,..

       “அஹ்லுஸ் சுன்னாஆசிரியர் மௌலவி  A. R. ஃபரீதுத்தீன் மஹ்ளரியின் கனிவான முகமன்              

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

எல்லாம் வல்ல ரஹ்மானாகிய அல்லாஹ் தங்களின் வாழ்க்கைத் தரத்தை

அனைத்து வழிகளிலும் உயர்த்துவானாக.. ஆமீன்!                         

இன்றைய வாழ்விற்குத் தேவையான அனைத்து துறைகளிலும் நம் முஸ்லிம் சமுதாயம் பெரிதும் பின்தங்கியுள்ளது என்பதை நாம் அறிவோம். அதிலும் குறிப்பாக ‘மீடியா’ எனப்படும் ஊடகத்துறையில் விரல்விட்டு எண்ணப்படும் நிலையே மிகைத்து நிற்கிறது. நம் சமூகத்திற்கு ஏற்படும் பல்வேறு அவலங்களையும் இழப்புகளையும் வெளிச்சமிட்டுக் காட்டவும் நமது உரிமைகள் என்னவென்று அறிந்து அதனைப் போராடிப் பெற்றிடவும் சுன்னத் வல்ஜமாஅத் கொள்கை அடிப்படையில் இதுபோன்ற ஊடகம் மிகவும் அவசியமானதே.

ஒவ்வொரு தனிமனிதனும் சேர்ந்ததுதான் சமூகம். எனவே தனிமனிதனின் உணர்வும் வேட்கையும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் புரட்சியும் போராட்டமும் அச்சமூகத்தையே சாரும். ஏனெனில் ஒரு தனிமனிதனின் வீரியமும் போராட்டமும் தான் சமூகத்தின் நிலைகளை மாற்றியமைத்துள்ளது என்ற வரலாற்றுப் பேருண்மையை நாம் அறிவோம். அந்த வகையில் தனிமனதனாய் எனக்குள் எழுந்த போராட்டமும் வீரியமும்தான் இந்த எழுத்துப்பணி.. அதன் கனிதான் தற்போது வெளிவந்துகெண்டிருக்கும் அஹ்லுஸ் சுன்னாமாத இதழ்.

விதைகள் மட்டுமே மரங்களாக நிமிர்ந்து நிற்க இயலாது. மாறாக அவைகளைத் தாங்கும் நிலமும் மழை நீரும் தேவை என்பது போல் நான் வெறும் விதைதான். நிலம் போல், மழைபோல் உங்களின் மாபெரும் ஒத்துழைப்பு அனைத்து வகையிலும் குறிப்பாக பொருளாதார வகையில் இருந்தால்தான் இந்த விதை மேலோங்கி வளர்ந்து மரமாகி நம் சமுதாயத்திற்கு நிழலும் கனியும் தரவல்லதாகும் என்பதை உங்கள் சிந்தையில் பதியவைக்கிறேன்.

அனைத்து ஊடகத்தின் ஊட்டசத்து பொருளாதாரம்தான் என்பதை நன்குணர்ந்த நீங்கள், விளம்பரம் / ஆயுள் சந்தா / வருடச் சந்தா போன்றவைகளை ஏற்பாடு செய்து நம் இஸ்லாமிய ஊடகம் வாழ வழி செய்வீர்கள் என்று எதிர்பார்;க்கிறேன்.    

மேலும் இதுகுறித்து தாங்கள் ஏதேனும் கருத்துக் கூற விரும்பினால்   99621 99621 / 044-65554434 என்ற எண்களுக்கோ, அல்லது நமது முகவரிக்கோ கடிதம் எழுதலாம். அல்லது info@ahlussunnah.in என்ற மின்னஞ்சல் வழியாகவோ தங்களின் கருத்துக்களைப் பதிவுசெய்யலாம்.                    

அன்புடன்

ஆசிரியர்