ஜன்னதுல் பகீஃ

<span class=ஜன்னதுல் பகீஃ" class="img-responsive wp-post-image" src="https://ahlussunnah.in/wp-content/uploads/2018/11/albaqi.jpg">

ஜன்னதுல் பகீஃ

 

 

عن عائشة أنها قالت كان رسول الله صلى الله عليه وسلم كلما كان ليلتها من رسول الله صلى الله عليه وسلم يخرج من آخر الليل إلى البقيع فيقول « السلام عليكم دار قوم مؤمنين وأتاكم ما توعدون غدا مؤجلون وإنا إن شاء الله بكم لاحقون اللهم اغفر لأهل بقيع الغرقد » مسلم-2299

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதிநாட்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வோர் இரவின் பிற்பகுதியிலும் (மதீனாவிலுள்ள) “பகீஉல் ஃகர்கத்” பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு (பின்வருமாறு) கூறுவார்கள்: அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ அத்தாக்கும் மா தூஅதூன கதன் முஅஜ்ஜலூன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன். அல்லாஹும்மஃக்ஃபிர் லி அஹ்லி பகீயில் ஃகர்கத்.

(பொருள்: இந்த அடக்கத்தலத்தில் உள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள்மீது சாந்தி பொழியட்டும்! நீங்கள் நாளை சந்திக்கப்போவதாக வாக்களிக்கப்பட்ட ஒன்று, தவணை அளிக்கப்பட்ட பின்னர் உங்களிடம் வந்துவிட்டது. நாங்கள் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். இறைவா! பகீஉல் ஃகர்கதில் உள்ளோருக்கு நீ மன்னிப்பளிப்பாயாக!) (முஸ்லிம் –1773)

 

ஜன்னதுல் பகீஃ என்பது முள் மரங்கள் நிறைந்த பூமியாகும். ஆதனால் அதற்கு ‘பகீவுல் கர்கது’ என்று பெயர் வந்தது. நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த பிறகு, முஸ்லிம்களுக்கென்று பிரத்தியோகமான ஒரு மையவாடியை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தபோது, “ஜன்னதுல் பகீஃ” இருக்கும் இடத்தில் வந்து, ‘இந்த இடம்தான் அது என்று நான் பணிக்கப்பட்டேன்’ (முஸ்தத்ரக் ஹாகிம் 11:193) என்று கூறினார்கள். எனவே, இந்த இடத்தை முஸ்லிம்கள் அடக்கஸ்தலமாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

 

عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعٍ ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْتَادُ لأَصْحَابِهِ مَقْبَرَةً يُدْفَنُونَ فِيهَا ، فَكَانَ قَدْ طَلَبَ نَوَاحِي الْمَدِينَةِ وَأَطْرَافِهَا ، ثُمَّ قَالَ : أُمِرْتُ بِهَذَا الْمَوْضِعِ يَعْنِي الْبَقِيعَ وَكَانَ يُقَالُ بَقِيعُ الْخَبْخَبَةِ. (الحاكم فى المستدرك- 4867

முஸ்லிம்களுக்கென்று பிரத்தியோகமான ஒரு மையவாடியை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தபோது, மதீனாவின் பல இடங்களிலும் தேடிப்பார்த்தார்கள். இறுதியில், “ஜன்னதுல் பகீஃ” இருக்கும் இடத்தில் வந்து, ‘இந்த இடம்தான் அது என்று நான் பணிக்கப்பட்டேன்’ என்று கூறினார்கள். எனவே, இந்த இடத்தை முஸ்லிம்கள் அடக்கஸ்தலமாக ஆக்கிக்கொள்ளுங்கள். இதற்கு முன்வு இதை ‘ஜன்னதுல் கப்கபா’ என்று அழைக்கப்பட்டது என்று கூறினார்கள். (முஸ்தத்ரக் ஹாகிம்-486)

 

ஹிஜ்ரி 8-ம் ஆண்ணு ‘பத்ருப்போர்’ முடிந்த பிறகு உஸ்மான் பின் மள்கூன் (ரளி) அவர்கன் வஃபாத்தானார்கள். அன்னாரை நபி (ஸல்) அவர்கள் முத்தமிட்டார்கள். அவர்களது கன்னத்தில் நாயகத்தின் புனித கண்ணீர் வழிந்தோடியது. (திர்மிதி) அவரை ஜன்னதுல் ஃபகீயில் நல்லடக்கம் செய்யுமாறு நபியவர்கள் ஏவினார்கள். இவரே முதன் முதலில் ஜன்னதுல் பகீஃயில் நல்லடக்கம் செய்யபட்ட பாக்கியத்தை இஸ்லாமிய வரலாற்றில் இடம் பிடித்தவர் ஆவார்.

 

10 ஆயிரத்தும் மேற்பட்ட சஹாபக்கள், தாபியீன்கள், உலமாக்கள், அவ்லியாக்கள், சாலிஹீன்கள் இதில் நல்லடக்கம் செய்யபட்டுள்ளனர். இதில் நல்லடக்கம் செய்யப்பட்டோருக்கு கண்மனி நாயகம் (ஸல்) அவர்களது ஷஃபாத் உண்டு என்பதனால்  கோடானகோடி முஸ்லிம்களின் ஆசையும், மதீனாவில் மரணித்து ஜன்னதுல் பகீஃயில் நல்லடக்கம் செய்யப்படவேண்டும் என்பதே ஆகும். எனவேதான், மதீனாவில் மரணிக்கும் ஒவ்வொருவரும் இதிலேயே நல்லடக்கம் செய்யப்படுகின்றனர்.

 

فقال لِي:يَا أُمَّ قَيْسٍ. قُلْتُ: لَبَّيْكَ وَسَعْدَيْكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ:لَتَرَيِنَّ هَذِهِ الْمَقْبَرَةَ يَبْعَثُ اللَّهُ مِنْهَا سَبْعِينَ أَلْفًا يَوْمَ الْقِيَامَةِ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ. فَقَامَ عُكَّاشَةُ، فَقَالَ: وَأَنَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ:وَأَنْتَ. فَقَامَ آخِرُ، فَقَالَ: وَأَنَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ:سَبَقَكَ بِهَا عُكَّاشَةُ .(المعجم الكبير للطبرانى – 20952

நபி (ஸல்) அவர்கள் உம்மு கைஸ் (ரளி) அவர்களை அழைத்தார்கள், இதோ! இருக்கிறேன் நாயகமே என்றார்கள். (அவர்களிடம்) இந்த மையவாடியிலிருந்து மறுமைநாளில் பணிரெண்டாம் இரவின் பைளர்ணமி நிலவைப்போல் பிரகாசமான எழுபது ஆயிரம் நபர்களை அல்லாஹ் எழுப்புவான். அவர்கள் எழுந்து சென்று எவ்வித விசாரணையுமின்றி சுவர்க்கத்தில் நுழைவர் என்றார்கள். அப்போது, (அவர்களில்) நானுமா யாரஸுல்லாஹ்? என்று கேட்டேன். ஆம் (உக்காஷா!) நீரும்தான் (அக்கூட்டத்தில் ஒருவர்) என்றார்கள். இன்னொருவர் நான் யாரஸுல்லாஹ்? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், (ஒரு வாய்ப்புதான் இருந்தது) உக்காஷா உங்களை முந்திக்கொண்டார் என்று கூறினார்கள். (முஃஜமுல் கபீர் தப்ரானீ-20952)

 

ஜன்னதுல் பகீஃயில் அடங்கியுள்ள பிரபல்ய சஹாபாக்கள் & தாபியீன்கள்

சஃது பின் ஜைது பின் நுஃபைல் அல்கர்ஷீ,

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபுல் கர்ஷீ,

அப்துல்லாஹ் பின் மஸ்வூதுல் ஹத்லீ,

அப்துல்லாஹ் பின் அபீ பக்கர் சித்தீக்,

உபை பின் கஃபுல் அன்சாரி,

உஸைது பின் ஹுளைர்,

உஸாமா பின் ஜைது,

அவ்ஸ் பின் தாபித் பின் அல்முன்திர்,

அவ்ஸ் பின் கவ்லீ பின் அப்துல்லாஹ் அன்சாரி,

அஸ்அது பின் ஜராரா,

அர்கம் பின் அபில் அர்கம்,

ஜாபிர் பின் அப்துல்லாஹ்,

ஜப்பார் பின் சக்ருல் அன்சாரி,

ஜுபைர் பின் முத்யிம் அல்கர்ஷீ,

ஹாரிஸ் பின் குஜைமா அபூ பிஷ்ர்,

ஹகீம் பின் ஹிஷாம் பின் குவைலித்,

ஹஸ்ஸான் பின் ஸாபித்,

ஹஜ்ஜார் பின் அலாத் அஸ்ஸுல்மா,

ஹாதப் பின் அபீ பல்தஃ அல்லக்மீ,

ஹுவைதிப் பின் அப்துல் உஜ்ஜா அர்கர்ஷீ,

கப்பாப் (உத்பாவின் அடிமை) கஃபாஃப் பின் ஐய்மீ அல்கப்பார்,

குவைலித் பின் அம்ர் அபூ ஷரீஹ் அல்கஜாயீ,

கவாத் பின் ஜுபைர் அபூ அப்துல்லாஹ்,

ஜைது பின் காலிதில் ஜுஹ்னீ,

சல்மா பின் சலாமதுல் அன்சாரி,

சல்மா பின் அல் அக்வஃ,

ஸஹ்ல் பின் பைளாஃ,

ஸஹ்ல் பின் ஸஃது,

ஸஹ்ல் பின் அபீஹஸ்மா,

சாயிப் பின் யஜீது அல்கினானி,

சுஹைப் பின் சினான்,

சக்ர் பின் ஹர்ப் அபூ முஆவியா,

அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் புஹைனா,

அப்துல்லாஹ் பின் தாபித் பின் அன்சாரி,

அப்துல்லாஹ் பின் அல்கஸீல் அபூ ஹன்ளளா,

அப்துல்லாஹ் பின் கஃபுல் அன்சாரி,

அம்ர் பின் அபீ சரஹில் கர்ஷீ, அம்ர் பின் உமையா அள்ளிம்ரீ,

அம்ர் பின் ஹஜ்ம் பின் ஜைது,

உக்பத் பின் அம்ர் அபூ மஸ்வூது அல்பத்ரீ,

உக்பா பின் மஸ்வூது அல்ஹத்லீ,

அல்கமா பின் வக்காஸ் அல்லைஸி,

கைஸ் பின் ஸஃது பின் உப்பாதாதுல் அன்சாரி அபுல் ஃபள்லீ,

கதாதா பின் அந்நுஃமான் அல்அன்சாரி அபூ அம்ர்,

கஃப் பின் மாலிக் அல்அன்சாரி அபூ அப்துல்லாஹ்,

முஹம்மது பின் மஸ்லமா அல்அன்சாரி,

முஹம்மது பின் அபில் ஜஹ்ம்,

முஹம்மது பின் உபை பின் கஃப்,

முஆது பின் அல்ஹாரிஸ் அன்அன்சாரி,

மாலிக் பின் அம்ர் பின் அதீக்,

மாலிக் பின் ரபீஅதுல் அன்சாரி,

முகைராதுஸ் ஸக்ஃபீ,

மஃகல் பின் சினான்,

மக்ஜமா பின் நவ்ஃபல் அல்கர்ஷீ,

மிக்தாது பின் அல்அஸ்வது அல்ஹள்ரமீ,

நவ்ஃபல் பின் முஆவியா,

ஹின்து பின் ஹாரிஸா அல்அஸ்லமீ,

அபூ ஷரீஹில் அல்கஃபீ அல்கஜாயீ,

அபூஹுரைரா அத்தவ்ஸீ,

அபுல் யுஸ்ர் அன்அன்சாரி,

ரைஹானா பின்தி ஷம்ஊன்,

மாரியதுல் கிப்திய்யா இப்ராஹீமின் தாய்,

உம்மு ரூமான் அபூபக்கர் ஸித்தீக் ரளி அவர்களின் மனைவி,

உம்மு சுலைம் பின்தி மில்ஹான்,

சபிஆ பின்தி அல்ஹாரிஸ் அல்அஸ்லமிய்யா (ரளி) ஆகியோர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

(இமாம் காளி இயாள் (ரஹ்) – நூல்:தர்தீபுல் மதாரிக் வதக்ரீபுல் மஸாலிக்)

 

ஜன்னதுல் பகீஃயில் நபி (ஸல்) அவர்களின் பெண் பிள்ளைகள்

  1. சய்யிதா உம்மு குல்ஸும் (ரளி) அவர்கள்
  2. சய்யிதா ருகைய்யா (ரளி) அவர்கள்
  3. சய்யிதா ஜைனப் (ரளி) அவர்கள்

 

ஜன்னதுல் பகீஃயில் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர்கள்

  1. சய்யிதா ஃபாத்திமா (ரளி) அவர்கள்
  2. அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (நபி (ஸல்) சிறிய தந்தை)
  3. ஹஸன் பின் அலி (ரளி) அவர்கள்
  4. ஜைனுல் ஆபிதீன் பின் ஹுஸைன் பின் அலி (ரளி) அவர்கள்
  5. முஹம்மது அல்பாக்கர் பின் ஜைனுல் ஆபிதீன் (ரளி) அவர்கள்
  6. ஜஃபர் அஸ்ஸாதிக் பின் முஹம்மது அல்பாகிர் (ரளி) அவர்கள்

 

நபி (ஸல்) அவர்களின் மனைவிகள் (உம்மஹாதுல் முஃமினீன்)

  1. சய்யிதா ஆயிஷா பின்தி அபீபக்கர் (ரளி) அவர்கள்
  2. சய்யிதா சவ்தா பின்தி ஜம்ஆ (ரளி) அவர்கள்
  3. சய்யிதா ஹஃப்ஸா பின்தி உமர் பின் கத்தாப் (ரளி) அவர்கள்
  4. சய்யிதா ஜைனப் பின்தி குஜைமா (ரளி) அவர்கள்
  5. சய்யிதா உம்மு ஸலமா பின்தி அபீ உமையதல் மக்ஜூமீ (ரளி) அவர்கள்
  6. சய்யிதா ஜுவைரிய்யா பின்தி அல்ஹாரிஸ் (ரளி) அவர்கள்
  7. சய்யிதா உம்மு ஹபீபா பின்தி அபீ சுஃப்யான் (ரளி) அவர்கள்
  8. சய்யிதா சஃபிய்யா பின்தி ஹுயைய் பின்தி அக்தப் (ரளி) அவர்கள்
  9. சய்யிதா ஜைனப் பின்தி ஜஹ்ஷ் (ரளி) அவர்கள்

 

ஜன்னதுல் பகீஃயில் நபி (ஸல்) அவர்களின் சிற்றன்னைகள்

  1. சஃபிய்யா பின்தி அப்துல் முத்தலிப் (ரளி) அவர்கள்
  2. ஆதிகா பின்தி அப்துல் முத்தலிப் (ரளி) அவர்கள்

 

உஸ்மான் பின் மள்கூன் (ரளி)  அவரை சுற்றியுள்ளவர்களும்

  • உஸ்மான் பின் அஃப்பான் (ரளி) அவர்கள்
  • இப்ராஹீம் பின் முஹம்மது (ஸல்) அவர்கள்
  • அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரளி) அவர்கள்
  • சஃது பின் அபீ வக்காஸ் (ரளி) அவர்கள்
  • அஸ்ஃது பின் ஜராரா (ரளி) அவர்கள்
  • ஃபாத்திமா பின்தி அஸது (ரளி) அவர்கள்
  • குனைஸ் பின் ஹுதாஃபா (ரளி) அவர்கள்
  • ஹர்ரா போரில் ஷஹீதான வீர ஷுஹதாக்கள் (முஆவியா ஆட்சி காலத்தில்)
  • ஸஃது பின் முஆது அல்அஷ்ஹலீ (ரளி) அவர்கள்
  • அபூஸயீதுல் குத்ரீ (ரளி) அவர்கள்
  • ஹலீமதுஸ் ஸஃதிய்யா (ரளி) அவர்கள்
  • இஸ்மாயில் பின் ஜஃபர் சாதிக் (ரளி) அவர்கள்
  • இமாம் மாலிக் பின் அனஸ் (ரளி) அவர்கள்
  • நாஃபிஉ பின் அபீ நுஐம் (ரளி) (இமாம் மாலிகின் ஷைகு) அவர்கள்

 

எனவே, இவ்வளவு மகத்துவமும் மாண்பும் பெற்ற புனித மதினாவில் மரணித்து, ஜன்னதுல் பகீயில் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் தவ்பீக் செய்வானாக! நானை மஹ்ஷரில் கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் நுழைய இருக்கும் நல்லோர்களோடு சேர்த்தருள் புரிவானாக!! நாயகத்தோடு சுவர்க்கத்தில் இருக்கும் பாக்கியத்தை தந்தருள் புரிவானாக!!! ஆமீன் யாரப்பல் ஆலமீன்!

 

ஆக்கம்: மௌலவி  A. முஹம்மது ஹனீஃப் ஜமாலி M.A., M.Phil.

 

குறிப்பு:

தங்களின் குழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க விரும்பும் பெற்றோர்கள் சுவனத்துப் பேர் பெற்ற  இந்த நல்லடியார்களின் பெயர்களை வைக்கலாம்.