இஸ்லாமிய வணிகவியல்- தொடர் 1

ணிகமே பொருளாதாரத்தின் ஆணிவேராகும். இவ்வுலக வாழ்க்கையில் அச்சாணியாகத் திகழ்வது பொருளாதாரம் தான். அதேநேரத்தில்பொருள்மட்டுமே வாழ்க்கை இல்லை. இவ்வுலக வாழ்க்கைக்குப்பின் மறுமை என்று ஒன்று உண்டு. அந்தவாழ்வின் அழியாச் செல்வங்களைஅடைய இம்மையின் செல்வமும் அவசியம்தான். அதற்காக மனம்போன போக்கில் பொருளீட்ட இஸ்லாத்தில் அனுமதி இல்லை. பொருளின்உண்மையான உரிமையாளனான அல்லாஹ் எவ்வாறு கட்டளையிடுகின்றானோ அதன்படி தான் மனிதன் பொருள் திரட்ட வேண்டும். அவன் விரும்பிய வழிகளில் தான் செலவிடவும் வேண்டும்.

இந்த அடிப்படைகளை புரிந்து கொண்டால், இஸ்லாமிய பொருளியல் கொள்கை என்ன என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். ஒருபக்கம், கம்யூனிஸக் கொள்கை தனியார் உடைமையை எதிர்த்து பொதுவுடைமையை உயிர்மூச்சாகக் கொண்டிருக்கிறது என்றால், முதலாலித்துவக் கொள்கையானது கட்டுப்பாடற்ற தனியார் உடைமையைத் தாராளமாக வரவேற்கிறது. ஆனால், இஸ்லாம் தனியார் உடைமைக் கொள்கையை ஆதரிக்கிற அதே நேரத்தில், அதில் நியாயமான சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

இதனால், கம்யூனிஸத்தில் பறிக்கப்படுகிற தனிமனித சுதந்திரம் பாதுகாக்கப்படுவதுடன், முதலாளித்துவத்தால் விளையும் தனிமனிதச் சுரண்டல்கள் தடுத்து நிறுத்தப்படும். வட்டி, சூதாட்டம், மதுவிற்பனை, பதுக்கல், கொள்ளை, லாபம் போன்ற பொருளாதாரக் குற்றங்களை இஸ்லாம் தடுத்து, தனிமனித அல்லது அரசு மேற்கொள்ளும் எல்லை மீறிய செயல்களுக்கு வேலி அமைத்துள்ளது. உற்பத்தி, கச்சாப் பொருள்பயன்பாடு, வினியோகம், நுகர்வு, வளர்ச்சி ஆகிய எல்லா பொருளாதார நடவடிக்கைகளும் ஆரோக்கியமானவையாக அமைவதற்காக அர்த்தமுள்ளசிலகட்டுப்பாடுகளை இஸ்லாம் விதித்திருக்கிறது. எனவே, இஸ்லாமிய பொருளதாரக் கொள்கையே யாருக்கும் பாதிப்பில்லாத நடுநிலைக் கொள்கையாகும். தனிமனிதன் , சமுகம், அரசு என எவரையும் காயப்படுத்தாத சிறந்த கொள்கையாகும். (தக்மிலா)

انواع البيوع ثلاثة

வணிகத்தின் வகைகள் முன்று

1: بيع عين مشاهدة فجائز

2: بيع شيئ موصوف فى الذمة وهو بيع السلم فجائز

3: بيع عين غائبة لم يرها المشترى ولا البائع أو أحدهما وكذا الحاضرة التى لم تشاهد فغير جائز لأنه من الغرر المنهى عنه. (الففه الميسر-242)

  1. ஒன்றாவது: (பொருளை) கண்ணால் பார்த்து விற்பது ஆகுமானதாகும். 2. இரண்டாவது: தன்னிடமுலுள்ள அறியப்பட்ட ஒரு பொருளை விற்பது. இது ‘பைஉஸ்ஸலம்’ (முன்பணவணிகம்) ஆகும். எனவே இதுவும் ஆகுமானதாகும். 3. மூன்றாவது: (விற்கப்படும்பொருள்) கண்முன்னால் இல்லாததை விற்பதாகும். அதை விற்பவரும் பார்க்கவில்லை, வாங்குபவரும் பார்க்கவில்லை அல்லது இருவரில் ஒருவரும் பார்க்கவில்லை. ஆகவே, இதுதடை செய்யப்பட்ட மோசடி வணிகம் போலானதால் இதுகூடாத (தடை செய்யப்பட்ட) வணிகமாகும். (அல்ஃபிக்ஹுல்முயஸ்ஸர்- 242)

شروط صحة البيع خمسة

வணிகம் கூடுவதற்கு ஐந்து நிபந்தனைகள்

الاول: أن يكون طاهرا فلا يصح بيع نجس العين كالخمر والميتة ولحم الخنزير وكلب ونحو ذلك لقوله صلى الله عليه وسلم: عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ….. يَقُولُ عَامَ الْفَتْحِ وَهُوَ بِمَكَّةَ « إِنَّ اللَّهَ حَرَّمَ بَيْعَ الْخَمْرِ وَالْمَيْتَةِ وَالْخِنْزِيرِ وَالأَصْنَام(ابوداود-3488)

 

ஒன்றாவது: (விற்கப்படும்பொருள்) சுத்தமானதாக இருக்கவேண்டும். மது, செத்தவைகள், பன்றியின் இறைச்சி, நாய் மற்றும் இவை போன்ற அசுத்தமானவைகளை விற்பது கூடாது. ஜாபிர் (ரளி) அவர்கள்அறிவிக்கிறார்கள்: நான் மக்கா வெற்றி பெற்ற நாளில் நபி (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன். மது, செத்தவைகள், பன்றியின் இறைச்சி மற்றும் உருவச் சிலைகள் விற்பனை செய்வதை அல்லாஹ் தடை செய்துள்ளான் என்று கூறினார்கள்.    (அபூதாவூது– 3488)

ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!’ என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது;  மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘கூடாது! அது விலக்கப்பட்டது!’ எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, ‘அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!’ என்று கூறினார்கள்.   (புகாரி – 2236)

அபூமஸ்வூத் அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் நாய் விற்றகாசையும் விபச்சாரியின் கூலியையும் சோதிடரின் தட்சணையையும் தடை செய்தார்கள்!’   (புகாரி- 2236)

الثانى: من شروط صحة البيع ان يكون منتفعا به فلا يصح بيع ما لا نفع فيه ولا شراؤء واخذ المال فى مقابلته من باب أكل اموال الناس بالباطل وقد نهى الله عنه بقوله: وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ. (القرآن 2:188) واذا لم يصح بيع وشراء ما لا منفعة فيه فمن باب أولى ما فيه الضرر كالسموم ونحوها من المواد المخدودة والمسكرة بانواعها أن استعملت للاضرار. وأما آلات اللهو المشغولة عن ذكر الله فأنه لا يجوز بيعها ولا شراؤها لأنها آلة الفسق ولا يقصد منها غيره.

இரண்டாவது: வணிகம் கூடும் என்பதற்கு (இரண்டாவது) நிபந்தனையாவது, அந்த வணிகத்தைக் கொண்டு (விற்போரும் வாங்குவோரும்) பிரயோஜனம் அடையவேண்டும். எந்த பிரோஜனமும் இல்லாத வணிகத்தில் விற்பதும் வாங்குவதும் (அறவே) கூடாது. இதற்கு எதிர்மறையாக, (பிரோஜனமிள்ளாதா வணிகம் என்பது) தவறான முறையில் மக்களின் பொருள்களை சாப்பிடுவதற்கு நிகரறாகிவிடுறது. இதை அல்லாஹ் தனது வேதத்தில் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள் (அல்குரான் 2:188)  எனத் தடுத்துள்ளான்.

எந்த வணிகத்தில் விற்றல்-வாங்கலில் பிரோயஜனம் இல்லையோ அந்த வணிகம் கூடாது. அது இடையூறு தரக்கூடிய விஷம், போதைப்பொருட்கள், போதைபானங்கள் மற்றும் இவ்வகையைச் சார்ந்தவைகள் தீங்குகளுக்கானவை பயன்படுத்தப்பட்டால் இவற்றை விற்பனை செய்வது கூடாது.

அல்லாஹ்வின் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட வீண் கருவிகளை விற்பதும் கூடாது. ஏனெனில், அவை பாவத்திற்கு துணை போகிற கருவிகளாகும். அந்த கருவிகளை பாவகாரியங்களுக்கு அப்பாற்பட்டதாக கருதினாலும் சரியே (கூடாது).

الثالث: أن يكون المبيع مملوكا للبائع أو له عليه ولاية أو وكالة. فلو باع مال غيره بلا ولاية ولا وكالة بطل البيع. لقوله: عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ طَلاَقَ إِلاَّ فِيمَا تَمْلِكُ وَلاَ عِتْقَ إِلاَّ فِيمَا تَمْلِكُ وَلاَ بَيْعَ إِلاَّ فِيمَا تَمْلِكُ»(أبوداود-2192)

மூன்றாவது: விற்கப்படுவது விற்பவருக்கு சொந்தமானதாகவே, அல்லது அவற்றுக்கு அவர் உரிமையாளராகவோ, அல்லது பொறுப்புதாரியாகவோ இருத்தல் வேண்டும். தனக்கு உரிமையில்லாத அல்லது பொறுப்புதாரிய நியமிக்கப்படாத அடுத்தவரின் பொருளை விற்றால் வணிகம் முறிந்து விடும். தனக்கு உரிமையில்லாததில் விவாகரத்து என்பது இல்லை, தனக்கு உரிமையில்லாதவரில் (அடிமையை) விடுவித்தல் என்பது இல்லை, மற்றும் தனக்கு உரிமையில்லாதவற்றில் வணிகம் என்பது இல்லை என நபி (ஸல்) அவர்கள்சொன்னதைப்போல. (அபூதாவூது -2192)

الرابع: القدرة على التسليم الحسى والشرعى فلو لم يقدر على التسليم الحسى كبيع الضال والمغصوب فلا يصح البيع لأن المقصود من البيع الانتقاع بالمبيع وهو مفقود هنا.

நான்காவது: மார்க்கரீதியாகவும், கண்ணெதிரவும் (விற்கப்படுவதை) ஒப்படைக்க சக்தி பெற்றல் வேண்டும். கண்ணதிரே ஒப்படைக்க சக்தியில்லை என்றால் அது அநீதியான, அபகறிக்கப்பட்ட வணிகத்தைப் போலாகும். எனவே (இவ்வகையான) வணிகமும் கூடாது. ஏனெனில் வணிகத்தின் நோக்கம் அதைக் கொண்டு பயன் அடைய வேண்டும் அது இங்கே இழக்கப்படுவதால் (கூடாது.)

الخامس: أن يكون المبيع معلوما لانه صلى الله عليه وسلم عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ النَّبِىَّ …..نَهَى عَنْ بَيْعِ الْغَرَرِ. (أبوداود-3378) ولدفع الغرر يشترط العلم بعينه وقدره وصفته. أما العين فقوله: بعتك هذا. واما القدر فيبين عدده أو كيله أو وزنه. (الفقه الميسر-244)

ஐந்தாவது: விற்கப்படுவது இன்னது தான் என அறியப்பட வேண்டும். ஏனெனில் மோசடி வணிகத்தை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (அபூதாவூது– 3378) மோசடி அகற்றப்படுவதற்கு இன்னது தான் என அறியப்பட வேண்டும், அளவு, மற்றும் தரம் ஆகியவை (தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்பது நிபந்தனையாகும். அறியப்படுவது என்பது இந்த பொருளை நான் உனக்கு விற்றேன் என்று சொல்வதைப் போல. அளவு என்பது: அதன் எண்ணிக்கை முகத்தலளவை நிறுத்தலளவை என்பதாகும். (அல்ஃபிக்ஹ{ல்முயஸ்ஸர்- 244)