ஷரீஅத் சட்டங்களை மாற்ற முனைந்தால்..!

<span class=ஷரீஅத் சட்டங்களை மாற்ற முனைந்தால்..!" class="img-responsive wp-post-image" src="https://ahlussunnah.in/wp-content/uploads/2018/01/123-1170x700.jpg">

ஷரீஅத் சட்டங்களை மாற்ற முனைந்தால்..!

இவர்களின் திட்டங்களும், சதிகளும், சூழ்ச்சிகளும், முயற்சிகளும் ஒரு போதும் நிறைவேறாது.

وَلَا يَحِيقُ الْمَكْرُ السَّيِّئُ إِلَّا بِأَهْلِهِ ۚ

“உண்மையில் தீய சூழ்ச்சிகளும், திட்டங்களும் அவற்றைச் செய்பவர்களையே தாக்கும்”. ( அல்குர்ஆன்: 35: 43 )

وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ وَعِنْدَ اللَّهِ مَكْرُهُمْ وَإِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ 

“அவர்கள் விதவிதமான சூழ்ச்சிகளைச் செய்து பார்க்கின்றனர். அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளையே பெயர்த்துவிடக் கூடியதாக இருப்பினும் அவர்களுடைய ஒவ்வொரு சூழ்ச்சியையும் முறியடிக்கும் சூட்சமம் அல்லாஹ்விடம் இருக்கின்றது”.( அல்குர்ஆன்: 14: 46 )

وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ ۖ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ

“அவர்கள் சதித்திட்டங்கள் தீட்டினார்கள். அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராக தகுந்த திட்டங்களை தீட்டினான். மேலும், இத்தகைய திட்டங்களைத் தீட்டுவதில் அல்லாஹ் யாவரிலும் வல்லவன் ஆவான்”.      ( அல்குர்ஆன்: 3: 54 )

 

ஷரீஆ என்பது சாதாரணமான ஒன்றல்ல சாமானியமாக விட்டு விடுவதற்கு!!

 

ثُمَّ جَعَلْنَاكَ عَلَىٰ شَرِيعَةٍ مِّنَ الْأَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ أَهْوَاءَ الَّذِينَ لَا يَعْلَمُونَ 

 إِنَّهُمْ لَن يُغْنُوا عَنكَ مِنَ اللَّهِ شَيْئًا ۚ وَإِنَّ الظَّالِمِينَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ۖ وَاللَّهُ وَلِيُّ الْمُتَّقِينَ (19) هَٰذَا بَصَائِرُ لِلنَّاسِ وَهُدًى وَرَحْمَةٌ لِّقَوْمٍ يُوقِنُونَ

“{நபியே!} இப்போது தீன் சம்பந்தமான விஷயங்களில் தெளிவான, பிரதான ஷரீஆவில் உம்மை நாம் நிலை நிறுத்தியிருக்கின்றோம்! எனவே, நீர் அதனையே பின்பற்றுவீராக! அறியாத மக்களின் மன இச்சைகளைப் பின் பற்றாதீர்!

அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு அவர்களால் எந்தப் பயனும் தர இயலாது. மேலும், கொடுமை புரிபவர்களே தங்களுக்குள் ஒருவருக்கொருவர் தோழர்களாக இருக்கின்றார்கள். மேலும், இறையச்சமுடையோருக்கு அல்லாஹ் தோழனாவான்.

இந்த ஷரீஆ என்பது அனைவருக்கும் பகுத்துணரும் சான்றுகளாய் இருக்கின்றன. மேலும், உறுதி கொள்ளக்கூடிய மக்களுக்கு வழிகாட்டியாகவும், கருணையாகவும் இருக்கின்றன”. ( அல்குர்ஆன்: 45: 18,19,20 )

 

அல்லாஹ்வை விட ரோஷம் மிக்கவரா நீங்கள்?

عن ابن عباس، قال:  لما نـزلت هذه الآية

 وَالَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ ثُمَّ لَمْ يَأْتُوا بِأَرْبَعَةِ شُهَدَاءَ فَاجْلِدُوهُمْ ثَمَانِينَ جَلْدَةً وَلا تَقْبَلُوا لَهُمْ شَهَادَةً أَبَدًا وَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ قال سعد بن عبادة: لهكذا أنـزلت يا رسول الله؟ لو أتيتُ لَكَاع قد تفخذها رجل لم يكن لي أن أهيجه ولا أحرّكه حتى آتي بأربعة شهداء، فوالله ما كنت لآتيَ بأربعة شهداء حتى يفرغ من حاجته، فقال رسول الله صلى الله عليه وسلم: ” يا مَعْشَرَ الأنْصَار أما تَسْمَعونَ إلى ما يَقُول سَيدُكُمْ؟ ” قالوا: لا تلمه فإنه رجل غَيُور، ما تزوّج فينا قطّ إلا عذراء ولا طلق امرأة له فاجترأ رجل منا أن يتزوّجها؛ قال سعد: يا رسول الله، بأبي وأمي، والله إني لأعرف أنها من الله، وأنها حقّ، ولكن عجبت لو وجدت لَكَاعِ، قد تفخذها رجل لم يكن لي أن  أهيجه ولا أحركه حتى آتي بأربعة شهداء، والله لا آتي بأربعة شهداء حتى يفرغ من حاجته

” فقال رسول الله صلى الله عليه وسلم  ” فإنَّ الله يَأبَى إلا ذَاكَ

“எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர், நான்கு சாட்சிகளைக் கொண்டுவர வில்லையோ அவர்களுக்கு எண்பது (80) சாட்டையடிகள் கொடுங்கள். இனி, அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். மேலும்,அவர்களே (மனிதர்களில் மிகவும்) கெட்டவர்கள்.” (அல்குர்ஆன்:24:4) எனும் இறைவசனம் இறக்கியருளப்பட்ட போது, அன்ஸாரிகளின் தலைவர் ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவ்வாறு தான் இறைவசனம் அருளப் பெற்றுள்ளதா? என்று கேட்டார்கள். அதற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “அன்ஸாரித் தோழர்களே! உங்கள் தலைவர் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள்.

அப்போது, அன்ஸாரித் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவரைப் பழித்து விட வேண்டாம். அவர் மிகவும் ரோஷக்காரர். அல்லாஹ்வின் மீதாணை! கன்னியைத் தவிர வேறெந்தப் பெண்ணையும் அவர் மணம் முடிக்கமாட்டார். அவர் மணவிலக்குச் செய்த பெண்ணை மறுமணம் செய்து கொள்கிற துணிவு எங்களில் யாருக்கும் இல்லை! அவரது கடும் ரோஷமே இதற்கு காரணம்!” என்றார்கள். அப்போது, ஸஅத் இப்னு உப்பாதா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த வசனம் உண்மையென்பதும் இது அல்லாஹ்விடமிருந்தே அருளப்பெற்றுள்ளது என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும்.

எனினும், கேவலமான ஒரு பெண்ணுடன் ஓர் ஆண் சேர்ந்திருப்பதைக் கண்டால், அவனை விரட்டியடிப்பதற்கு கூட நான்கு சாட்சிகளைத் தேட வேண்டும் என்பது தான் எனக்கு வியப்பாக உள்ளது” என்றார்கள். இந்த உரையாடலை ஆச்சர்யத்தோடு கேட்டுக் கொண்டிருந்த நபித்தோழர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதர் {ஸல்}அவர்கள் “என்ன ஸஅத் அவர்களின் ரோஷத்தை நீங்கள் ஆச்சர்யத்தொடு பார்க்கின்றீர்கள் போலிருக்கின்றதே? நிச்சயமாக நாம் அவரை விட நிரம்பவே ரோஷம் நிறைந்தவராவோம். அல்லாஹ் என்னை விட ரோஷம் நிறைந்தவனாவான்” என பதிலளித்தார்கள்.          ( நூல்: தஃப்ஸீர் அல் மள்ஹரீ )