மனித எந்திரம்

 

அல்குர்ஆனின் அறிவியல் அத்தாட்சிகளில்

 நபி ஈஸா(அலை) காலத்தில் மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் நோயைக் குணப்படுத்துவதில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.  பரவும் நோய்களுக்கும் புதுப்புது நோய்களுக்கும் விரைவில் மருந்து கண்டு பிடித்து குணப்படுத்திவிடுவார்கள்.  ஆனால் பிறவிக்குருடு, வெண்குஷ்டம் இளம் பிள்ளைவாதம் முடக்கு போன்ற நோய்களுக்கு அம்மருத்துவர்களால் மருந்து கொடுத்து குணப்படுத்த தெரியவில்லை. அவ்வித நோய்களை இறையருளால் நபி ஈஸா(அலை) அவர்கள் குணப்படுத்தினார்கள்.  இவ்வாறு ஒரே நாளில் 50 ஆயிரம் பேர்களை குணப்படுத்தியதாகவும் கூறுவர்.

மருத்துவர்களால் செய்ய இயலாததை நபி ஈஸா(அலை) அவர்களைக் கொண்டு இறைவன் குணப்படுத்திக் காட்டினான்.  அப்படியாவது அவர்கள் இறை நம்பிக்கை கொள்ளட்டும் என்று.

நோயாளிகளிடம் “நான் உனக்காக இறைவனிடம் நாடி உன்னை நலப்படுத்தினால், நீ இறை நம்பிக்கை கொள்கின்றாயா? என்று வினவி (இடைவெளி)விட்டே நபி ஈஸா(அலை) அவர்கள் அவனுக்காக இறைவனிடம்,  “அல்லாஹீம்ம அன்த இலாஹீமன் ஃபிஸ்ஸாமாயி வஇலாஹீ மன்ஃபில் அர்ளி லாஇலாஹ ஃபீஹா கொய்ருக.  இலாஹீ அன்த ஜப்பாருன் மன்ஃபிஸ்ஸமாயி வஜப்பாருன் மன்பில் அர்ளி லா ஜப்பார ஃபீஹா கொய்ருக.  கொய்ருக குத்ரதுக ஃபில் அர்ளிவ குத்ரதிக ஃபிஸ் ஸமாயி சுல்தானுக ஃபில் அர்ளி வசுல்தானுக்க ஃபிஸ்ஸமாயி அஸ்அலுக பி இஸ்மிகல் முனீரி வமுல்கிகல் ஹமீதி இன்னக அலா குல்லி ஷையின் கதீர்” என்று ஓதுவார்கள்.  மேலும் ஒவ்வொரு நாள் காலையிலும் நபி ஈஸா(அலை) அவர்கள் தங்களின் வணக்க அறையிலிருந்து வெளிவந்ததும் வெளியே குழுமி இருக்கும் நோயாளர்களின் மீது மேற்கண்டவாறு ஓதி ஊதி, “உங்களின் இறைஞ்சுதலை இறைவன் ஏற்றுக் கொண்டான்.  இறைவனின் பேரருளால் நலமாக இல்லம் மீளுங்கள்!”  என்று கூறுவார்கள்.

இதனால் பிறவிக்குருடர்கள் பார்த்தார்கள், குஷ்டரோகிகள் குணம் அடைந்தார்கள், முடவர்கள் நடந்தார்கள் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

கொஞ்சம் விஞ்ஞானம் பக்கம் போய் வருவோம்.  “ஜோஸ் மேனுவல் ரோட்ரிகுவே டெல் கோடோ 1970 ஆம் ஆண்டில் உலகமெல்லாம் வியந்து பாராட்டிப் பேசப்பட்ட நரம்பியல் மாமேதை 1915–ல் ஸ்பெயினில் பிறந்த இவர் 1930 ல் மேட்ரிட் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வியில் நுழைந்தார்.

அவர் ஸ்டிமோசீவர் (Stimociever) என்ற கருவியைக் கண்டு பிடித்தார்.  அது மண்டை ஓட்டில் பதிக்கப்படும் ரேடியோ ரிசீவர்.  ஒருபட்டனை தட்டியதும் இந்தரிசீவர் சிக்னலை வாங்கி மூளையில் குறிப்பிட்ட பகுதிக்கு சிறு மின் அதிர்வினைத் தரும் இதன் மூலம் மனத்தைத் தூண்டி விரும்பியபடி ஒருவரை செய்விக்கலாம்.  பூனைகள், குரங்குகள், சிம்பன்ஸிகள், ஜிப்பான் குரங்குகள், எருதுகள் மற்றும் மனிதனிடமும் ஸ்டிமோசீவரைப் பதித்துச் செயல் படுத்திக் காட்டினார்.

இன்று மூளை சிப்பத்தின் உதவியால் பார்க்கின்ஸன்ஸ் நோய், பக்கவாதம், எப்மி லெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், குருடு, செவிடு ஆகிய குறைகளுக்கும் நோய்களுக்கும் நிவாரணம் வழங்கப்படுகிறது.

டெல்கேடாவின் புகழ்மிக்க பரிசோதனை 1963 ல் நிகழ்தது.  ஸ்பெயின் நாட்டில் காளையை அடக்கும் விளையாட்டு மிகவும் பிரபலம்.  ஒருமுறை டெல்கோடோ,  முரட்டு காளையை வளர்க்கும் பண்ணையில் தன் பரிசோதனையை செய்தார்.  காளைமாட்டின்  மூளையின் காடேட் நியூக்ளியிஸ் பகுதியில் ஸ்டிமோசீவர்களைப் பதித்துவிட்டு, காளைகளை ஒவ்வொன்றாக ஒரு மைதானத்தில் அவிழ்த்துவிட்டு தனியாக நின்று ஸ்டீபோசிவர் மூலம் அவற்றை அடக்கிக்காட்டினார்.

இதைப்போல் மனித மூளையில் “மோட்டார் கார்ட்டெக்ஸ் (Motor Cortex) என்று ஒரு பகுதி உண்டு இங்கிருந்துதான் உடலில் உள்ள உறுப்புகளைத் தூண்டி செயல்படுத்தும் கட்டளைகள் பிறக்கின்றன.  நாம் நடப்பது, எடுப்பது, பேசுவது எல்லாம் இந்த மோட்டார் பார்ட் டெக்ஸின் அதிகாரத்திற்குள் தான் அடங்குகிறது.  டேல்கேடோ மோட்டார் கார்ட்பெக்ஸில் மின் தூண்டல் கொடுத்து செய்த பரிசோதனைகளின் மூலம் அதிசயத்தக்க உண்மைகள் பல வெளிவந்தன.  மூளையில் மோட்டார் கார்டெக்ஸில் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் உண்டு.  ஒரு நோயாளியின் மோட்டார் கார்டெக்ஸை தூண்டிய ஒவ்வொரு முறையும் அவர்தன் இடது கையை மூடிக்கொள்வார்.  அவர் என்னதான் முயற்சித்தாலும் டெல்கேடோவின் மின் தூண்டலைத் தாண்டி அவரால் கையைத் திறக்க முடியவில்லை”.

இங்கிலாந்தில் இருக்கும் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் தனது நரம்பு மணடலத்தை ஒரு கம்ப்யூட்டருடன் இணைத்து இருக்கிறார்.  அவரது நோக்கம் மனிதர்களை விடப் பல மடங்கு உயர்ந்த இயந்திர மனித இனம் ஒன்றை உருவாக்குவது.