பயனாளர்களுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

 

2.மாற்றங்கள்:

இந்த ஒப்பந்த விதிமுறைகளை மாற்ற/திருத்தயமைக்க அல்லது ஏதாவது சேர்க்க உரிமையிருந்தாலும் இத்தளபதிவுகள், அலைவரிசை அல்லது சேவையை எந்த நேரத்திலும் எல்லைமீறாமல் மாற்றுதல், திருத்தியமைத்தல், தற்காலிகமாக நீக்குதல், இடைநிறுத்தம் செய்தல், உள்ளடக்கங்கள் தயாரிப்பு மற்றும் சேவையை மாற்றயமைத்தல் போன்றவை அறிவிப்பின்றி செய்யப்பட மாட்டாது.  இத்தகைய மாற்றங்களுக்குப் பிறகும் நீங்கள் தொடர்ந்து இத்தளத்தைப் பயன்படுத்தினால் இந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படுவீர்கள்.

3.பதிவு:  உங்கள் தள பயன்பாட்டை கருத்தில் கொண்டு நீங்கள் ஒப்புக் கொள்வதாவது:-

  • இந்த தளத்தில் உள்ள படிவத்தில் உங்களைப் பற்றிய மிகச்சரியான, முழுமையான நடப்பு விவரங்களைத் தரவேண்டும்.
  • நிறுவனத்துக்கு தங்களைப்பற்றின சரியான நடப்பு விவரங்களை தொடர்ந்து தரும் பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
  • உங்களுடைய பயனாளர் பெயர், (Username) கடவுச்சொல் (Password) பாதுகாப்பாகவும், இரகசியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • உங்கள் கணக்கு (Account) சம்மந்தமாக ஏற்படும் எல்லா செயல்களுக்கும் நீங்களே பொறுப்பேற்றுக்கொள்கிறீர்கள்.
  • நிறுவனத்துக்கு நீங்கள் அளிக்கும் பதிவு விவரங்கள் மற்றும் பிற தகவல்களுக்கு அங்கீகரிக்கப்படாத அணுக்கலால் ஏற்படும் அபாயத்திற்கு பொறுப்பேற்கிறீர்கள்.

4.சந்தா சேவைகள்:-

1. இந்த சேவையானது ஆண்டு சந்தாதாரர், மூன்றாண்டு சந்தாதாரர் மற்றும் ஆயுள் சந்தாதாரர் ஆகிய சந்தாதாரர்களுக்கான அடிப்படையிலானது. சந்தாதாரர்கள் சந்தா தொகையை ahlussunnah.in  வலைதளத்தில் வெளியிடப்பட்ட விகிதத்தின் படி கடன் அட்டை (Credit Card) பற்று அட்டை (Debit Card)  நெட்பேங்கிங் மூலம் முன்கூட்டியே செலுத்திவிட வேண்டும். கட்டணத்தை முன்னறிவிப்பின்றி அவ்வபோது மாற்றும் அதிகாரம் ஆசிரியருக்கு உண்டு.

2. நீங்கள் நம் இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள பதிவு படிவத்தில் உங்கள் பெயர், முகவரி, தொலை/அலைபேசி எண், மின்னஞ்சல் குறியீடு, பயனாளர் (Username) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றை முழுமையா பூர்த்தி செய்வதோடு ஆயுள்/மூன்றாண்டு/ஆண்டு சந்தா செலுத்த வேண்டும். இவற்றை முறையே சரிபார்த்து நாங்கள் உறுதி செய்தபின்னர் நீங்கள் சந்தாதாரராக அனுமதியளிக்கப்படுவீர்கள்.  நாங்கள் உங்களை சந்தாதாரராக இணைத்துக் கொண்ட பிறகு உங்களுடைய பயனாளர்பெயர் (Username) கடவுச்சொல்  (Password) பயன்படுத்தி இணையத்தினுள் நுழைந்து தாங்கள் விரும்பும் மாதப் பிரதிகளை விருப்பம் போல் எதை வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.  பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்புகளை/இதழ்களை தனிநபருக்கோ அல்லது மற்ற பொது ஊடகங்களுக்கோ அல்லது சமூக வலைதளங்களுக்கோ அனுப்புவது பகிர்வர்து கூடாது.  மீறினால் பயனாளர் உரிமம் ரத்து செய்யப்படும்.

3. மேலும் சந்தாதாரர் இந்த மென் பொருள் பயன்பாட்டைத் தவறாக பயன்படுத்தவோ, நகலெடுக்கவோ,முற்றிலும் மாற்றி அமைக்கவோ, மற்றவர்களுடன் பகிரவோ, விருப்பத்திற்கேற்ப உள்ளீடுகளை சீராக்குவதோ, மாற்றுவதோ, புதிதாக ரகசிய குறியீடுகளை உருவாக்குவதோ,விற்கவோ, உரிமம் மாற்றம் செய்யவோ,இணக்க உரிமம் அளிக்கவோ, அங்கீகரிக்கப்படாத அணுகல் பெறவோ கூடாது. அவ்வாறே தளத்தின் அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குக் கட்டுப் படுகிறேன் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.

4. இத்தளத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து ஆக்கங்கள்,உரை, மென்பொருள்,புகைப்படங்கள். காணொளி, வரைகலை (கிராபிக்ஸ்) இசை மற்றும் ஒலி அனைத்தும் இந்திய பதிப்புரிமை சட்டங்களால் பாதுகாக்கப்படுகிறது. தணிப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே சந்தாதாரர் இத்தளத்தை அணுக மற்றும் பயன்படுத்த வேண்டும்.

5. காணொளிகள் தகவல் பரிமாற்றத்திற்கான நோக்கத்திற்காக மட்டுமே ahlussunnah.in   இணையத்தில் வழங்கப்படுகிறது, துல்லியமான, முழுமையான, தகவல்பரிமாற்ற சார்பு தன்மை காணொளிக்கு ahlussunnah.in    பிரதிநிதித்துவம் அல்லது உத்திரவாதம் தராது.  இத்தளத்தில் வழங்கப்படும் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் ஆசோசனை பிழைகள் அல்லது தகவல்கள் தவிர்க்கப்படுதல் போன்றவற்றிற்கு ahlussunnah.in    பொறுப்பேற்காது.

6. இவ்விணையத்திலுள்ள சேவை தேதி, சந்தாரர்களின் பதிவு காலவரை காலாவதியாகும் வரை அல்லது சேவைக்கு சந்தா இடைநீக்கம் செய்யும் வரை ahlussunnah.in   சேவை வழங்கப்படும், தவிர்க்கமுடியாத காரணங்களால் ahlussunnah.in    இணையதள சேவையில் விலக்கு அல்லது நிறுத்தம் ஏற்பட நேர்ந்தால் சந்தாதாரர்களுக்கு சந்தா காலம் நிறைவடையாமல் இருந்தால் தங்களின் சந்தா தொகையானது தங்களின் பயன்பாடு போக, மீதமுள்ள சந்தா காலம் மற்றும் இணையதள நிறுத்தம் காலத்திற்கு உட்பட்ட காலத்திற்கான தொகையை வழங்க கடமைப்பட்டுள்ளது.

7. இவ்விணையத்தின் சந்தாதாரர்கள் இணைய தளத்தைப் பயன்படுத்தாமலிருந்தாலோ அல்லது இத்தளத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு முரண்பாடாக நடப்பதாக உணர்ந்தாலோ ahlussunnah.in   சம்பந்தப்பட்ட சந்தாதாரருக்கான சேசையை நிறுத்திவிடும்.

8. சந்தாதாரர்கள் செலுத்திய கட்டணங்கள் இவ்விணையத்திலுள்ள PDF கோப்புகளைப் பார்க்க, பதிவிறக்கம் செய்ய மட்டுமே தங்களின் கட்டணங்களை செலுத்தியுள்ளீர்கள். அது தவிர்த்து மற்ற உபயங்கள், பதிவுகள் யாவும் முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது.