படே ஸாஹிப் ஹழ்ரத்

இன்று படே ஸாஹிப் என்றழைக்கப்படும் குத்பு ஷைகு அஹ்மது பதுருத்தீன் ஹழ்ரத் ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் நினைவு தினம்

இவர்கள் மிகவும் எளிமையானவர்கள் இவர்கள் தாங்கள் ஓர் இறைநேசர் என்பதை அறிந்தும் மிகவும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவர்கள் இவர்களின் பிறந்த ஊர் மஞ்சக்குப்பம் இவர்களின் மஜார் ஷரிஃப் சென்னை ஜமாலியா மத்ரஸா வளாகத்தில் இருக்கிறது

இவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சென்னை கலெக்டர் அலுவலகத்நில் கணக்கராக வேலை பார்த்தார்கள் அவர்களின் மேஜையில் எப்பொழுதும் சந்தனம் இருக்கும் தன்னை சந்திக்க வருபவர்களுக்கு சந்தனத்தை தடவி விடுவார்கள் அன்றோரு நாள் ஆங்கிலேயே அதிகாரி ஒருவர் அந்த ஆபிஸிற்கு வந்தார் எல்லோரும் எழுந்து மரியாதை செய்தார்கள் இவர்கள் தங்களின் எழுந்திருக்க வில்லை நேராக இவரின் மேஜைக்கு வந்து எனக்கு எழுந்திருந்து மரியாதை செய்ய மாட்டியா என்று கேட்டார்கள் அதற்கு இவர்கள் வழக்கம் போல சந்தனத்தை நீட்டி தடவ போனார்கள் உடனே அந்த அதிகாரி கோபம் கொண்டு சந்தனத்தை தட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார் சில நிமிடங்களில் அலுவலகத்தில் பரப்பரப்பு தொற்றி கொண்டது அந்த அதிகாரிக்கு திடீரென்று தாங்க முடியாத தலைவலி வந்து வலியால் துடித்தார் சுற்றி உள்ள மற்ற ஊழியர்கள் ஏதோதோ செய்து பார்த்தும் தலைவலி குறையவில்லை அப்போது அங்கிருந்த ஒருவர் நீங்கள் அந்த பதுருத்தீன் கொடுத்த சந்தனத்தை தட்டி வி்ட்டீர்கள் அவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை உடனே அவரிடம் சென்று மன்னிப்பு கேளுங்கள் அவர் உங்களின் தலைவலியை போக்கி விடுவார் என்று கூறினார்

உடனே அந்த அதிகாரி படே ஹழ்ரத் அவர்களிடம் வந்து தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும் என் தலைவலி போக்க உதவி புரியுங்கள் என்றார் உடனே அவர்கள் தங்களின் கரத்தால் சந்தனத்தை எடுத்து அந்த அதிகாரியின் நெற்றியில் தடவி விட்டார் என்ன ஆச்சிரியம் அதிகாரியின் தலைவலி சட்டேன நின்று விட்டது

படே ஹழ்ரத் அவர்களுடன் கூத்தாநல்லூர் கழனி முஹம்மது அலி ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் , கொடிக்கால்பாளையம் அப்துல் மஜீது ஸூபி ஹழ்ரத் மற்றும் பொதக்குடி அப்துல் கரீம் ஹழ்ரத் அவர்களும் மிக நெருங்கிய தொடர்பு உடையவர்களாக இருந்தார்கள் மேற்கண்ட அனைவருமே ஹைதராபாத் ஸுபி ஹழ்ரத் உடன் மிக நெருக்கமானவர்கள்

படே ஸாஹிப் ஹழ்ரத் அவர்கள் ஜலாலியத்தான ஜதபுடைய ஹாலில் ஒருவித நடனம் ஆடுவார்கள் ( ஷாதுலியா தரீக்கா திக்ரு மஜ்லிஸில் சிலருக்கு ஜதபு ஹால் வந்து தன்னையறியாமல் ஆடுவ்வார்கள்) படே ஹழ்ரத் அவர்கள் நடனம் ஆடுகிறார்கள் என்ற விஷயம் அவர்களின் முரீதீன்கள் வழியாக அக்காலத்திய உலமா பெருமக்களுக்கு கிடைத்தது அதை அவர்கள் தங்களுடைய பயான்களின் கண்டித்தார்கள் இது ஷரியத்திற்கு மாற்றமானது எனவே அவை உடனடியாக நிறுத்தபட வேண்டும் என்று பேசினார்கள் ஆனால் அவர்கள் அதை பற்றி கவலை படவில்லை

இப்படியாக உலமாக்கள் மத்தியில் ஓர் சர்ச்சையாக இருந்த நிலையில் அவர்களின் கராமாத்துகளும் நிறைய நிகழ தொடங்கின இருந்தும் ஷரீஅத் விஷயத்தில் பல அற்புதமான பத்வாக்களை வழங்கிய கூத்தாநல்லூர் மன்ப உல் உலா மத்ரஸா அன்று மிகப்பிரபலமாக இருந்தது இந்நிலையில் வேலூர் பாக்கியாத் ஸாலிஹாத் மத்ரஸா கூட செய்யாத ஓர் துணிச்சலான செய்லை கூத்தாநல்லூர் மன்ப உல் உலாவின் அன்றைய மத்ரஸாவின் முப்தி கூத்தாநல்லூரை சேர்ந்த மகான் ஒருவர் மேற்கண்ட படே ஸாஹிப் ஹழ்ரத் அவர்கள் ஜதபு நிலையில் நடனம் ஆடுவதால் இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி குப்ரை ஏற்படுத்துவதால் ( நடனம் குப்ரை ஏற்படுத்தாது இஸ்லாத்தில் ஹராமான ஒரு செய்லை அது ஹலால் என்று வாதிடுவது குப்ரை ஏற்படுத்தும்) அவர்கள் மீது ஒரு பத்வாவை வெளியிட்டார்கள் அதாவது படே ஸாஹிப் ஹழ்ரத் அவர்கள் ஒரு காபிர் ( ந ஊதுபில்லாஹ்) என்று வெளியிட்டதால் அது அன்றைய காலத்தில் தமிழகமெங்கும் பரப்பரப்பை உண்டாக்கியது காரணம் படே ஸாஹிப் ஹழ்ரத் அவர்களுக்கு தமிழகமெங்கும் பல முஹிப்பீன்கள் இருந்தார்கள் மேலும் அவர்களின் கராமத்தால் சிறப்பும் பெற்றிருந்தார்கள்

கூத்தாநல்லூரை சேர்ந்த படே ஸாஹிப் அவர்களின் முஹிப்பீன்களுக்கு மிகவும் மன வருத்தத்தை தந்தது

நாட்கள் சென்றன மேற்கண்ட பத்வாவை வெளியிட்ட கூத்தாநல்லூர் மத்ரஸாவின் முப்தி அவர்களுக்கு இறுதி காலம் வந்து சக்கராத்துடைய ஹாலில் இருந்தார்கள் அவர்கள் அருகில் குடும்பத்தினர்களும் மற்றவர்களும் அவர்களுக்கு கலிமா சொல்லி கொடுக்க முயற்சித்தார்கள் ஆனால் அவர்களால் கலிமா சொல்ல முடிய வில்லை இந்நிலையில் அவர்கள் சைகையினால் கூத்தாநல்லூரை சேர்ந்த கழனி குடும்பத்தை சேர்ந்த மஹான் இறைநேசரான முஹம்மது அலி என்பவரை உடனே இங்கு அழைத்து வாருங்கள் என்றார்கள் அவர்களின் உத்தரவு படியே கழனி முஹம்மது அலி அபபா அவர்களும் முப்தி அவர்களை பார்க்க உடனே வந்தார்கள் அவர்கள் வந்து மற்றவர்களை வெளியே அனுப்பி விட்டு தனியாக முப்தி அவர்கள் படுத்திருக்கும் அறையில் புகுந்து கதவை சாத்தி விட்டு சில நிமிட துளிகள் கழித்து கதவை திறந்தார்கள் பின்பு கழனி அப்பா அவர்கள் அங்குள்ளவர்களிடம் முப்தி ஸாஹிப் இப்பொழுது கலிமா சொல்லி விட்டரார்கள் நீங்கள் போய் பாருங்கள் என்று சொல்லி விட்டு அவர்கள் சென்று விட்டார்கள்

அதன் பின்பு குடும்பத்தினர்கள் சென்று அவர்களுக்கு கலிமா சொல்லி கொடுக்க அவர்கள் கலிமா சொன்ன நிலையிலேயே மரணமடைந்தார்கள் சில நாட்கள் கழித்து கழனி அப்பா அவர்களிடம் இந்நிகழ்வை குறித்து கேட்டபோது அவர்கள் படே ஸாஹிப் ஹழ்ரத் அவர்கள் மீது பத்வா கொடுத்த காரணத்தால் அல்லாஹ்வின் கோபத்தால் அவர்களுக்கு கலிமா வரவில்லை அதனால் சில விஷயங்கள் செய்து அவர்களுக்கு கலிமா சொல்ல வைப்பதற்கு அல்லாஹ்வின் நாட்டத்தால் என்னை அழைத்தார்கள் என்று கூறினார்கள்

எனவே படே ஸாஹிப் ஹழ்ரத் அவர்களின் வெளிரங்க செயல்களை வைத்து எடை போட்டதால் தான் இது போன்ற நிலை ஆனால். அதன் பிறகு தமிழக உலமா பெருமக்கள் அவர்களின் சிறப்பை அறிந்து கௌரவித்தார்கள் அவர்கள் இறதிகாலத்தில் சென்னை பெரம்பூர் ஜமாலியாவில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள் அவர்களின் நினைவு தினத்தில் கூத்தாநல்லூர் பெரியப்பள்ளி வாசலில் குர்ஆன் ஓதி மௌலிது ஓதி பாத்திஹா ஓதி துஆ செய்யப்படும் அந்த வகையில் இன்று அவர்களின் நினைவு நாள் என்பதால் அந்நிகழ்வு கூத்தாநல்லூர் பெரியப்பள்ளிவாசல் தராவீஹ் மஹாலில் இனிதே நடைப்பெற்று சீரணி சோறு வழங்கப்பட்டது

இறைநேசர்களை கண்ணியம் செய்வோம் இறை நெருக்கத்தை பெறுவோம்

ஆக்கம் :

அ.ஷே.முஹம்மது ஆரிஃப்
கூத்தாநல்லூர்
9976063985