நவீன அபூஜஹல்கள்

 

2011ஆம் ஆண்டு டிசம்பர் இதழில் இடம்பெற்ற மிக அற்புதமான கட்டுரை. 

 

லாயிலாஹா இல்லல்லாஹ்’ என்பது மட்டுமே கலிமா என்றால் அபூஜஹ்லையும், அபூலஹபையும் கூட முஸ்லிம்கள் என்று சொல்லலாம்தானே! அன்றைய மக்கத்துக் குஃப்பார்கள் முதல் இன்றைய இந்துக்கள் வரையிலானவர்கள் இறைவனை (ஈஸ்வரன் என்று) ஏற்றுக் கொண்டவர்கள் தாமே!  ‘முஹம்மது ரசூலுல்லாஹ்’வை ஏற்றுக் கொள்ளாததாலேயே முர்த்ததுகளாக் முஷ்ரிக்குகளாக் காஃபிர்களாக ஆகிப்போனார்கள்.‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ என்பது மட்டுமே கலிமா என்றால் அபூஜஹ்லையும், அபூலஹபையும் கூட முஸ்லிம்கள் என்று சொல்லலாம்தானே! அன்றைய மக்கத்துக் குஃப்பார்கள் முதல் இன்றைய இந்துக்கள் வரையிலானவர்கள் இறைவனை (ஈஸ்வரன் என்று) ஏற்றுக் கொண்டவர்கள் தாமே!  ‘முஹம்மது ரசூலுல்லாஹ்’வை ஏற்றுக் கொள்ளாததாலேயே முர்த்ததுகளாக் முஷ்ரிக்குகளாக் காஃபிர்களாக ஆகிப்போனார்கள்.

‘முஹம்மது ரசூலுல்லாஹ்’வை அவர்களால் ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற கேள்விக்கான சரியான ஒரே பதில் ‘பொறாமை’ என்பதுதான். ‘நமது மச்சான் நபியா? அவரை நான் பின்பற்ற வேண்டுமா?’ என்ற “நான்” என்னும் தன்முனைப்பே (Ego) அபூஜஹலை ஷைத்தானாய் ஆக்கியது.

‘நம் தம்பி மகன் முஹம்மது இறைவனின் தூதரா? அவரது சொல்லுக்கு நான் கட்டுப்பட வேண்டுமா?’ என்ற அபூலஹபின் “நான்” என்னும் தன்முனைப்பு (Ego) அவனை இப்லீஸின் இடத்தில் இருத்தியது.

இப்படித்தான் ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது கொண்ட பொறாமையால் ஷைத்தானின் குணத்தைக் கொள்முதல் செய்து கொண்டார்கள்.
மடப்படலம் மூடிய கண்களில் சர்தார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாதாரணமாகத் தெரிந்ததால் உண்மையை உணர முடியாதுத் தடுத்த சாத்தானிய முற்றம் அத்தகையோரின் சன்னிதானமாய் ஆகியது.

உறவுச் சங்கிலியில் இடம் பெற்ற ஒவ்வொரு கண்ணியும் தன்னைத்தானே உயர்ந்தவையாக எண்ணிக் கொள்கின்றன. அந்த நினைப்பே அபத்தமானது என்பது யாருடைய அறிவிலும் உறைப்பதில்லை.

ஒரே உலோகத்தால் ஆன உறவுச் சங்கிலி உலகத்தில் எங்கும் எப்போதும் அமைவதில்லை. அது, இறை நாட்டத்தில் இல்லாததாகும். அலுமினியம் முதல் தங்கம் வரையிலான உலோகக் கண்ணிகளில் அமையும் சங்கிலியில் தங்கத்தைவிட மேலானதாக தம்மைக் கருதும் மற்றவற்றின் குருட்டுத் தீர்மானத்தால் தங்கத்தின் தரம் குறைந்து போவதில்லை.

அத்தகைய கபோதித் தனத்துக்குள் தம்மைக் களவு கொடுத்தக் கயவர்களால் மிக்க மேலான மஹ்மூது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மாண்பையும், மகத்துவத்தையும் உணர்ந்து கொள்ள முடிவதில்லை.

அதனால்தான், அகிலத்தின் அருட்கொடையான அவர்களைச் சாதாரணமாகப் பார்த்தனர்; அவர்களின் உயர்நிலை உணர்த்தப்பட்ட போதும் பொறாமையால் அவற்றைப் புறக்கணித்தனர். காழ்ப்புச் சுரங்கங்களுக்குள் தம்மைச் சுருட்டிக் கொண்டாலும்; கசப்பு வார்த்தைகளையே வாரி இறைத்தாலும்; வெறுப்பு வேர்களில் நிலைபெற்று வளர்ந்தாலும் அத்தகையோரின் மனப்பாத்திரத்தில் இருந்த உண்மை வெளிப்படாமல் இருந்தில்லை.

ஹளரத் மிஸ்வர் இப்னு மக்ரமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் மாமாவான அபூஜஹ்லிடம் “நபிப்பதவி கிடைப்பதற்கு முன்பாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்போதாவது பொய்ச் சொல்லி இருக்கிறார்களா?” என்று வினவினார்.

“சிறுவயது முதலே முஹம்மதை நான் அறிவேன். ஒருபோதும் அவர் பொய்யுரைத்ததில்லை. நம்பிக்கையிலும், நேர்மையிலும் அவர் தவறியதில்லை. இப்போதும் பொய்ச் சொல்ல வேண்டிய அவசியம் அவருக்கில்லை. அவர் தன்னை இறைத்தூதர் என்று கூறுவதிலும் உண்மையானவர்தான்.” – இது அபூஜஹ்லின் நேர்மையான பதில்.

“முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உண்மையானவர்; நேர்மையானவர்; பொய்ச் சொல்லாதவர்; சத்தியமானவர் என்றெல்லாம் நன்றாகத் தெரிந்த நீங்கள் இவரைப் பின்பற்றாமல் எதற்காகப் புறக்கணிக்கிறீர்கள்?”  என்று மிஸ்வர் இப்னு மக்ரமா கேட்டார்.
“எங்கள் குடும்பத்திற்கும், பனூஹாஷிம் குடும்பத்திற்கும் பகை இருக்கிறது. அவர்கள் ஒரு நல்ல காரியம் செய்தால் அதையே நாங்களும் செய்வோம். அவர்களைவிட நாங்கள் குறைந்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க நாங்கள் தவறுவதில்லை.இவ்வாறே விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்த நாங்கள் சிறுக்கும் வகையில் அவர்களிலிருந்து முஹம்மது இறைத்தூதராக வந்துவிட்டார். அவர் பெற்ற நுபுவத்தால் அவர்கள் உயர்ந்து விட்டார்கள். நாங்கள் தாழ்ந்து விட்டோம்.”  இவ்வாறு தன் ஈகோ இதயத்தைத் திறந்து காட்டினான் அபூஜஹல்.

“முன்னோர், பின்னோர் யாவரிலும் நானே சிறந்தவன். இதைப் பெருமைக்காகச் சொல்லவில்லை (நீங்கள் தெரிந்து கொள்வதற்காகவே சொல்கிறேன்) என்று எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.”  (நூல்- தாரமி)

இறைவனும், “உமது கீர்த்தியை உமக்காகவே உயர்த்தினோம்” என்று அவர்களின் மேலான மதிப்பை உலகக் கண்களுக்கு உயர்த்திக் காட்டினான்.  தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தனித்தகுதி கண்டு பொறுக்காமல் தாழ்வுணர்ச்சிக்குள் விழுந்து மீளாத அபூஜஹ்லின் பொறாமையே, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எதிர்ப்பதற்குரிய காரணியாய் அவனுக்கு அமைந்தது.

உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பொய்யர் என்று ஒருபோதும் கருதாத அபூஜஹ்லிடம் அகங்காரமும், பொறாமையும் இல்லாது இருந்திருந்தால் அவனிடம் இருந்த ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ என்பதுடன் ‘முஹம்மது ரசூலுல்லாஹ்’ வையும் சேர்த்து அவன் ஈமான் கொண்டிருப்பான். ஆனால், அவனது துர்பாக்கிய எண்ணமே அவனை அழித்தது. (“…. நிச்சயமாக அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை; ஆனால், இவ்வக்கிரமக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையே (பொய்யாக்கி) நிராகரிக்கின்றனர்.”  (குர்ஆன்-6:33)  (குரோதக் கொடியவர்களான அபூஜஹ்ல், அபூலஹப் முதலான மக்கத்துக்        குஃப்பார்கள் மட்டுமா மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது பொறாமை கொண்டனர்? அவர்கள் மீது பொறாமை கொண்டவர்களின் சிறுமை வரிசை இன்றுமல்லவா தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மிர்சா குலாம் என்பவனால் உருவாக்கப்பட்ட காதியானி மதமும், இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவனால் உருவாக்கப்பட்ட வஹ்ஹாபிச மதமும் அத்தகைய பொறாமை என்னும் விஷவிதைகளிலிருந்து வெளிப்பட்டவைதாமே! வஹ்ஹாபிசக் கொள்கைகளைப் பின்பற்றக் கூடியவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது பொறாமை கொண்டவர்களே!

சூரியன் மீது சிம்னி விளக்குப் பொறாமை கொண்டால்; பெருங்கடல் பார்த்து குவளைக் கழிநீர் காழ்ப்படைந்தால் அவை நகைப்புக்கு உரியதுதானே!

ஆதம் நபியின் மீது கொண்ட பொறாமையால் இப்லீஸும், இறைவனின் மீதே பொறாமை கொண்டதால் பிர்அவ்னும், நபிகளாரின் மீது பொறாமை கொண்டால் அபூஜஹ்லும், இவர்களின் கூட்டத்தாரும் நாசமானதைப் போல் இன்றுள்ள பொறாமைக் காரர்களும் நாசமாகப் போவார்கள். அதன் அடையாளமாகத்தான் அத்தகைய அழுக்குக் கண்களில் கோமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாதாரணமாகத் தெரிகிறார்கள்.

நபியவர்களும் நம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதர்தான் என்று சொல்வதன் மூலம் தன்னையும், ஒரு தலைவனாகக் காட்டிக் கொள்ள நினைப்பவனையும் அவனது அடிவருடிக்கி டப்பவர்களையும் சிதறு தேங்காயைப் போல அல்லாஹ் ஆக்கிவிடுவான்.

வெட்டப்பட வேண்டிய வஹ்ஹாபிச விஷமரத்தில் விபரீதக் கிளைகளும் முளைக்கின்றன. அவை ஒவ்வொன்றும் பைத்தியக் காரனின் சிக்குப் பிடித்தச் சிகையைப் போல் அருவருப்பூட்டுகின்றன. அத்தகைய அயோக்கியக் கும்பலில் ஒன்று சொல்கிறது குர்ஆன் மட்டும் போதும். அதிலும் சூரத்துத் தவ்பாவில் 128, 129 வசனங்கள் நீக்கப்பட்ட குர்ஆன். அடக் கோமாளிகளே! பிடுங்கி எறியப்பட வேண்டிய புல்லுருவிகளே! அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உயர்வையும், சிறப்பையும் இரண்டு வசனங்களில் மட்டுந்தானா இறைவன் சொல்கிறான்?குர்ஆனின் வசனங்களையே நீக்கிப் பார்க்கும் மூடத்துணிச்சல் இறைவனையே எதிர்க்கும் இப்லீஸின் அடாத செயலல்லவா! அந்த அளவுக்குத் துணிந்து விட்டவனைக் குர்ஆனுக்குச் சொந்தக்காரன் சும்மா விட்டுவிடுவானா? குர்ஆன் மட்டும் போதும். குர்ஆனைத் தந்த ரசூலுல்லாஹ்வும், அவர்களின் அறநெறிகளும் தேவையில்லை என்று சொல்லும் விஷக்காளான்களுக்கு இறைவன் சொல்கிறான்.

“எவன் (அல்லாஹ்வுடைய) தூதருக்கு (முற்றிலும்) வழிப்ப(ட்)டு (நடக்)கின்றானோ அவன், நிச்சயமாக அல்லாஹ்வுக்கே வழிப்பட்டான். ஆகவே, (நபியே! உம்மை) எவனும் புறக்கணித்தால் (அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம்) அவர்களைக் கண்காணிப்பவராக உம்மை நாம் அனுப்பவில்லை.” (குர்ஆன்-4:80)  ‘தனது தூதருக்கு வழிப்படுவது தனக்கு வழிப்படுவதாகும்’ என்ற அல்லாஹ்வின் வார்த்தை சாதாரணமானதல்ல.  தன்னுடைய இடத்தில் தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வைத்துக் காட்டி அவர்களின் மாபெரும் மகத்தான தகுதியை இறைவன் வெளிச்சப்படுத்தி இருக்கிறான்.

மேலும், தங்களின் தனித்தகுதிகள் உணராதவர்களைக் கண்காணித்துத் தண்டிக்கும் பொறுப்பு தன்னிடமே இருக்கிறது. அதிலிருந்தும் அவர்கள் தப்பிவிட முடியாது என்றும் பகிரங்கமாக எச்சரிக்கிறான். அண்ணலார் மீதான இப்படிப்பட்டவர்களின் பொறாமை, அபூஜஹ்லின் பொறாமையைவிட சற்றும் குறைந்ததில்லை என்பதற்கான சாட்சிகளாக ‘ஹதீஸ் முழுவதையும் முற்றாக மறுப்பதும், தொழுகையின் அத்தஹியாத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலாமும், ஸலவாத்தும் ஓதக்கூடாது’ என்பது போன்ற உளறல்கள் இத்தகைய கேடுகெட்டவர்களின் இருட்டு மனத்தின் குருட்டு முகங்களாகின்றன.

“அத்தஹியாத்தில் என்மீது ஸலாமும், ஸலவாத்தும் ஓதாத வரையில் தொழுகை நிறைவேறாது” என்பது எம்பெருமானார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுரையாகும்.                                                                                                                                                                        (பைஹகீ, பத்ஹுல் பாரி)

கூடாத தொழுகை கூடுமென்றும், குர்ஆன் மட்டும் போதுமென்றும் பேசுவது கிறுக்கன்களின் பிதற்றல்கள் அல்லவா! பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புறக்கணிக்கும் பொறாமைப் பெரும்பிணிப் பீடித்தப் பைத்தியக்காரர்கள், தாஹா நபியவர்களால் தரப்பட்ட குர்ஆனை மட்டும் எப்படி ஏற்றுக் கொண்டார்கள்? இவர்களின் வீட்டுக்கு வந்து குர்ஆனை எழுதி இவர்களிடம் கொடுத்தானா இறைவன்? மேலும்ää ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ என்பது மட்டும் கலிமாவாகப் போதும். ‘முஹம்மது ரசூலுல்லாஹ்’ தேவையில்லை என்று சொல்லும் இவர்கள் யார் என்பது புரிந்து விட்டதா? பெருமானார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது பொறாமையும்ää காழ்ப்பும்ää வன்மமும் கொண்ட இத்தகைய அயோக்கியர்களை; அறிவீனக் கொடியவர்களை முஸ்லிம்கள் என்று நினைப்பதுகூட பாபமாகும்.

‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ என்பது மட்டும் கலிமா ஆகாது. ஆனால், ‘முஹம்மது ரசூலுல்லாஹ்’ என்பதற்குள் ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ இருக்கிறது என்ற நல்லறிவே மனிதனை முஃமீனாகத் தகுதி உயர்த்தும். ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ என்ற மைனசுடன் ‘முஹம்மது ரசூலுல்லாஹ்’ என்ற பிளஸ் சேர்ந்தால்தான் கலிமா முழுமை பெறும் என்றுணரும் ஞானம் மனித மரியாதையை மலையளவாய்க் காட்டும். இந்த சத்தியம் உணரப்படாததால்தான் உத்தம நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களைச் சாதாரணமாகக் கருதும் கயமை குணம் நீள்கிறது.

வேந்தர் நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் விரோதிகளான அபூஜஹ்ல்கள் அன்று மட்டுமா இருந்தார்கள்? இன்றுமல்லவா இருக்கிறார்கள்? நரகம் செல்வதற்கான வாகனங்களைத் தங்கள் பொறாமையால் உருவாக்கிக் கொள்ளும் இத்தகைய இழிந்தவர்களுடன் இணைந்து கொள்ளும் மனம் கிழிந்தவர்களும் வன்நரகம் சேருவார்கள். கரையேற்றும் கருணையை (ஷஃபாஅத்தை)ப் பெற முடியாமல் காலங்காலமாக அதிலேயே கிடந்துக் கதறுவார்கள்.

ஆக்கம் –  கவிஞானி, G.S.T. மஹ்பூபு சுப்ஹானி