முத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாஜகவை விளாசிய அதிமுக எம்.பி- வீடியோ

டெல்லி: முத்தலாக் கூறுவதை கிரிமினல் குற்றமாக அறிவிக்கும் சட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சி எம்.பி. அன்வர் ராஜா, மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து லோக்சபாவில் பேசினார். முத்தலாக் மசோதாவை மத்திய அரசு லோக்சபாவில் இன்று அறிமுகம் செய்தது. இதன் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். லோக்சபாவில் அதிமுக எம்.பி. அன்வர் ராஜா பேசுகையில், பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.