கோ மோடி கோ!

ஆக்சிஜன் இருந்தால் தான்

எதுவும் எரியும் என்கிறது அறிவியல்.

ஆக்சிஜன் இல்லாததால்

பற்றி எரிகிறது இந்தியா!

 

மோடியின் ஆட்சியில்

சோற்றுக்கும் வழியில்லை

மூச்சுக்காற்றுக்கும் வழியில்லை!

 

கண்ணகிக்கு செய்த அநீதியால்

மதுரை எரிந்தது அன்று.

கபீல்கானுக்கு இழைத்த அநீதியால்

உ.பி எரிகிறது இன்று!

 

மருந்து குடித்து, மாஸ்க் அணியாமல்

கரண்டி எடுத்து கைதட்டியதால்

சுரண்டி எடுத்து

சுடுகாட்டில் தள்ளுகிறது கொராேனா!

 

ஆறுமணிக்கு விளக்கெரிக்க சொன்னார் பிரதமர்.

அணையாமல் நாள்முழுக்க

விறகு எரிகிறது சுடுகாட்டில்!

 

ஆக்சிஜனை உள்ளிழுத்து

கார்பன்டை ஆக்சைடை வெளியிட்டால் தான் உயிர் வாழமுடியும்.

 

ஆனால் கார்பனை உட்காெண்டு

ஆக்சிஜனை வெளியேற்றிய

 ஈவிஎம் மெஷின்களால் இன்று

தேசமே உயிருக்கு போராடுகிறது.

 

வடைநாயகனின் ஆட்சியில் மக்கள்

வங்கி வாசல்களில் செத்தார்கள்

ஏடிஎம்மில் க்யூவில் செத்தார்கள்

கெரோனாவில் செத்தபின் சாம்பலாவதற்கே சுடுகாட்டில் தவமிருக்கின்றன பிணங்கள்!

 

ஆக்சிஜன் பற்றாக்குறை

ஆம்புலன்ஸ் பற்றாக்குறை

ஆனால்

எங்க பிரதமருக்கு என்ன குறை?

ஹாயாக உட்கார்ந்து

மயிலுக்கு தீனிபோடுகிறார்!

 

கொரோனாவுடன் போரிடாமல்

மம்தாவுடன் மல்லுகட்டுகிறார்.

மக்களுக்கு மருந்து தராமல்

மன்கிபாத்தில் மைக்கை கடிக்கிறார்!

 

நோய்க்கு மருந்து தரமாட்டார்.

ஆனால் மருந்துக்கு ஜிஎஸ்டி பிடுங்குவார்

கொள்ளை நோயிலும்

கொள்ளையடிக்கும்

பிரமாதமான பிரதமர்!

 

பிணத்துக்கும் வரிபோடுவார்

அந்த பணத்தில்

தன் பயணத்துக்கு

சொகுசு விமானம் வாங்குவார்!

 

வடநாடு சுடுகாடாக எரிகிறது.

வங்கநாட்டு தேர்தலில்

பிசியாக பிரச்சாரத்தில் பிரதமர்.

 

மோடியின் ஆட்சியில்

இந்தியா ஔிர்கிறது என்றார்கள்.

ஆயிரக்கணக்கான அடுப்புகளில்

பிணங்கள் தான் ஔிமயமாக எரிகின்றன!

 

வளர்ச்சியடைந்த குஜராத்தில்

ஆட்டோமேட்டிக் ஆம்புலன்ஸ்

ஓட்டுகிறார்கள்.

தானாகவே பிணங்கள்

தரையிறங்குகின்றன.

 

மாடலிங் குஜராத்தில்

மருத்துவக்கல்லூரியே

கட்டவில்லையாம் மோடி.

மாடாய் அலைந்தும் ஆக்சிஜன் கிடைக்கவில்லை மக்களுக்கு.

 

நாடே தொழில் இல்லாமல் முடங்கிவிட்டது

பாடை தொழில் மட்டும் தான் பரவாயில்லாமல் நடக்கிறது!

 

படித்தவர்கள் வேலையில்லாமல்

வெட்டியாக இருக்கிறார்கள்.

வெட்டியான்கள் மட்டும் தான்

வேலை செய்ய முடியாமல் திணறுகிறார்கள்!

 

எரிவாயு சிலிண்டரில் கொள்ளையடித்தவர்

உயிர்வாயு சிலிண்டரை

தமிழ்நாட்டிலிருந்து திருடுகிறார்.

 

ஜிஎஸ்டியை திருப்பிக்கேட்டால்

திருக்குறள் சொல்லி ஏமாற்றுகிறார்.

எய்ம்ஸ் கட்டுகிறேன் என்ற பெயரில்

செங்கல்லை மட்டும்

தமிழன் தலையில் கட்டுகிறார்.

 

தாமரை மலராத காரணத்தால்

தமிழகம், கேரளத்தை

பகைநாடு போல் பாடாய்படுத்துகிறார்

 

அட, தாமரை மலர்ந்த,

தான் ஆண்ட குஜராத்,

ம.பி, உ.பிக்கெல்லாம் என்ன செய்தார்?

 

அம்பானி, அதானிகளுக்கு மட்டும் தான்

நாட்டையே எழுதிக்கொடுத்தார்.

 

மற்றவர்க்கெல்லாம்

மன்கிபாத் வடைகள் மட்டும் தான்

சுட்டுக்கொடுத்தார்!

 

இப்படியொரு ஈரவெங்காயம்

இந்தியாவின் பிரதமரானது

என்ன மாயம்? என்ன நியாயம்?

 

அது ஈவிஎம் செய்த அநியாயம்.

மாற்றம் வருமா இனியேனும்?

             – ஜாபிர் பாக்கவி