கனிகளை உண்போம்! பிணிகளை வெல்வோம்!!

நெல்லிக்கனி (பெரியது))
நாட்டு நெல்லி அல்லது பெரிய நெல்லிக்கனி சாறு உடல் சூட்டைத் தணிக்கும், இரத்தத்தை சுத்தம் செய்யும். செரிமானத்தை சீராக்கும். வயிற்றுப்போக்கு, வயிற்று வலி நீக்கும், நெல்லிக் கனியை தேனில் ஊற வைத்து நாள் தோறும் காலையும் மாலையும் உண்டு வந்தால் உடல் வலிமையும் இளமையும் பெறலாம். பித்த கிறுகிறுப்பு மயக்கம், பைத்தியம்,மனத்தடுமாற்றம், சோகை ஆகியன குணமாகின்றன. நெல்லிக்காயை அரைத்து தலையில் பற்றுப்போட்டு வந்தால் மனநோய் வேகங்கள் குறையும். நெல்லிக்கனி சாறு ஓர் அவுன்சில் கால் அவுன்ஸ் தேன் கலந்து நாள்தோறும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் உடல் வலுவடையும்.

அரைநெல்லி (அரு நெல்லி)
அருண் நெல்லிக்காயை அரைத்து மோரில் கலக்கி கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும் அப்பொழுது உப்பில்லாத பத்தியம் இருந்து வரவேண்டும். பித்தத்தை சமப்படுத்தும்.

நாவற் பழம்
நாவல் பழச்சாறு அருந்தி வந்தால் வெட்டைச்சூடு, நாவறட்சி, கபம், பித்த கோளாறுகள், நீர் சுருக்கு, மூலத்தில் ரத்தம் வருதல் நிற்கும்.

பப்பாளி பழம்
நல்ல மலமிளக்கி, செரிமான சக்தியை கூட்டுகிறது .நீரிழிவு ,நரம்பு தளர்ச்சி, பசியின்மை,தாய்ப்பால் குறைவு, மலச்சிக்கல் கல்லீரல் வீக்கம், இரத்த சோகை ஆகியவற்றிற்கு நல்ல குணம் தருகிறது. தோல் வியாதிக்கு நல்லது. பல் வலி உள்ளவர்கள் பப்பாளிப் பாலை பல்வலி உள்ள இடத்தில் தேய்த்தால் குணமாகும். புரதச்சத்து மிகுந்தது.

பலாப்பழம்
நாள்தோறும் 10 பலாச்சுளைகளை தேனில் ஊறவைத்து உண்டு தேங்காய்ப்பாலும் பருகி வந்தால் தாது விருத்தியாகும்.

பேரீச்சம்பழம்
இரத்த விருத்தியை ஏற்படுத்துகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. உடலுக்கு வலிமை, அழகு,தாது விருத்தி தருகிறது. இருமல் கபம்(சளி) நீக்குகிறது. தாது விருத்தியாக பேரீச்சம்பழத்தை தேனில் ஊறவைத்து நாள்தோறும் சில துண்டுகள் உண்டு தேங்காய் பாலும் பருகி வரலாம்.

மாம்பழம்
மலச்சிக்கல்,செரியாமையை அகற்றுகிறது. மாம்பழம் சாப்பிட்டு தேங்காய் பாலும் பருகி வந்தால் தாது விருத்தியாகும். மாம்பழச் சாறு அருந்தி வந்தால் தீராத தலைவலி குணமாகும், ரத்தம் விருத்தியாகும்.

மணத்தக்காளி
வாய்ப்புண், வயிற்று நோய்,கபக் கோளாறுகள் நீக்குகிறது

மாதுளம் பழம்
காசம், சீதபேதி, சிறுநீரக கோளாறுகளைப் போக்குகிறது. சுக்கிலத்தை பெருகுகிறது.ரத்தத்தை தூய்மைப் படுத்துகிறது.

வாழை
வாழைப்பூ வயிற்றுப்புண்களை ஆற்றும். வாழைத்தண்டுச் சாறு சிறுநீரக கல் அடைப்பை போக்கும்.வாழைப்பட்டை சாறு பாம்பின் நஞ்சை முறிக்கும்.

விளாம்பழம்
இருமல், ஈழை, அரோசகம், தாகம், பித்தம் தணிக்கிறது.

வில்வப்பழம்
உடலுக்கு சுறுசுறுப்பும் சக்தியும் தரும், பேதியை கட்டுப்படுத்தும், தசை வளர்ச்சிக்கு உதவும், வாத பித்த நோய்களை போக்கும், பசியை உண்டாக்கும்.

அத்திப்பழம்
நாள்தோறும் இரவில் படுக்கச் செல்லும்முன் அத்திப்பூ லேகியம் உண்டு, தேங்காய் பாலும் குடித்து வந்தால் தாது விருத்தியும் போக சக்தியும் உண்டாகும். சிறுநீரக கற்களை அகற்றும் மலச்சிக்கலை நீக்கும் உடலுக்கு சக்தியைக் கொடுக்கும்.

அன்னாசி பழம்
மஞ்சள் காமாலை குணமாகும்.இரத்தம் சுத்தியாகும். இதயம் வலுப்பெறும். வயிற்றுவலி வாத, குன்மம், வாந்தி, தாகம், நீடித்த உடற்சூடு, வெள்ளை, வெட்டை, தலைவலி,மேகம் ஆகியன குணமாகும்

ஆலம்பழம்
ஆலம் பழம், பேரீச்சம்பழம், ஆப்பிள் பழம் இம்மூன்றையும் சம எடை எடுத்து கலந்து தம்பதி இருவரும் காலை மாலை இருவேளையும் ஒரு தேக்கரண்டி உண்டு, தேங்காய் பாலும் அருந்தி வந்தால் போக சுகம் பெருகும், குழந்தைப் பேறும் கிட்டும்.

ஆப்பிள் பழம்
நாள்தோறும் ஒரு ஆப்பிள் தின்றால் பற்கள் வலுவடையும், பல் ஈறுகளில் வலி, புண், ரத்தம் வருதல் நீங்கும். மூளைக் கோளாறுகள் நீங்கும். வாத நோயை அகற்றும். நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை,தூக்கத்தில் வாய் புலம்பல்,தூக்கத்தில் எழுந்து நடத்தல் போன்ற நரம்புக் கோளாறுகளுக்கு ஆப்பிள் பழச் சாறு நல்ல மருந்தாக அமையும். பேதியாகும் குழந்தைகளுக்கு ஆப்பிள் பழக்கூழ் கொடுக்கலாம். குடல் கிருமிகளை கொல்லும்.

ஆரஞ்சு பழம்
செரிமான சக்தியை அதிகப்படுத்தும். கல்லீரலை வலுப்படுத்தும். காமாலை நோய் நீங்கும். ஆரஞ்சு பழச் சாற்றுடன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் சூடு தணியும், இருமல் குணமாகும்.

சப்போட்டா பழம்
உடற் சூடு தணிகிறது,தூக்கமின்மை பலவீனம் ஆகியவற்றிற்கு நாள்தோறும் 10 சப்போட்டா பழங்கள் உண்டு தேங்காய் பால் பருகி வந்தால் குணம் கிடைக்கும்.

சீதாப்பழம்
இதயம் வலுவடையும்,இதன் இலைச்சாற்றை மூக்கில் நசியமிட மூர்ச்சை தெளியும், ரணங்களுக்கும் அரைத்து பூசலாம், சீத்தாப்பழ விதைகளை பொடி செய்து தேங்காய் எண்ணெய் கலந்து அரப்பு போட்டு தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன் பொடுகு நீங்கும்.சீதா மர இலைச்சாற்றுக்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு. வேளாண்மை பயிர்களை நாசம் ஆக்கும் பூச்சிகளை இந்த இலைத்தூளின் மூலம் ஒழிக்கலாம். தொடர்ந்து 48 நாட்கள் சீதாப் பழம் சாப்பிட்டு வந்தால் காச நோய் குணமாகும்.

திராட்சைப்பழம்
திராட்சை பழச்சாறு சளி, இருமல், வயிற்றுக்கோளாறுகள், வறட்டு இருமல், வாய்க்கசப்பு, குமட்டல், வாந்தி, இதய நோய், நீரிழிவு நோய், கல்லடைப்பு, விரைவீக்கம்,காது நோய்கள், கண் நோய்கள், கர்ப்பப்பை கோளாறுகள், ஒற்றைத் தலைவலி, மாதவிடாய் கோளாறுகள், பித்த மயக்கம், உடற்சோர்வு ஆகிய நோய்களை போக்கும்.

கொய்யாப்பழம்
தேவைக்கு அதிகமான கொழுப்பை குறைக்கும். மூளை, இருதயத்திற்கு பலம் அளிக்கிறது. மலச்சிக்கலை நீக்கும். இதன் இலை கசாயம் தொண்டை கரகரப்பு போக்கும்.

வெள்ளரிப்பழம்
உடல் சூடு,தாகம் தணிக்கும். நீரிழிவைப் போக்கும். சிறுநீரகத்தை வலுவாக்கும்.

தக்காளிப்பழம்
மூத்திரத் தாரையில் உள்ள அடைப்புகளை நீக்குகிறது. அதில் உள்ள அமிலத்தன்மை குடலில் வாய்வு உண்டாவதை தடுக்கிறது.

வாழ்க வளமுடன் முரளீதரன் இயற்கை மருத்துவ ஆலோசகர், துணை பேராசிரியர் (உலக சமுதாய சேவா சங்கம்).

கிளை

ஆயர்பாடி இயற்கை துணை உணவுகள் வாசியோக ஆராய்ச்சி மையம் ஸ்ரீராமபுரம் திண்டுக்கல் மாவட்டம்,

தொடர்பு எண்கள்: 8778102307,9585436122,

தலைமையகம் பழனி 9965042543