எங்கே மறைந்து போன அந்த வானசாஸ்திரம்

 

நவீன கால வான இயல் அறிஞர்களான கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளால் ஹப்பிள் டெலாஸ்கோப் மூலம் 25000 ஒளிவண்டுகள் தொலைவிலுள்ள நட்சத்திரமான பிஸ்டல் என்ற நட்சத்திரத்தைக்கொண்டு பிஸ்டலிருந்து 6 விநாடிகளில் பெறலாம் என்கிறார்கள்.

அடுத்து பால்குரோதர் தலைமையிலான மிகப்பெரும் தொலைநோக்கியை சிலியின் வடக்கே அடகாமா பாலவனப் பகுதியில் வைத்த 136 – 41 என்ற புதிய பிரம்மாண்டமான நட்சத்திரத்தைக் கண்டறிந்தனர்.

அடுத்து 165 ஆயிரம் ஒளி ஆண்டு தொலைவிலுள்ள ஒரு நட்சத்திரத்தை இங்கிலாந்து ஸ்டாபோர்டு ஷயர் சீலே பல்கலைக்கழக வானியல் விஞ்ஞானி ராபேல் ஹிர்ஷி கண்டுபிடித்தார்.  இந்த நட்சத்திரம் நம் சூரியனைவிட 2695 மடங்கு பெரியதாகும்.  இந்த நட்சத்திரம் சக்தி வாய்ந்த புறஊதா கதிர்வீச்சால் பூமியை முற்றிலும் நனைக்கக்கூடிய திறன் வாய்ந்தது என இவ்விஞ்ஞானி கூறுகிறார்.

…இந்த மாதிரியான நட்சத்திரத்தின் வான இயல்தான் நம்மிடம் உள்ளது.  ஆனால் ஆதிகால நட்சத்திரத்தின் வானசாஸ்திரம் மாதிரி இந்த இடத்தில் இன்ன நட்சத்திரம் உருவாகும்போது இன்ன தன்மை கொண்டவர்கள் பிறக்கிறார்கள் என்கிற அந்த வானசாஸ்திரம் எங்கே மறைந்துள்ளது…? தேடுவோர் கிடைக்கும்… அடுத்துள்ள தகவல் நிதானமாக படியுங்கள்…

நபி (ஸல்) அவர்கள் மகள் பாத்திமா (ரளி) அவர்களின் வீடடில் இருக்கையில் வானவர் ஜிபரயீல் (அலை) அவர்கள் வருகை தருகிறார்கள்.  உடனே பாத்திமா (ரளி) அவர் ஜிப்ரயில் (அலை) அவர்களைப் பார்த்து, வாருங்கள் சிறிய தந்தையாரே! அஸ்ஸலாமு அலைக்கும் என்கிறார். ஜிப்ரயீல் (அலை) பதில்சலாம் சொல்லாமல் தன்னைப் பார்த்து சிறிய தந்தையார் என்று பாத்திமா (ரளி) சொன்னது குறித்து யோசிக்கையில்,  நபி (ஸல்) அவர்கள் வருகிறார்கள். என்ன விஷயம் என வினவுகிறார்கள். உடனே ஜிப்ரயீல் (அலை) அவர்கள் விவரம் சொல்கிறார்கள்.

அதுகேட்டு நபி (ஸல்) அவர்கள்,  ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம்,  ஜிப்ரயீலே நீர் எனக்கு வயதால் மூத்தவர் என்பதற்கு என்ன அதிசயத்தை தெரிந்திருக்கிறீர்…?  என்று கேட்கிறார்கள்.  அதற்கு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வடபுறத்தில் ஒரு நட்சத்திரம் உதயமாகி 70000 வருஷம் மறையாமலிருந்து,  பின்னர் 70000 தடவை கண்டு இருக்கிறேன் என்று  சொன்னார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் தங்கள் தலைப்பாகையைக் கழற்றி கையில் எடுத்துக் கொண்டு இருக்கிறது.  உடனே ஜிப்ரயீல் (அலை) ஆனந்த ஆவேசமாக நபி (ஸல்) அவர்களை கட்டிஅணைத்து முத்தமிட்டு தாஜூல் அன்பியா முஹம்மது (ஸல்) என்கிறார்கள்.

பிறகு ஜிப்ரயீல் (அலை) நபி (ஸல்) அவர்களிடம்,  இந்த நட்சத்திரத்தில் 3 அடையாளம் இருந்தது என்றும் ஒன்று அந்த நட்சத்திரத்தின் தலையில் தாஜென்னும் தொப்பியும்,  இரண்டு காதில் இரண்டு முத்துக் கவசக் குண்டலமும்,  கழுத்தில் இரத்தின பதிக்கமும் இருந்தது என்று சொன்னார்கள்.  உடனே நபி (ஸல்) தலையிலிருந்து தாஜூ என்பது அலி (ரளி) காதில் இருந்த இரத்தன பதக்கம் பீபி பாத்திமா (ரளி) என்று நபி (ஸல்) சொன்னார்கள்.  அதுகேட்டு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நாயகத்தை மிகவும் கண்ணியப்படுத்துகிறார்கள்.

…இப்போது நீங்கள் சொல்லுங்கள், அந்த மறைந்துபோன நட்சத்திரத்தின் வானசாஸ்திரம் யாரிடம் உள்ளது…?  புரிய முடிகிறதா…?

என் சஹாபா பெருமக்கள் நட்சத்திரத்தைப் போன்றவர்கள்.   இவர்களில் நீங்கள்யாரைப் பின்தொடர்ந்தாலும் வெற்றி பெறுவீர்கள்.   நபி (ஸல்).    (ஹதிஸ்)

                                                                                                                                                                         ரஹ்மத் ராஜகுமாரன்